சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு
சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Accipitriformes |
குடும்பம்: | Accipitridae |
பேரினம்: | Ichthyophaga |
இனம்: | I. ichthyaetus |
இருசொற் பெயரீடு | |
Ichthyophaga ichthyaetus Thomas Horsfield - 1821) |
சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு (Grey-headed fish eagle) தென்கிழக்காசியா, இந்தியா போன்ற காடுகளில் காணப்படும் இவை உயிர்வேட்டைப் பறவையாகும். பொதுவாக கற்கரையோரங்களில் கானப்படும் இவை மீன்களை அதிகமாகப் பிடித்து உட்கொள்கிறது. இவற்றில் பெரிய பறவைகள் அடர் பழுப்பு நிறத்தில் உடலும், சாம்பல் நிறத்தில் தலையும், கால்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு சிறிய மீன் கழுகுக்கும் (Lesser fish eagle) மற்றும் பல்லாஸ் மீன் கழுகுகுக்கும் (Pallas's fish eagle) இடைப்பட்ட இறக்கையினால் வித்தியாசத்தைக் கொண்டதாக இருக்கும். இதன் குஞ்சுகள் உடலில் கோடுகளுடன் வெளிர் நிறத்தில் காணப்படுகின்றன. இவை மீன்களை வேட்டையாட நீர்நிலைகளில் காணப்படுவதால் இலங்கை நாட்டில இதனை குளக் கழுகு என்று அழைக்கிறார்கள்.
இதற்கான ஆங்கில பெயரான இக்த்ஸெதுச் (Ichthyaetus) என்பதில் முதல் பாதி இக்துஸ் என்பது கிரேக்க மொழியில் மீன் என்ற சொல்லைக் குறிப்பதாகும். இந்தியாவில் தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் இவை காணப்படுகின்றன.
தற்போதைய நிலையி9ல் இவற்றின் வாழ்விட அழிப்பு, காட்டுகள் அழிப்பு, மீன்பிடிப்பு, துன்புறுத்தல், போன்ற பல காரணங்களால் இவை அழிவும் தருவாயில் உள்ளது. ref name=Ferguson /> Tingay et al.[2][3]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Ichthyophaga ichthyaetus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Tingay2006
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Tingay2010
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை