சாரா பேர்ண்ஹார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாரா பேர்ண்ஹார்ட்
Sarah Bernhardt - Project Gutenberg eText 19955.jpg
சாரா பேர்ண்ஹார்ட் ஜூன் 1877 இல், பொஸ்டன், மசசூசெட்சுக்குச் சென்றபோது.
இயற் பெயர் சாரா மேரி ஹென்றியட் ரோசைன் பர்னாட்
பிறப்பு 22 அக்டோபர் 1844
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு 26 மார்ச் 1923 (அகவை 78)
பாரிஸ், பிரான்ஸ்
நடிப்புக் காலம் 1862-1923
துணைவர் அம்புரோய்ஸ் அரிஸ்டைட் டமாலா (1882-1889)

சாரா பேர்ண்ஹார்ட் (Sarah Bernhardt) (22 அக்டோபர் 1844 – 26 மார்ச் 1923) ஒரு பிரெஞ்சு நாடக நடிகை ஆவார். உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற நடிகை எனவும் இவர் போற்றப்படுகிறார். பேர்ண்ஹார்ட் 1870 களில் ஐரோப்பிய மேடைகளில் புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இவர் மிகவும் வேண்டப்பட்ட நடிகை ஆனார். ஒரு மிகவும் கருத்தூன்றி நடிக்கக்கூடிய நடிகை என்னும் பெயரை இவர் பெற்றதுடன், தெய்வீகமான சாரா என்னும் பட்டப் பெயரும் இவருக்கு வழங்கியது.

சாரா மேரி ஹென்றியட் ரோசைன் பர்னாட் என்னும் முழுப் பெயர் கொண்ட இவர் பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது தாயார் ஜூலி பர்னாட், தந்தை ஒரு டச்சு இனத்தவர். இவர் தனது தாயாரின் உடன்பிறந்தாரின் பெயரைத் தனது தந்தையின் பெயர் போலப் பயன்படுத்திக் கொண்டார். ஒருவேளை இது தனது தந்தையார் யார் என்று தெரியாமல் இருந்ததை மறைப்பதற்காக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவரது பாட்டன் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்த ஒரு யூத வணிகர். சாராவின் வாழ்க்கை பற்றிய தெளிவின்மைக்கான முக்கிய காரணம் திரிபு படுத்துவதும், பெரிது படுத்துவதுமான இவரது போக்கினாலாகும். சிலர் இவர் அயோவாவில் பிறந்து பிரான்ஸ் நாட்டுக்கு ஓடியவர் என்றும் அங்கே பிரான்ஸ் குடிமகள் என்னும் புதிய அடையாளத்தோடு நடிப்புத் தொழிலை மேற்கொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவர் 3000 தடவைகளுக்கு மேல் நடித்த நாடகமொன்றை எழுதிய அலெக்சாண்டர் டுமாஸ், பில்ஸ் என்பார், இவர் பொய் சொல்வதில் பெயர் பெற்றவர் என்கிறார்.

நடிப்புத் தொழில்[தொகு]

சாராவின் நடிப்புத்தொழில் 1862 ஆம் ஆண்டில், இவர் காமெடீ பிராங்கைஸ் (Comédie-Française) என்னும் பிரான்சின் புகழ் பெற்ற அரங்கில் பயின்றுகொண்டிருந்த காலத்தில் தொடங்கியது. எனினும் இவர் இதில் முழுமையாக வெற்றி பெறவில்லை. இதனால், இவர் 1865 ஆம் ஆண்டளவில் அங்கிருந்து விலகி ஒரு விலைமகள் ஆனார். இக்காலத்திலேயே இவர் தனது புகழ்பெற்ற சவப்பெட்டியை வாங்கினார். கட்டிலுக்குப் பதிலாகப் பல சமயங்களில் அதைத் தூங்கும் இடமாகப் பயன்படுத்திக் கொண்டார். தான் நடித்த துன்பியல் பாத்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இது உதவியதாகக அவர் கூறிக்கொண்டார். 1870 களில் ஐரோப்பாவின் மேடைகளில் இவர் புகழ் பெற்றார். தொடர்ந்து முழு ஐரோப்பாவிலும், நியூ யார்க்கிலும் இவரது புகழ் பரவியது. நடிகையும், விலைமகளுமாகிய லியானே டி பூகி (Liane de Pougy) உட்படப் பல இளம் பெண்களுக்கு நடிப்புக் கலையைக் கற்றுத்தந்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_பேர்ண்ஹார்ட்&oldid=2206516" இருந்து மீள்விக்கப்பட்டது