சாமிம் ரஜனி
சமிம் ரஜனி (hamim Rajani1 970 களில் பிறந்தவர்) பாக்கித்தானின் கராச்சியைச் சேர்ந்த ஒரு தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1] 2004 ஆம் ஆண்டில், இவர் பாக்கித்தானின் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் ரீதியாக வேலை செய்யத் தொடங்கினார்.[2] 2005 ஆம் ஆண்டில், பாக்கித்தானின் கராச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான ஜெனெடெக் சொல்யூஷன்ஸை இவர் இணைந்து நிறுவினார்.[3] 2010 முதல், இவர் அதே நிறுவனத்தில் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.[4][5] 2017 ஆம் ஆண்டில், கராச்சியில் தொழில்நுட்பம் தெரியாத பெண்களுக்கு கல்வி கற்பதற்காக கான்சல்நெட் கார்ப்பரேஷனின் கீழ் கணினி பயிற்சித் திட்டத்தை தொடங்கினார்.[2] 2018 ஆம் ஆண்டில், ஃபைஸா யூசுப் உடன் இணைந்து கோட்ஜர்ல்ஸ் என்ற மற்றொரு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கினார்.[6] கோட்ஜர்ல்ஸ் என்பது கான்சல்நெட் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.[3][7] அதே ஆண்டில், இவர் உமன் டெக்பிகே வின் ஆலோசகராகவும் பணியாற்றத் தொடங்கினார் மற்றும் கனடாவின் டொராண்டோவில் அமைந்துள்ள கிரிப்டோ சிக்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பாக்கித்தான் தூதராகவும் இவர் ஆனார்.[6][8] 2019 இல், இவர் பாக்கித்தான் தகவெளிமை மேம்பாட்டு சங்கத்தின் வாரிய உறுப்பினராக ஆனார் [9] 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இவர் P@SHA இன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 2020 இல் இருந்து அந்த அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.[10]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் 1970 களில் பாக்கித்தானின் கராச்சியில் அமைந்துள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒரு பாக்கித்தான் கலாச்சாரக் குடும்பத்தில் வளர்ந்தவர்.[7] தந்தையின் வேலை காரணமாக இவரது குடும்பம் பகுரைனுக்கு குடிபெயர்ந்தது. 1990 களின் முற்பகுதியில், இவர் தனது குடும்பத்துடன் மீண்டும் கராச்சிக்குச் சென்று 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு இவர் கணினித் துறையில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.[1]
கல்வி
[தொகு]இவர் 1980 களில் பகுரைனில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். 1997 ஆம் ஆண்டில், கராச்சியில் அமைந்துள்ள ஒரு கணினி கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.[7] பின்னர், இவர் 2017 ஆம் ஆண்டில் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் அட்மினிஸ்ட்ரேசன் நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.[11] மேலும், கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டிராப்பர் பல்கலைக்கழகத்தில் பிளாக்செயின் நிர்வாக திட்டத்தில் பட்டம் பெற்றார்.[4][8] இவர் ஒரு இசுக்ரம் மென்பொருள் உருவாக்க முறையியல் சான்றிதழ் பெற்றார்.[9][12]
தொழில்
[தொகு]1998 ஆம் ஆண்டில், தனது தந்தையின் ஓய்வூதியப் பணத்தின் உதவியுடன், கன்சல்நெட் கார்ப்பரேஷன் என்ற கணினிப் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினார். பூட்ஸ்டிராப் (தோற்றத்திற்கான கட்டமைப்பு) அடிப்படையாகக் கொண்ட மொழியைக் கற்பிப்பது குறித்து தொழில்நுட்பம் இல்லாத இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு கற்பிக்க இவர் ஒரு கணினி பயிற்றுவிப்பாளராக நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டில், இவர் தனது முதல் சர்வதேச வலைத்தள மேம்பாட்டுத் திட்டத்தைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டில், இவர் ஜெனடெக் சொல்யூசன்ஸ் என்பதனை நிறுவி, அங்கு ஒரு குழுத் தலைவராகப் பணியாற்றினார்.[1][2] 2010 வாக்கில், இவர் ஜெனெடிக் சொல்யூஷன்சில் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றத் தொடங்கினார்.[7] 2010 களில், இவர் பாலின ஏற்றத்தாழ்வு மற்றும் பாக்கித்தானின் தகவல் தொழில்நுட்பம் (ஐடி) துறையில் பெண்களின் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு சிறிய அளவில் கோட்ஜர்ல்ஸ் நிதியளித்த திட்டங்கள் மூலம் பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டில், ஃபைசா யூசுப் உடன் கோட்ஜர்ல்ஸ் மூலம் பல பயிற்சித் திட்டங்களைத் தொடங்கினார், அதே நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைப் பெறுவதன் மூலம் கான்சல்நெட் கார்ப்பரேஷனை மிகப் பெரிய அளவில் மீண்டும் நிறுவினார்.[5][6][7]
சான்றுகள்
[தொகு]- 1 2 3 "Shamim Rajani — Have the courage to break out of your bubble yourself". Tech Sisters (in அமெரிக்க ஆங்கிலம்). 11 May 2020. Retrieved 12 November 2020.
- 1 2 3 Desk, Reporting (9 October 2017). "Shamim Rajani ; Traveling the Journey of Web Programming to Entrepreneurship". DigitalDips (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 12 November 2020.
{{cite web}}:|last=has generic name (help) - 1 2 "Shamim Rajani". P@SHA (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 29 ஆகஸ்ட் 2021. Retrieved 12 November 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - 1 2 Pakistan, Build and foster a thriving ecosystem for agile community in. "Shamim Rajani (Member) – Pakistan Agile Development Society". Shamim Rajani (Member) – Pakistan Agile Development Society. Archived from the original on 23 செப்டம்பர் 2020. Retrieved 12 November 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - 1 2 "CodeGirls Pakistan: founder Shamim Rajani is only just getting started!". Women's World Wide Web (in அமெரிக்க ஆங்கிலம்). 29 March 2019. Retrieved 12 November 2020.
- 1 2 3 "RapidCompute Partners with CodeGirls to Promote Diversity and Inclusion in Tech – Daily News" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 13 November 2020. [தொடர்பிழந்த இணைப்பு]
- 1 2 3 4 5 "These two women are battling the gender biased technology industry by teaching coding to young girls". TechJuice (in அமெரிக்க ஆங்கிலம்). 1 April 2019. Retrieved 12 November 2020.
- 1 2 "CryptoChicks Hackathon in Pakistan". CryptoChicks Hackathon in Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 13 November 2020.
- 1 2 Dayspring, The (4 December 2019). "Ms. Shamim Rajani Co-opted in the P@SHA Central Executive Committee". The Dayspring | Youth Centric Newspaper of Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 12 November 2020.
- ↑ Ahmed, Ali (1 October 2020). "P@SHA elects new leadership". Brecorder (in ஆங்கிலம்). Retrieved 12 November 2020.
- ↑ "Sindh Madressatul Islam University". www.smiu.edu.pk. Retrieved 13 November 2020.
- ↑ "Shamim Rajani". Scrum.org (in ஆங்கிலம்). Retrieved 13 November 2020.