சாரியர், தெகுரான் மாகாணம்

ஆள்கூறுகள்: 35°39′35″N 51°03′33″E / 35.65972°N 51.05917°E / 35.65972; 51.05917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரியர்
شهريار
ஊர்
அலுவல் சின்னம் சாரியர்
சின்னம்
சாரியர் is located in ஈரான்
சாரியர்
சாரியர்
ஆள்கூறுகள்: 35°39′35″N 51°03′33″E / 35.65972°N 51.05917°E / 35.65972; 51.05917
Country ஈரான்
ProvinceTehran
CountyShahriar
BakhshCentral
மக்கள்தொகை (2016 Census)
 • நகர்ப்புறம்309,607
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)

சாரியர் (Shahriar)(பாரசீக மொழி: شهريار‎, ரோமானியம் : Shahrīār, Shahreyār, Shahriyār; பிற பெயர்கள்: Alī Shāh ‘Avaẕ : Ali Shāh ‘Iwaz) எனப்படும் இந்த நகரமானது, சாரியர் கவுன்டியின் தலைநகரம் ஆகும். பெரும்பான்மையான நகரங்களைப் போன்றே, இந்த நகரத்தின் ஆண்டு சராசரி மழையளவும் [1] 25 மி.மீ. ஆக உள்ளது. சாரியர் நகராட்சி /நகராண்மைக் கழகமானது, 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2] அப்பொழுது இருந்த அந்த நகரத்தின் மக்கள் தொகை 5,000 நபர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஈரானிய நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் இருபத்தாறவது இடத்தினைப் பெறுகிறது.[2] 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தில் 51,814 குடும்பங்கள் இருந்தன. அந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 328,190 ஆக இருந்தது. பொதுவாக ஈரான் நாட்டின் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[3][4] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 309,607 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,2011ஆம் ஆண்டு, 249,473 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +24.10% அதிகரித்துள்ளது.

குடும்பம்[தொகு]

இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், தவிர எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களைப் பெற்றிருந்தாலும், அத்தொடர்புகளை விட, அதிக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்கேக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.[5] வங்கிகளிலும் கூட கடன் வசதி தரும் போது, இந்த குடும்ப வரலாறுகளைக் கணக்கில் கொண்டு பணம் பெறுவது, எளிமையான நடைமுறைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது.[சான்று தேவை]

போக்குவரத்து[தொகு]

சாரியார் நகராட்சியும், இந்நாட்டின் புறநகர் பேருந்து அமைப்பும் தனித்தனியே இரு பேருந்து இயக்கங்களின் வழியே, நகர மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துகின்றன. தெகுரான் நகரமும், கராஜு நகருடனும் இணைக்கிறது. அதே நேரத்தில் சுற்றியுள்ள சிறிய நகரங்களின் தொகுதிகளுக்கும், அதன் வழித்தடங்களிலும் இயக்குகின்றன.

வழித்தடங்கள்[தொகு]

நிறம் நகரம் தூரம் (கி.மீ.) இணைப்புகள்
சாரியர்-அச்சாரி 28.5
  • ஆன்டிசே-அச்சாரி
  • பகியிசுடன்(நசிர்பாத்து)-அச்சாரி
  • டேக்சாத்து-சாரியர்
எசுலாம்சர், புறநகர் பேருந்து அமைப்பு
  • மஃடியே-அச்சாரி
  • குவா'எமியே-அச்சாரி
சாரியர்-ஆசாதி 28 மேய்தான்-இ ஆசாதி மாநகர நிலையம்
தெகுரான் மேற்கு முனையம்
  • 252 ஆசாதி முறை.-சாராக்கு-இ சார்டாரி
  • 253 ஆசாதி முறை.-சாராக்கு-இ டேனிச்க்கா
  • 280 ஆசாதி முறை.-குசார் முறை.
  • 288 ஆசாதி முறை.-சனத் சதுக்கம்.
  • 323 ஆசாதி முறை.-சாராக்கு-இ பாக்கிரி
  • 355 ஆசாதி முறை.-ஆஃடு-இ திர்
  • 368 ஆசாதி முறை.-சையத் காந்தான்
  • 369 ஆசாதி முறை.-வனகுச் சதுக்கம்.
  • 374 ஆசாதி முறை.-எப்ராகிமாபாத் பெருவழி
  • 375 ஆசாதி முறை.- யாஃதாபாத்து
  • 385 ஆசாதி முறை.-சாராக்கு-இ வலியசர்
  • 412 ஆசாதி முறை.-காலியிச்சு-இ பாஃர் பெருவழி
  • 414 ஆசாதி முறை.-சாராக்கு-இ தார்யா
  • 427 ஆசாதி முறை.-சார்-இ அஃடாப்பு
  • 901 ஆசாதி முறை.-தெகுரானபர் நிலையம்
  • 902 ஆசாதி முறை.-காவரான் முறை.
  • 910 ஆசாதி முறை.-ஈரான் அறிவியல் தொழினுட்ப பல்கலைக் கழகம் - IUST
  • ஆன்டிசே-ஆசாதி
  • ஆன்டிசே-அச்சாரி
  • ஆன்டிசே-கராய்ச்சு மாநகர-சம்ரேன் முனையம்
  • பகியிசுடன்(நசிர்பாத்து)-ஆசாதி
  • டேக்சாத்து-சாரியர்
  • எசுலாம்சர்-ஆசாதி
  • அகமதாபாத்து-இ முசுதாபி-ஆசாதி
  • பைரசு பாஃரம்-ஆசாதி
  • வவன்-ஆசாதி (சிறப்பு)
  • சாராக்கு-இ இமாம் ஓசியின்-ஆசாதி (சிறப்பு)
  • மார்லிக்கு-ஆசாதி
  • மலர்டு-ஆசாதி
  • மலர்டு-சாரியர்
சாரியர்-கராய்ச்சு 18 கராய்ச்சு மாநகர நிலையம்
சாகித் சோல்தனி பேருந்து முனையம்
  • Fardis-சம்ரேன்
  • சோல்தனி-Fardis
  • சோல்தனி-Bonyad
  • சோல்தனி-Be'sat
  • சோல்தனி-பகியிசுடன்
  • சோல்தனி-எசராக்கு-இ பாலா
  • சோல்தனி-ஔj
  • சோல்தனி-சாராக்கு-இ டேலிகானி
  • சோல்தனி-ஆசாத்துப் பல்கலை
  • சம்ரேன்-வாதாத்து
  • சோல்தனி-எசராக்கு (விரைவு)
  • சோல்தனி-அசனாபாத்து
  • ஆன்டிசே-கராய்ச்சு மாநகர-சம்ரேன் முனையம்
  • ஆன்டிசே-ஆசாதி
  • ஆன்டிசே-அச்சாரி
  • டேக்சாத்து-சாரியர்
  • மலர்டு-கராய்ச்சு
  • மார்லிக்கு-கராய்ச்சு
  • மலர்டு-சாரியர்
  • மார்லிக்கு-ஆசாதி
  • சரசிலாப்பு-ஆசாதி
  • சரசிலாப்பு-குவாடுசு
சாரியர்-ஆன்டிசே 7
  • ஆன்டிசே-கராய்ச்சு மாநகர-சம்ரேன் முனையம்
  • ஆன்டிசே-ஆசாதி
  • ஆன்டிசே-அச்சாரி
  • டேக்சாத்து-சாரியர்
  • மலர்டு-கராய்ச்சு
  • மார்லிக்கு-கராய்ச்சு
  • மலர்டு-சாரியர்
  • மார்லிக்கு-ஆசாதி
  • சரசிலாப்பு-ஆசாதி
  • சரசிலாப்பு-குவாடுசு
சாரியர்-சஃஆதாசுத்து 22
  • டேக்சாத்து-சாரியர்
  • குசுலாக்கு]]
  • மலர்டு-பைட்கானெசு
  • மலர்டு-கெசுலேக்-இ மார்ச்சின்
சாரியர்-அமிர்யே 6
  • டேக்சாத்து-சாரியர்
சாரியர்-வகிடேயி 8
  • டேக்சாத்து-சாரியர்
சாரியர்-பெர்டோவ்சுயே 8
  • டேக்சாத்து-சாரியர்
சாரியர்-சாயிடேசர் 12
  • டேக்சாத்து-சாரியர்
சாரியர்-சபாசர் 12
  • டேக்சாத்து-சாரியர்

குறிப்புகள்[தொகு]

  1. http://countrystudies.us/iran/30.htm
  2. 2.0 2.1 https://www.amar.org.ir/english
  3. Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
  4. "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
  5. http://countrystudies.us/iran/52.htm