சிக்கபானவாரா

ஆள்கூறுகள்: 13°05′05″N 77°30′05″E / 13.084650°N 77.501410°E / 13.084650; 77.501410
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கபானவாரா
பறநகர்
சிக்கபானவாரா is located in கருநாடகம்
சிக்கபானவாரா
சிக்கபானவாரா
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°05′05″N 77°30′05″E / 13.084650°N 77.501410°E / 13.084650; 77.501410
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
வட்டம்பெங்களூர் வடக்கு
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,229
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்560090

சிக்கபானவாரா (Chikkabanavara) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புறநகரில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] [2] இது கர்நாடகத்தின் பெங்களூர் நகர மாவட்டத்தின் பெங்களூர் வடக்கு வட்டதில் அமைந்துள்ளது. இது பெங்களூரில் எஞ்சியிருக்கும் பழமையான ஏரிகளில் ஒன்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஏரி பெங்களூர்-தும்கூர் தொடருந்து பாதையில் சிக்கபானவாரா தொடருந்து நிலையத்திலிருந்து வடக்ககே 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சின்னபானவாரத்தின் மக்கள் தொகை 5209 ஆகும். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 2640 என்றும், பெண்களின் எண்ணிக்கை 2589 என்றும் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

பேருந்து[தொகு]

பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகமானது இங்கிருந்து மெஜஸ்டிக், ஆர். கே மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு 250,253,254,248 ஆகிய எண் பேருந்துகளையும், கெங்கேரிக்கு - 502H எண் பேருந்தையும், கிருஷ்ணராஜபுரத்துக்கு (ஆர்.கே. புரம்) 502A, 507C எண் பேருந்துகளையும். பீன்யா, ஜலஹள்ளி ஆகியவற்றுக்கு 250,250AB, 220AC, எண் பேருந்துகளையும், விஜய்நகர் நோக்கி 250AC எண் பேருந்தையும் இயக்குகிறது.

தொடருந்து[தொகு]

அருகிலுள்ள தொடருந்து நிலையம் சிக்கபானவார் சந்திப்பு தொடருந்து நிலையம், யஷ்வந்த்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வானூர்தி[தொகு]

கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் 38 கி.மீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Village code= 2036900 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Chikkabanavara, Bangalore Urban, Karnataka

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கபானவாரா&oldid=3750614" இலிருந்து மீள்விக்கப்பட்டது