தேன்மொழி ராசரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vignesh.0498ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 36: வரிசை 36:


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
*[http://www.india-today.com/jain/ Interim Report of the Jain Commission of Inquiry into the Assassination of Shri Rajiv Gandhi]
*[http://www.india-today.com/jain/ Interim Report of the Jain Commission of Inquiry into the Assassination of Shri Rajiv Gandhi] {{Webarchive|url=https://web.archive.org/web/20051030163400/http://www.india-today.com/jain/ |date=2005-10-30 }}


[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]

16:48, 10 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

தேன்மொழி ராசரத்தினம்
Thenmozhi Rajaratnam
சந்தனமாலையுடன் தேன்மொழி ராசரத்தினத்தின் படிமம்
பிறப்புதேன்மொழி ராசரத்தினம்
1974 -ஆம் ஆண்டு
தமிழீழம்
இறப்புமே 21 - 1991
ஸ்ரீபெரும்புதூர்
தமிழ் நாடு
தேசியம்ஈழத்தமிழர்
மற்ற பெயர்கள்தேன்மொழி
காயத்திரி
தனு
பணிதமிழ் போராளிகள்
அறியப்படுவதுஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொலை செய்ததாக.
வாழ்க்கைத்
துணை
இல்லை
பிள்ளைகள்இல்லை

தேன்மொழி "காயத்திரி" ராசரத்தினம் (Thenmozhi "Gayatri" Rajaratnam), என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். தேன்மொழி "காயத்திரி" மற்றும் "தனு" என்ற பெயர்களாலும் இவர் அறியப்படும் இவர் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படைத்துறையினருக்கும் 26 ஆண்டு தொடர்ந்த போரில் அமைதி நிலைநாட்ட சென்றிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரால் தேன்மொழி வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது. அரசு எழுத்தரும் விடுதலை இயக்க வீரருமான ராசரத்தினத்தின் மகளான தேன்மொழி முன்னதாக இந்திய உளவுப்பிரிவினரால் நைனிதால் மற்றும் திண்டுக்கல்லில் பயிற்சி அளிக்கப்பட்டவர்[1].

ராசீவ் படுகொலை

வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தல்களுக்காக இந்திய தேசிய காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு பரப்புரை ஆற்ற வருகை தந்தார். முன்னதாக அவர் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையினரை 1987 அமைதி உடன்படிக்கையின்படி அனுப்பியிருந்தார். துவக்கத்தில் இலங்கைத் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் படையினர் பின்னாட்களில் விடுதலைப் புலிகளுடன் போராடத் துவங்கியதுடன் சூறையாடல், கற்பழிப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

தனு என்கிற தேன்மொழி தனது இடுப்பில் அணிந்திருந்த கச்சைவாரில் பின்புறம் மின்கலம் மற்றும் வெடிபொருட்களை திணித்துக் கொண்டு அதற்கான மின்விசைகளை முன்புறம் அமைத்துக் கொண்டிருந்தார். ராசீவை சந்தனமாலை கொண்டு மாலையிட்டபின் கீழே குனிந்து மின்விசைகளை இயக்கி வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இந்த குண்டுவெடிப்பில் தனு, ராசீவ் உட்படச் சுற்றியிருந்த பதினான்கு பேர்கள் கொலையுண்டனர்.

ஏழு ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பின்னர் 1998ஆம் ஆண்டில் பூந்தமல்லியிலிருந்த தடா நீதிமன்றம், 26 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. மேல் முறையீட்டில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Killing Rajiv Gandhi: Dhanu's sacrificial metamorphosis in death". tandfonline.com. 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-07-25.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்மொழி_ராசரத்தினம்&oldid=3217397" இலிருந்து மீள்விக்கப்பட்டது