இக்துஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்துஸ் (ichthys அல்லது ichthus (/ˈɪkθəs/[1]) என்பது கிரேக்கத்தில் "மீன்" (ἰχθύς) என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இது இரு வில் வடிவங்களைக் கொண்டும் அவற்றின் வலப்பக்க முனைகள் ஒன்றெயொன்று ஊடறுத்து நீண்டு காணப்பட்டு, மீனின் தோற்றத்தைக் குறிக்கும் குறியீடாகவுள்ளது. இது ஆதிகாலக் கிறிஸ்தவர்களால் இரகசியக் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது.[2] தற்கால பேச்சு வழக்கில் "மீன் சின்னம்" அல்லது "இயேசு மீன்" என அழைக்கப்படுகின்றது.[3]

இக்துஸ் கிறித்தவக் குறியீடாகப் உள்வாங்கப்பட்டுள்ளது.

குறியீட்டு அர்த்தம்[தொகு]

ஆரம்பகால இக்துஸ் குறியீடு, கிரேக்க எழுத்துக்களான ΙΧΘΥΣ என்பவற்றின் கூட்டு, எபேசு.

இக்துஸ் (ΙΧΘΥΣ) என்பது "Ίησοῦς Χριστός, Θεοῦ Υἱός, Σωτήρ", (Iēsous Christos, Theou Yios, Sōtēr) என்பதன் சுருக்கமாகும்.[4] இதன் மொழிபெயர்ப்பு "இயேசு கிறிஸ்து, கடவுளின் மகன், மீட்பர்" என்பதாகும்.

  • செசேஸ் (Iēsous) (Ἰησοῦς) என்பதிலுள்ள முதல் எழுத்து [i], "இயேசு" எனப்படும்.
  • கிறிஸ்டோஸ் (Christos) (Χριστός) என்பதிலுள்ள முதல் எழுத்து [ch], "கிறிஸ்து" எனப்படும்.
  • தேயு (Theou) (Θεου) என்பதிலுள்ள முதல் எழுத்து [th], "கடவுளுடைய" எனப்படும்.
  • குயஸ் ([h]uios)[5] (Υἱός) என்பதிலுள்ள முதல் எழுத்து [y], "மகன்" எனப்படும்.
  • செட்டர் (sōtēr) (Σωτήρ) என்பதிலுள்ள முதல் எழுத்து [s], "மீட்பர்" எனப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "ichthus". Oxford English Dictionary (third). (2007). 
  2. Elesha Coffman (August 8, 2008). "What is the origin of the Christian fish symbol?". Christianity Today.
  3. "Evolution of religious bigotry"
  4. Christian H. Bull, Liv Ingeborg Lied, John D. Turner, editors (2012). Mystery and Secrecy in the Nag Hammadi Collection and Other Ancient Literature: Ideas and Practices. Leiden, The Netherlands: Koninklijke Brill NV. p. 327. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-21207-7. {{cite book}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. The initial "h" was sometimes pronounced, depending on dialect and period, but in Ionic orthography the sound was written with the rough breathing diacritical mark instead of a full letter, and so would not be used to form an acronym)

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ichthys
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்துஸ்&oldid=3593030" இலிருந்து மீள்விக்கப்பட்டது