சின்ன மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Eumetazoa
சின்ன மரங்கொத்தி
Dendrocopos nanus.jpg
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Piciformes
குடும்பம்: Picidae
பேரினம்: Yungipicus
இனம்: Y. nanus
இருசொற் பெயரீடு
Yungipicus nanus
(Vigors, 1832)
வேறு பெயர்கள்

Picoides nanus
Dendrocopos nanus


சின்ன மரங்கொத்தி (Brown-capped pygmy woodpecker)இது மரங்கொத்திகளில் மிகச்சிறிய வகையாகும்,இது இந்தியா இலங்கை நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

பெயர்கள்[தொகு]

தமிழில் :சின்ன மரங்கொத்தி

ஆங்கிலப்பெயர் :Brown – Capped Pygmy Woodpecker

அறிவியல் பெயர் :Yungipicus nanus [2]

உடலமைப்பு[தொகு]

13 செ.மீ. - பழுப்பு நிற உடலில் வெளிர் பட்டைகளைக் கொண்டது. உடலின் கீழ்ப்பகுதி பழுப்புத் தோய்ந்த வெளிர் நிறத்தில் கருப்புக் கோடுகளைக் கொண்டது.

Picture taken in Haldwani, Uttarakhand, India
சின்ன மரங்கொத்தி இடம்- உத்ராகாண்ட்

காணப்படும் பகுதிகள் ,உணவு[தொகு]

கிழக்குக் கடற்கரை சார்ந்த வட்டாரங்கள் நீங்கலாகத் தமிழகம் எங்கும் இலையுதிர் காடுகள், மூங்கில் காடுகள், விளைநிலங்களை அடுத்த தோப்புகள் ஆகியவற்றில் காணலாம். இணையாகத் தரையோடு தாழ்ந்த மரங்களின் கிளைகளில் பசையெடுப்பானோ என்று நினைக்கும் படியாக ஊர்ந்து புழுப்பூச்சிகளைப் பிடிக்கும். மற்ற மரங்கொத்திகளைப் போல பெரிய மரங்களின் அடிமரங்களைச் சார்ந்து இரை தேடும் பழக்கம் இதனிடம் இல்லை. தேன்சிட்டுப் போல இலைக் கொத்துகளிடையே தாவிப் பறக்கும் காலை நேரத்தில் இலைகளற்ற மரக்கொம்பில் அமர்ந்து வெயில் காயும் பழக்கம் உடையது. புழு பூச்சிகள் எறும்பு ஆகியவற்றோடு தேனீ, அந்துப்பூச்சி ஆகியவற்றையும் உணவாகக் கொள்ளும். பழங்கள், மலர்கள், மலர்த்தேன் ஆகியவற்றையும் விரும்பி உண்ணும். [3]

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் ஜுலை முடிய வெட்ட வெளியாயுள்ள காடுகள்,பட்டுப்போன சிறு மரக்கொம்புகளில் வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Picoides nanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "Brown-capped_pygmy_woodpecker.". பார்த்த நாள் 16 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:95
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_மரங்கொத்தி&oldid=2584064" இருந்து மீள்விக்கப்பட்டது