சிட்டவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிட்டவே
စစ်တွေမြို့
சிட்டவே முக்கிய வீதி
சிட்டவே முக்கிய வீதி
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Myanmar" does not exist.Location in Myanmar (Burma)
ஆள்கூறுகள்: 20°09′00″N 92°54′00″E / 20.15000°N 92.90000°E / 20.15000; 92.90000
நாடு  மியான்மர்
பிரிவு ராகினி மாநிலம்
மாவட்டம் சிட்டவே மாவட்டம்
நகராட்சி சிட்டவே நகராட்சி
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)
 • மொத்தம் 1,47,899[1]
நேர வலயம் MMT (ஒசநே+6.30)
தொலைபேசி குறியீடு 42, 43
Climate Am

சிட்டவே மியான்மரின் ராகினி மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் காலான்டன், மயு மற்றும் லே மரோ ஆறுகள் வங்காள விரிகுடா கடலில் சங்கமிக்கும் இடத்தில் முகத்துவாரம் அருகே அமைந்திருக்கிறது. சிட்டவே நகராட்சி மற்றும் சிட்டவே மாவட்டம் ஆகிய நிர்வாகப் பகுதிக்குள் இந்நகரம் அமைந்திருக்கிறது.

பெயர்க்காரணம்[தொகு]

சிட்டவே என்ற பர்மியப் பெயர் ராகின் மொழியில் சைதி-டாவியில் இருந்து உருவானது. இதன் பொருள் போர்களின் சங்கமம என்பதாகும். 1784 ஆம் வருடத்தில் பர்மிய மன்னரான போதாவபாயா மராக் யு இராச்சியத்தை கைப்பற்றிய பின், ராகின் வீரர்கள் பர்மிய படையுடன் காலான்டன் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் போர் புறிந்தனர். நிலம் மற்றும் நீர் ஆகியவற்றில் நடந்த போரில் மராக் யு படைகள் தோற்கடிக்கப்பட்டது. போர் நிகழ்ந்த இடம் ராகினி மொழியில் சீதி-டாவீ என அழைக்கப்பட்டது, மேலும் பர்மிய பேச்சு வழக்கில் இது சிட்டவே என அழைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

முதலில் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்து பின்நாளில் சிட்டவே கடல் வணிகத்தில் முக்கிய நகரமாக மாறியது, குறிப்பாக முதல் ஆங்கில-பர்மிய போரைத் தொடர்ந்து, ராகினி மாநிலம் என்று அழைக்கப்படும் அரக்கன் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அரிசி ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. பக். 59. https://drive.google.com/file/d/0B067GBtstE5TeUlIVjRjSjVzWlk/view. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டவே&oldid=2463741" இருந்து மீள்விக்கப்பட்டது