பிச்சாவரம் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிச்சாவரம் பாளையம் அல்லது பித்தர்புரம் பாளையம் என்பது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு பாளையம் ஆகும். இந்த பிச்சாவரம் பாளையக்காரர்கள் சோழர் மரபில் வந்தவர்கள் என தி. வை. சதாசிவ பண்டாரத்தார் உறுதி செய்துள்ளார். இந்த சமீன்தார்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சோழனார் என்ற பட்டத்தைப் பூண்டுள்ளனர். இந்த மரபினர் தில்லை நடராசர் கோயிலின் வெள்ளிப்படியில் அமர்ந்து முடிசூட்டிக் கொள்ளும் வழக்கம் தற்போதுவரை உள்ளது. சிதம்பரம் கோயிலின் திறவுகோள் இவர்களின் வசமே இருந்துள்ளது தினமும் காலையில் திரவுகோலை பல்லக்கில் வைத்து அனுப்பும் பழங்கம் 1925 வரை இருந்துள்ளது. பிற்காலத்தில் பிச்சாவரம் அரண்மனை கடன் சிக்கலால் ஏலம் போய் அதன் மரபினர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கரையான் புற்றுக்குள் கருநாகம் தில்லை அம்பலத்தில் தீட்சிதர்கள் (2008). தமிழ் வழிபாட்டுரிமையும் தமிழ்த் தேசியமும். தஞ்சாவூர்: பன்மை வெளி. பக். 28-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சாவரம்_பாளையம்&oldid=2172018" இருந்து மீள்விக்கப்பட்டது