"செலீனியம் மோனோகுளோரைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
928 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''செலீனியம் மோனோகுளோரைடு''' ''(Selenium monochloride)'' என்பது Se2Cl2 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. செலீனியம் மோனோகுளோரைடு என்று அழைக்கப்பட்டாலும் இதன் சரியான விளக்கப் பெயர் டைசெலீனியம் டைகுளோரைடு என்பதாகும். டைகுளோரோசெலீனைடு, டைசெலீனியம் டைகுளோரைடு, செலீனியம் குளோரைடு, 1,2-டைகுளோரோசெலேன் போன்ற பல பெயர்களால் செலீனியம் மோனோகுளோரைடு அழைக்கப்படுகிறது. செம்பழுப்பு நிறத்தில் நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் மெல்ல நீராற்பகுப்பு அடைகிறது. செலீனியம் டைகுளோரைடு, செலீனியம் டெட்ராகுளோரைடு, குளோரின் மற்றும் தனிமநிலை செலீனியம் ஆகியவற்றுடன் செலீனியம் மோனோகுளோரைடு வேதிச்சமநிலை கொண்டுள்ளது. செலீனியத்தை பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள பிற சேர்மங்களை தயாரிக்க ஒரு வினையாக்கியாக இது பயன்படுகிறது. [[குளோரோஃபார்ம்]], [[கார்பன் டைசல்பைடு]] மற்றும் அசிட்டோநைட்ரைல் போன்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைகிறது. செலீனியம் மோனோகுளோரைடுடன் எப்போதும் சிறிதளவு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட செலீனியம் டெட்ரா குளோரைடும் சேர்ந்தே இருக்கும். 2.7741 என்ற அடர்த்தி மதிப்பும் -85° பாகை செல்சியசு வெப்பநிலை உருகு நிலையும் 145 பாகை செல்சியசு வெப்பநிலையை கொதிநிலையாகவும் கொண்டதாக செலீனியம் மோனோகுளோரைடு காணப்படுகிறது. ஆவியாக்கும்போது இது பகுதியாக சிதைவடைகிறது.
 
== கட்டமைப்பு ==
 
:3 SeCl<sub>2</sub> → Se<sub>2</sub>Cl<sub>2</sub> + SeCl<sub>4</sub>.
 
== வினைகள் ==
 
செலீனியம் மோனோகுளோரைடு ஓர் எலக்ட்ரான் கவர் செலீனியமாக்கும் முகவராகும். எனவே எளிய [[ஆல்க்கீன்]]களுடன் செலீனியம் மோனோகுளோரைடு வினை புரிந்து பிசு(β-குளோரோ ஆல்க்கைல்) செலீனைடு மற்றும் பிசு(குளோரோ ஆல்க்கைல்) செலீனியம் டைகுளோரைடு போன்ற சேர்மங்களை கொடுக்கிறது. தடையுற்ற [[கீட்டோன்]]களின் ஐதரசோன்களை அவற்றுடன் தொடர்புடைய செலீனோ கீட்டோன்களாக மாற்றுகிறது. இவை கட்டமைப்பு ரிதியாக கீட்டோன்களின் அமைப்பை ஒத்திருக்கின்றன. இங்கு ஆக்சிசன் அணு செலீனியம் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது <ref name=Back/>. இறுதியாக, சில இரும்பு மற்றும் குரோமியம் கார்பனைல் அணைவுச் சேர்மங்களின் உலோக அணுக்களுக்கு இடையில் செலீனியம் ஈந்தணைவிகளை அறிமுகப்படுத்த இந்த சேர்மம் பயன்படுத்தப்படுகிறது <ref name=Back>{{cite encyclopedia|authors=Back, Thomas G.; Moussa, Ziad|chapter=Diselenium Dichloride|title=Encyclopedia of Reagents for Organic Synthesis|year=2003 |doi=10.1002/047084289X.rn00201|isbn=0471936235}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2874424" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி