சித்தரகம்
சித்தரகம் Plumbago zeylanica | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. zeylanica
|
இருசொற் பெயரீடு | |
Plumbago zeylanica L | |
வேறு பெயர்கள் | |
Plumbago scandens[1] |
சித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica)[2] என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டது. தென்கிழக்கு ஆசியா, மற்றும் மலேசியா பகுதியில் செழித்து வளரக்கூடிய இந்த மூலிகைத் தாவரம், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பீகார், மேற்கு வங்காளம், மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படும் மருத்துவத் தாவரமாகும்.[3]
வளரியல்பு
[தொகு]சித்தரகத்தின் இலைகள், இலைக்காம்புள்ளமை அல்லது ஒட்டிவாழ் தன்மையும், மற்றும் முட்டை வடிவம் கொண்ட, மற்றும் நீளம் 5-9 × 2.5-4 செ.மீ. அளவில் கத்திகள் தலைகீழ் ஈட்டி வடிவானது. தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத் தாவரமான இது 5 மீ உயரம் வரை வளரக்கூடியது. மஞ்சரி, காம்பு தூவிகளால் அல்லது சுரப்பிகளால் மூடியவாறு அமைந்துள்ள இத்தாவரத்தின் கனிகள், நீள் வடிவம் கூர்நுனி கொண்டவையாக உள்ளது.[4]
மருத்துவப் பயன்கள்
[தொகு]சித்தரகத்தின் வேர், வேர்ப்பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை, கசப்புத் தன்மையைக் கொண்ட இதன் வேர், வியர்வைத் தூண்டியாகச் செயற்பட்டு சொறி, தேமற் படை ஆகியவற்றின் மீது களிம்பாகப் பூசப்படுகிறது. இலை மற்றும் வேர் வயிற்றுப் போக்கு போன்ற ஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும். உடல் எடைகுறைப்பதற்கு உதவும் வேர் கசாயம் தலை வழுக்கையினைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது.[3]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Genus: Marsilea L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-10-05. Archived from the original on 2012-10-07. Retrieved 2010-07-13.
- ↑ "Plumbago zeylanica L." npgsweb.ars-grin.gov (ஆங்கிலம்). 2016. Retrieved 2016-09-21.
- ↑ 3.0 3.1 "சித்தரகம்". www.tamilvu.org (தமிழ்). 2016. Retrieved 2016-09-21.
- ↑ "Marsilea Linnaeus, Sp. Pl. 2: 1099. 1753; Gen. Pl. ed. 5, 485, 1754". Flora of North America. eFloras.org. Retrieved 2013-04-14.
புற இணைப்புகள்
[தொகு]- தோல் நோய்களை குணப்படுத்தும் சித்தரகம் பரணிடப்பட்டது 2016-04-25 at the வந்தவழி இயந்திரம்