சைகை உணர்தல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணினியியலில், சைகை உணர்தல் என்பது மனித சைகைளை கணினி புரிந்து கொள்ளுமாறு அமைந்த தொழில்நுட்பம் ஆகும். ஒருவரின் முக பாவனைகளை, கை, உடல் மூலம் காட்டப்படும் சைகைகளை புரிந்துகொள்ளுமாறு இந்த நுட்பங்கள் அமைகின்றன. இதற்கு ஏற்ற உணரிகள், படம்பிடிகருவிகள், கணினி போன்ற வன்பொருட்களையும், அந்த தகவல்களை ஏற்றமாதிரி கணிக்க வல்ல மென்பொருட்களையும் சைகை உணரிகள் கொண்டுள்ளன.