சாளுக்கிய சிவன் கோயில்

ஆள்கூறுகள்: 16°1′11.68″N 75°52′52.46″E / 16.0199111°N 75.8812389°E / 16.0199111; 75.8812389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாளுக்கிய சிவன் கோயில்
சாளுக்கிய சிவன் கோயில் is located in கருநாடகம்
சாளுக்கிய சிவன் கோயில்
கருநாடகத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பாகல்கோட்டை
அமைவு:அய்கொளெ
ஆள்கூறுகள்:16°1′11.68″N 75°52′52.46″E / 16.0199111°N 75.8812389°E / 16.0199111; 75.8812389
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:சாளுக்கியர்

சாளுக்கிய சிவன் கோயில் (Chalukya Shiva Temple, முன்னர் லாட் கான் கோயில் என்று அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவின், கருநாடக மாநிலத்தின் அய்கொளெ என்ற இடத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுவில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும். இது சிவனுக்காக கட்டப்பட்ட ஒரு பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும். இது முன்பு ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்பட்டது. [1] ஆனால் இப்போது இது சுமார் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருத்தபடுகிறது. [2] [3] [4] [5] இது அய்கொளெ துர்க்கை கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ளது.

கட்டமைப்பு[தொகு]

சூரியன் மறைவின் போது சாளுக்கிய சிவன் கோயில்

இக் கோயில் ஆரம்பகால மரத்தினாலான கோயில் மாதிரியைக் கொண்டுள்ளதற்கான தெளிவான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. அவ்வாறான மரக் கோயில்கள் எதுவுமே தற்போது எஞ்சியில்லை. மண்டபத்தின் கூரையின் கட்டுமானம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. [6] [2] இக்கோயில் கருவறையையும் அதன் முன் ஒரு மண்டபமும், கருவறையைச் சுற்றி வருவதற்காக மூடப்பட்ட பாதையும் உள்ளது. [2] இந்த அமைப்பு மற்ற ஆரம்பகால கோயில்களில் காணப்படுகிறது. முக மண்டபம் கருவறைக்கு முன் அமைந்துள்ளது அது 12 தூண்களைக் கொண்டுள்ளது. சபா மண்டபத்தைக் கடந்து மகா மண்டபத்திற்கு செல்லவேண்டும். சுவர்களில் மலர் வடிவங்களும், சாளரங்கள் வடக்கு பாணியில் பின்னல் வேலைப்பாட்டமைப்புகள் கொண்டவையாக உள்ளன. கருவறைக்கு எதிரே உள்ளதுபோல், மண்டபத்தின் மையத்திற்கு மேலே மாடியில் இரண்டாவதாக ஒரு சிறிய கருவறை அமைந்துள்ளது. அதன் வெளிப்புறச் சுவர்களில் பல உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. [7]

முதலில் இது விஷ்ணுவிற்கு கட்டபட்டது, இப்போது கருவறையில் நந்தியுடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. பஞ்சயாதனம் பாணியில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது, இது கோயில் கட்டுமானத்தில் ஆரம்பகால சோதனை முயற்சியைக் குறிக்கிறது. செவ்வக அமைப்பில் தொடங்கி சதுர வடிவில் முடிவடைவது இக்கோயிலின் சிறப்பு ஆகும். மரத்தினிலான கட்டுமான வடிவமைப்பின் அடிப்படையில், சதுர மற்றும் செவ்வக்க் கட்டுமானமானது செங்குத்துச் சரிவு கொண்ட கூரையைக் கொண்டுள்ளது, இது மரக் கட்டுமானத்தைத் தழுவி கல் கட்டுமானத்தை கொண்டுவந்ததைக் காட்டுவதாகும். [2]

மகா மண்டபத்தின் தூண்களுக்கு இடையில் வெளிப்புறமாக பெரிய சாளரங்கள் அமைக்கபட்டுள்ளன. மகா மண்டபத்தின் மேலே உள்ள கூரையானது வடஇந்தியாவில் சிகரங்கள் மற்றும் தென்னிந்திய விமானங்கள் ஆகியவற்றின் எதிர்கால வடிவ பரிணாமத்தைக் காட்டும் துவக்கக்கால அமைப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Michell, 333
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Centre for Cultural Resources and Training Temple Architecture . Government of India. Retrieved on 20 July 2015
  3. Biswas, Subhash C, India the Land of Gods . Partridge India, 2014.
  4. University of Washington Libraries, Special Collections Division Corner view of carved pillar, Lad Khan temple . UW Digital Collections. Retrieved on 20 July 2015
  5. G. E. Kidder Smith Image Collection Lad Khan Temple . MIT Libraries. Retrieved on 20 July 2015
  6. Michell, 333
  7. Michell, 333

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chalukya Shiva Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளுக்கிய_சிவன்_கோயில்&oldid=3842422" இலிருந்து மீள்விக்கப்பட்டது