சிகர் மொராதாபாதி
சிகர் மொராதாபாதி | |
---|---|
பிறப்பு | அலி சிக்கந்தர் 6 ஏப்ரல் 1890 மொராதாபாத், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 9 செப்டம்பர் 1960 கோண்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 70)
பணி | கவிஞர் |
அறியப்படுவது | பாரம்பரிய உருது பாடல்கள் கசல் (இசை) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தெக்-இ-சிகர் சோலா-இ-துர் (1937) ஆதிசு-இ-குல் (1959) திவான்-இ-சிகர் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1958) |
அலி சிக்கந்தர் (Ali Sikandar) (6 ஏப்ரல் 1890 - 9 செப்டம்பர் 1960), தனது புனைப்பெயரான சிகர் மொரதாபாதி ( Jigar Moradabadi )என்றும் அறியப்படும் இவர் ஒரு இந்திய உருதுக் கவிஞரும் மற்றும் கசல் எழுத்தாளரும் ஆவார். இவர் 1958 இல் தனது “அதிசு-இ-குல்” கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட “கடிதங்களின் முனைவர்” என்ற கௌரவ விருது பெற்ற ( முகமது இக்பாலுக்குப் பிறகு) இரண்டாவது கவிஞரும் ஆவார்.
சுயசரிதை
[தொகு]இவர் மொராதாபாத்தில் அரபு, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் கல்வியைப் பெற்றார். பின்னர், விற்பனையாளராக பணியாற்றத் தொடங்கினார்.[1] சிகர் இலக்னோவிற்கு அருகிலுள்ள கோண்டாவுக்குச் சென்று உருதுக் கவிஞர் அசுகர் கோண்ட்வியுடன் நட்பு கொண்டார்.
பாராட்டுக்கள்
[தொகு]ஜிகர் மொரதாபாதி கசல் எழுத்தில் இந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய பாடலாசிரியரான [2] மச்ரூக் சுல்தான்புரிக்கு வழிகாட்டியாக இருந்தார்.
புகழ்பெற்ற உருது கவிஞரும் கல்வியாளருமான பைஸ் அகமத் பைஸ், இவரை தனது வழிகாட்டியாகக் கருதினார். [3] சப்ரி சகோதரர்கள், அசீசு மியான், முன்னி பேகம் & அத்தாவுல்லா கான் எசகெல்வி போன்ற பல சூபி பாடகர்களால் இவரது சூபி கவிதைகள் பாடப்பட்டது.
இறப்பு
[தொகு]சிகர் மொராதாபாதி, 9 செப்டம்பர் 1960 அன்று கோண்டாவில் இறந்தார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature. New Delhi: Sahitya Akademi. p. 1838. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.
- ↑ Service, Tribune News. "Pluralism in verse" (in en). Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/features/pluralism-in-verse-31462.
- ↑ . 2011-03-06.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Jigar Moradabadi at Kavita Kosh
- Weaving ghazals on love, an article by Ashraf Faruqi on Jigar Moradabadi