உள்ளடக்கத்துக்குச் செல்

சிரக்கூசா, சிசிலி

ஆள்கூறுகள்: 37°04′09″N 15°17′15″E / 37.06917°N 15.28750°E / 37.06917; 15.28750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரக்கூசா
Comune di Siracusa
ஒர்டிஜியா தீவு, பண்டைக் கிரேக்க காலத்தில் சைராகஸ் நிறுவப்பட்டது.
ஒர்டிஜியா தீவு, பண்டைக் கிரேக்க காலத்தில் சைராகஸ் நிறுவப்பட்டது.
நாடுஇத்தாலி
மண்டலம்சிசிலி
மாகாணம்சிரக்கூசா
பரப்பளவு
 • மொத்தம்207.78 km2 (80.22 sq mi)
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை
 (31 திசம்பர் 2017)
 • மொத்தம்1,21,605[2]
இனங்கள்Syracusan,[3] Syracusian[4] (en)
Siracusano (it)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
96100
Dialing code0931
பாதுகாவல் புனிதர்சிரக்காசு நகரின் லூசியா
புனிதர் நாள்13 திசம்பர்
இணையதளம்comune.siracusa.it

சிரக்கூசா (Syracuse, (/ˈsɪrəkjuːs, -kjuːz/ SIRR-ə-kewss-,_--kewz; இத்தாலியம்: Siracusa [siraˈkuːza]  ( கேட்க)) என்பது இத்தாலிய தீவான சிசிலியில் உள்ள ஒரு வரலாற்று நகரமாகும். இது இத்தாலிய மாகாணமான சைராகுசின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் இதன் செழுமையான கிரேக்க மற்றும் ரோமானிய வரலாறு, பண்பாடு, சுற்றுமாளிகையரங்கம், கட்டிடக்கலை ஆகியவற்றுக்கும், சிறந்த கணிதவியலாளரும், பொறியியலாளரான ஆர்க்கிமிடீஸ் பிறந்தத்தாகவும் சிறப்பாக அறியப்படுகிறது.[5] 2,700 ஆண்டுகள் பழமையான இந்த நகரம் பண்டைய காலங்களில் நடுநிலக் கடல் உலகின் முக்கிய சக்திகளில் ஒன்றாக இருந்து பங்கு வகித்தது. சைராகுஸ் சிசிலி தீவின் தென்கிழக்கு மூலையில், அயோனியன் கடலுக்கு அருகில் சைராகுஸ் வளைகுடாவிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இது 2,000 மீட்டர் (6,600 அடி) உயரம் கொண்ட நிலப்பரப்பின் கடுமையான எழுச்சியில் அமைந்துள்ளது, ஆனால் நகரமோ பொதுவாக ஒப்பிடுகையில் மலைப்பாங்கானதாக இல்லை.

இந்த நகரம் பண்டைய கிரேக்க கொரிந்தியர்கள் மற்றும் தெனியன்ர்கள் ஆகியோரால் நிறுவப்பட்டது. மேலும் மிகவும் சக்திவாய்ந்த நகர அரசாக மாறியது. சைராகுஸ் ஸ்பார்டா மற்றும் கொரிந்துடன் தொடர்புடையதாக இருந்து மாக்னா கிரேசியா முழுவதுமாக செல்வாக்கு செலுத்தியது. அதில் அது மிக முக்கியமான நகரமாக இருந்தது. இந்த நகரை சிசெரோ "மிகப்பெரிய கிரேக்க நகரம், அனைத்திலும் மிக அழகானது" என்று வர்ணித்தார். இது கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்சுக்கு இணையாக இருந்தது. இது பின்னர் உரோமைக் குடியரசு மற்றும் பைசாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்சின் கீழ், இது பைசாந்தியப் பேரரசின் (663-669) தலைநகராக செயல்பட்டது. பின்னர் பலெர்மோ சிசிலி இராச்சியத்தின் தலைநகராக முக்கிய இடத்தைப் பிடித்தது. இறுதியில், நேபிள்ஸ் இராச்சியத்துடன் இந்த ராஜ்யம் ஒன்றிணைக்கப்பட்டு 1860 இல் இத்தாலிய ஐக்கியத்தின்போது இத்தாலியின் ஒரு பகுதியாக ஆனது.

நவீன நாளில், இந்த நகரம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக பாண்டலிகாவின் நெக்ரோபோலிசுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. மத்திய பகுதியில், நகரத்தில் சுமார் 125,000 மக்கள் வசிக்கின்றனர். விவிலியத்தில் திருத்தூதர் பணிகள் புத்தகத்தில் 28:12 இல் பவுல் தங்கியிருந்ததைப் பற்றி சைராகஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரத்தின் காப்பாளர் புனிதர் லூசி ; இவர் சைராகுசில் பிறந்தார். இவரது திருவிழா நாளான, செயிண்ட் லூசி தினம், திசம்பர் 13 அன்று கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 'City' population (i.e. that of the comune or municipality) from demographic balance: January–April 2009 [தொடர்பிழந்த இணைப்பு], ISTAT.
  2. "Statistiche demografiche ISTAT". demo.istat.it. Archived from the original on 16 December 2018. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017.
  3. "Syracusan, adj. and n.", Oxford English Dictionary, Oxford: Oxford University Press, 1919
  4. "† Syracusian, adj. and n.", Oxford English Dictionary, Oxford: Oxford University Press, 1919
  5. "BBC – History – Archimedes".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரக்கூசா,_சிசிலி&oldid=3725965" இலிருந்து மீள்விக்கப்பட்டது