சித்தூர் கிருஷ்ணசுவாமி கோயில்
சித்தூர் கிருஷ்ணசுவாமி கோயில், இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி நகரில் தெற்கு சித்தூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் கிருஷ்ணர் ஆவார். இக்கோயில் கொச்சி தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள ஒரு பெரிய கோயிலாகும். பல நூற்றாண்டுகளாக சேரநெல்லூர் ஸ்வரூப கர்த்தா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இக்கோயில் பின்னர் கொச்சி அரச குடும்பத்தைச் சேர்ந்த ராமவர்மா மகாராஜாவால் நிர்வகிக்கப்பட்ட்டது. கேரள கோயில் கட்டடக்கலைக்கு இது ஒரு சிறந்த உதாரணமான கோயில் ஆகும்.
கருவறை சதுர வடிவில்செப்புத் தகடுகளால் வேயப்பட்ட கூரையுடன் உள்ளது. குருவாயூரில் உள்ள சிலையைப் போலவே இங்குள்ள கிருஷ்ணர் சிலை கிழக்கு நோக்கி நான்கு கைகளுடன் பஞ்சஜன்யம் எனப்படும் சங்கு, தாமரை, கதாயுதம் ஆகியவற்றுடன் உள்ளது. உள் கருவறையின் வலது புறத்தில் சிவன், விநாயகப் பெருமான் ஆகியோருக்கான சிறிய சன்னதிகள் உள்ளன. கருவறையின் வெளிப்புறத்தில் அய்யப்பன், நாகம், பிரம்மராட்சஸ், பகவதி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன.அனுமான் சன்னதி வளாகத்தின் மேற்கு நுழைவாயிலுக்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. அக்னிஹோத்ர தீர்த்தம் என்று அழைக்கப்படும் கோயில் குளம் வளாகத்தின் வடக்கில் உள்ளது. ஒரு பெரிய பாம்பின் தலையில் கிருஷ்ணர் நின்ற நிலையில் உள்ளார். இது புராணக்கதையின் அடிப்படையில் உள்ளது.
வரலாறு
[தொகு]இக்கோயிலின் வரலாறு 13ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. இது உள்ளூர் ஆளும் குடும்பத்தின் தலைவரான சேரநெல்லூர் ஸ்வரூபத்தைச் சேர்ந்த சேரநெல்லூர் கர்த்தாஸ் என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கர்த்தா என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டனர். ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தின் இளம் உறுப்பினரான நாராயணன் கர்த்தா (இன்னொரு கூற்றின்படி இவர் ராமன் கர்த்தா என்றழைக்கப்படுகிறார்.), கிருஷ்ணரின் தீவிர பக்தரானார். குருவாயூருக்குச் சென்று அங்குள்ள புகழ்பெற்ற கோயிலுக்கு அருகில் தங்கியிருந்தார். வாரிசு நிலையில் அவர் குடும்பத்தலைவரான பிறகு இது தலைமைப்பொறுப்பையும் ஆட்சிப்பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. குடும்பம் மற்றும் குடிமக்களுக்கான பொறுப்பு ஆகியவற்றுக்கு இடையே அகப்ப்டட அவர் கிருஷ்ணர் மீதான அவரது பக்தி அன்பு காரணமாக கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்தார். அவர் கனவில் ஒரு தோன்றிய இறைவன் தன்னுடன் வரும்படியும்அவர் குடையை கீழே வைக்கும் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டும்படியும் கூறினார். அந்த வகையில் தனது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் குடையை கீழே வைத்த நிலையில் அவ்விடத்தில் ஒரு கோயிலைக் கட்டினார. இது குருவாயூர் கோயிலின் மாதிரியைப் போல இருந்தது. மூலவரை நிறுவ, குருவாயூர் தலைமை அர்ச்சகர் அழைத்து வரப்பட்டு, சிலை நிறுவப்பட்டது. [1] குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் கோயிலில் ஈடுபாடு காட்டினர், தொடர்ந்து கோயிலைக் கட்டி மேம்படுத்தினர்.பின்னர், கொச்சி அரச குடும்பம் முக்கியத்துவம் பெற்ற நிலையில் பொறுப்பு அவர்களிடம் சென்றது. ராஜ்யம் இந்திய யூனியனுடன் இணைந்ததும், கோவிலின் நிர்வாகம் கொச்சி தேவசம் போர்டுக்கு மாற்றப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில், கொச்சி நகரின் வடமேற்குப் பகுதியில் 6 கிமீ தொலைவில், தென்னந்தோப்புகளால் சூழப்பட்ட நிலப்பரப்பில் கொச்சியின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் எர்ணாகுளம் டவுன் ரயில் நிலையம் ஆகும். சாலை வழி என்ற வகையில் சித்தூர் சாலை வழியாக கோயிலைச் சென்றடையலாம். ரயில் மற்றும் சாலையால் இக்கோயில் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chittoor Temple History". Chittoor Temple. பார்க்கப்பட்ட நாள் 2010-11-29.