அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரங்கு (Theatre) என்பது நிகழ்த்து கலைகளின் ஒரு பிரிவு ஆகும். பர்னாட் பெக்கர்மான் என்பவர், அரங்கு என்பது, "வெளியிலும் காலத்திலும் தம்மைத் தனிப்படுத்திக் கொள்ளும் ஒருவர் அல்லது பலர் தம்மை இன்னொருவருக்கு அல்லது பிறருக்குக் காட்சிப்படுத்தும் போது நிகழ்வது", என வரைவிலக்கணம் கூறினார்]]."[1]. அரங்கு என்பதை நாடகம் என்பதாகவே பொதுவில் நோக்குவது உண்டு ஆனால், இவற்றுக்கு இடையே வேறுபாடு உண்டு. நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப்படும் ஒரு விடயம் எனில், அரங்கு என்பது அது தொடர்பான முழுவதையும் இணைத்துக் காட்டுவது. யார் காட்டுகிறார்கள், எவ்விடத்திலே காட்டப்படுகின்றது, எவ்வாறு காட்டப்படுகின்றது, யார்முன்னே காட்டப்படுகின்றது, எந்தச் சூழலில் காட்டப்படுகின்றது போன்ற எல்லாவற்றையும் அரங்கு உள்ளடக்குகிறது எனப்படுகிறது[2].

கதை கூற விழையும் மனிதனுடைய இயல்பு காரணமாக மிகப் பழங்காலத்திலேயே அரங்கு உருவாகிவிட்டது எனலாம். தொடக்க காலத்தில் இருந்தே அரங்கு பல வடிவங்களை எடுத்து வந்திருக்கிறது. இதற்காக, பேச்சு, நடிப்பு, இசை, நடனம் போன்றவற்றையும், நிகழ்த்து கலைகள், காட்சிக் கலைகள் போன்றவற்றிலிருந்து பல கூறுகளையும் பெற்று ஒரே கலை வடிவமாக ஆக்கியது.

வரலாறு[தொகு]

தற்போது நாம் அறிந்தபடி பதிவு செய்யப்பட்டுள்ள மிகப் பழைய அரங்கியல் நிகழ்வு கிமு 2000 ஆண்டுகள் அளவில் பண்டைய எகிப்தில் இடம்பெற்றுள்ளது. ஒசிரிசு (Osiris) என்னும் கடவுளின் இக்கதை இந்த நாகரிகக் காலத்தின் விழாக்கள் பலவற்றிலும் நிகழ்த்தப்பட்டு வந்தது. இது மதத்துக்கும், அரங்குக்கும் இடையிலான மிக நீண்டகாலத் தொடர்பின் தொடக்கத்தையும் குறித்து நின்றது.

பண்டைய கிரேக்கர்கள், அரங்கை ஒரு கலை வடிவமாக முறைப்படுத்தினர். இதன் பல வடிவங்களான துன்பியல் அரங்கு, நகைச்சுவை அரங்கு முதலியவற்றுக்கு இறுக்கமான வரைவிலக்கணங்களையும் ஏற்படுத்தினர். பண்டை எகிப்திய அரங்குகளைப் போலவே கிரேக்க அரங்குகளிலும் தொன்மங்களில் இருந்தே கதைமாந்தர்களூம், கருப்பொருளும் பயன்படுத்தப்பட்டன. கிரேக்கர்களே, நாடகத் திறனாய்வு, நடிப்புத் தொழில், அரங்கக் கட்டிடக்கலை போன்றவற்றையும் உலகுக்கு அறிமுகப்படுத்தினர்.

குறிப்புகள்[தொகு]

  1. ஹாப்ஸ்தாரா பல்கலைக்கழகத்தின் நாடகப் பிரிவுத் தலைவர் பெர்னாட் பெக்கர்மான் எழுதிய நாடகத்தின் இயங்கியல் (Dynamics of Drama) என்னும் நூலில்
  2. சிவத்தம்பி, கா., மௌனகுரு, சி., திலகநாதன், க.; அரங்கு - ஓர் அறிமுகம்; உயர்கல்விச் சேவை நிலையம்; யாழ்ப்பாணம்; 2003. பக். 4. (முதற்பதிப்பு 1999)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கு&oldid=1351518" இருந்து மீள்விக்கப்பட்டது