சிதம்பரநாத சூரப்ப சோழனார்
சிதம்பரநாத சூரப்ப சோழனார் (Chidambaranatha Soorappa Chozhanar, இறப்பு 2013) என்பவர் பிச்சாவரத்தின் கடைசி ஜமீன்தார் ஆவார். இவர் சோழ பேரரசர்களின் வழித்தோன்றலாக கருதப்படுகிறார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் சிதம்பரத்தில் வசித்த பிச்சாவரம் வன்னியர் சமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.
பாரம்பரியம்
[தொகு]நடராசர் கோயிலின் திறவுகோலை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை சோழனார் மரபினர் பாதுகாத்துவந்தனர்[2]. அந்தக் காலத்தில், கோயில் தீட்சிதர்கள் தினமும் காலையில் சமீன் குடும்பத்தினரிடமிருந்து கோயிலின் திறவுகோலை பெற்று, இரவில் அவர்களிடம் சேர்பித்துவந்தனர்[2]. சோழனார் 1978 ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் நடராசர் கோவிலில் பட்டாபிசேகம் செய்யப்பட்டார். இந்த வம்சத்தினர் சிதம்பரம் நடராசர் கோயிலின் முழு உரிமையும் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு எதிராக கோயிலின் நிர்வாகத்தை நடராசர் கோயிலைச் சேர்ந்த 3000 தீட்சிதர்கள் கையகப்படுத்திக்கொண்டனர்[சான்று தேவை]. ஏனெனில் சோழ மன்னர் மரபினரான சோழனாருக்கு எதிராக தன்னாட்சி முறையில் செயல்படத் தொடங்கிய தலைமை தீட்சிதரே திறவுகோளை வைத்துக்கொண்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் உடையார்பாளையம் சமீனைச் சேர்ந்த சாந்தி தேவியை மணந்தார். இந்த இணையருக்கு சக்ரவர்த்தி, மன்னர்மன்னன் என்ற இரு மகன்களும் ஐசுவர்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர் 2013 திசம்பர் 10 அன்று தன் 63 ஆவது வயதில் இறந்தார். இவரது இறுதிச் சடங்குகள் தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே செல்லப்பன்பேட்டையில் நடைபெற்றன.[3] சோழ வம்சத்தின் வம்சாவளியான இவர், வேளாண்மை செய்துவந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Zamindar of Pichavaram Passes Away". http://www.newindianexpress.com/states/tamil-nadu/2013/dec/10/Zamindar-of-Pichavaram-Passes-Away-548223.html. பார்த்த நாள்: 2017-01-12.
- ↑ 2.0 2.1 முனைவர் த. செயராமன் (2008). தமிழ் வழிபாட்டுரிமையும் தமிழ்த் தேசியமும். தஞ்சாவூர்: பன்மை வெளி. pp. 28–30.
- ↑ "சோழர் மன்னரின் வாரிசு சிதம்பரநாத சூரப்ப சோழர் காலமானார்". tamil.oneindia.com. http://tamil.oneindia.com/news/tamilnadu/zamindar-pichavaram-passes-away-189214.html.