இசுக்கிரம்
இசுக்கிரம் (ஆங்கிலத்தில்: Scrum) என்பது ஏசைல் (Agile) மென்பொருள் உருவாக்க முறையியல் வகைகளில் ஒன்றாகும். இது படிப்படியாய் சுழற்சி முறையில் சிக்கலான மென்பொருள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு வழிமுறையாகும்.
இசுக்கிர முறையியல் கென் சுவாபர் (Ken Schwaber) மற்றும் செஃபு சதர்லேண்டு (Jeff Sutherland) ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்டது.
இசுக்கிரம் முதலில் மென்பொருள் மேம்பாட்டு திட்டங்களுக்காகவே முறைப்படுத்தப்பட்டாலும், இன்று பல்வேறு துறைகளில், சிக்கலான திட்டங்களையும் மற்றும் புதுமையான வேலைகளையும் நிறைவேற்றி முடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு, சாத்தியப்பட்டு வருகிறது.
இசுக்கிரம் கோட்பாடுகள்
[தொகு]இசுக்கிர கட்டமைப்பு மற்றும் அதன் சொல்லியல் ஆகியவை கருத்தளவில் எளிதாக இருந்தாலும், இதனை செயல்படுத்துவது சிறிது கடினமே. இசுக்கிர அணியின் வெற்றியானது, அது எந்த அளவிற்கு இசுக்கிர கோட்பாடுகளை பின்பற்றி நடக்கிறது என்பதை பொறுத்தது.
இசுக்கிரம் முறையியல் பின்வரும் ஏசைல் கொள்கைகளுக்கு (Agile Manifesto) முக்கியத்துவம் அளிக்கிறது.
- மனிதர்களும் ஊடாட்டமும் என்பன செயல்முறைகளையும் கருவிகளையும் விட மேலானவை;
- 'செயல்புரியும் மென்பொருள்' உருவாக்கம் என்பது விரிவான ஆவணமாக்கலை விட மேலானது;
- வாடிக்கையாளர் கூட்டாக்கம் என்பது வாடிக்கையாளர் ஒப்பந்த பேச்சுவார்த்தையை விட மேலானது;
- மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் என்பது திட்டத்தை பின்பற்றலை விட மேலானது;
வலதுபுறம் உள்ளவை தேவையில்லை என்பதில்லை, அவற்றைவிட இடதுபுறம் உள்ளவை மேலானது, முக்கியமானது என்பதைத்தான் ஏசைல் வலியுறுத்துகிறது.
இசுக்கிரம் கட்டமைப்பு
[தொகு]இசுக்கிர கட்டமைப்பு மிகவும் எளிதான ஒரு கட்டமைப்பு ஆகும்.
பாத்திரங்கள்
[தொகு]இசுக்கிர பாத்திரங்கள்
[தொகு]- தயாரிப்பு உரிமையாளர்
- இசுக்கிர முதன்மையாளர்
- அணி
தொடர்புடைய இதர பாத்திரங்கள்
[தொகு]- பங்குடையோர் அல்லது திட்டத்தில் பங்குடையோர்
- பயனர்கள்
சந்திப்புகள்
[தொகு]- விரைவோட்டத் திட்டமிடல் சந்திப்பு
- தினசரி இசுக்கிர சந்திப்பு
- விரைவோட்ட ஆய்வு சந்திப்பு
செய்பொருட்கள்
[தொகு]- தயாரிப்புப் பொருட்பட்டியல்
- விரைவோட்டப் பொருட்பட்டியல்
- விரைவோட்ட முன்னேற்ற விளக்கப்படம்
பாத்திரங்கள் (விரிவாக)
[தொகு]தயாரிப்பு உரிமையாளர்
[தொகு]- ஒரு திட்டத்தின் ஒட்டுமொத்தப் பார்வை மற்றும் அதன் நோக்கம் இவற்றிற்கு பொறுப்பு வகிப்பவர்
- ஒரு திட்டத்தின் முதலீட்டு லாபம் மற்றும் இடர்கள் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, சரியான முடிவெடுத்து, நிர்வகிப்பவர்
- ஒரு திட்டத்தில் தொடர்புடைய பயனர்கள், வாடிக்கையாளர்கள், பங்குடையோர்கள் மற்றும் அணியினர் ஆகியோர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெற்று, முன்னுரிமைப்படுத்தப்பட்ட 'தயாரிப்புப் பட்டியலை' உருவாக்கும் பொறுப்புடையவர்
- தயாரிப்புப் பட்டியலின் உரிமையாளர்
- விரைவோட்டத் திட்டமிடல் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் கண்டிப்பாக பங்கெடுப்பவர்
- விரைவோட்டம் முழுவதும் அணியினரின் சந்தேகங்களை விளக்கமளித்து தீர்க்கும் பொருட்டு தம்மை அர்ப்பணிப்பவர்
- மென்பொருள் வெளியீட்டுத் திட்டத்தை தீர்மானித்து, அதனை உயரதிகாரிகளுக்கும், வாடிக்கயாளர்களுக்கும், இசுக்கிர அணியினருக்கும் தெரிவிப்பவர்.
- அணியினரின் விரைவோட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை பெற்றவர்.
இசுக்கிர முதன்மையாளர்
[தொகு]- இசுக்கிர முதன்மையாளர் என்பவர் அவரது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் செய்து, அணி வெற்றி அடைய உதவுபவர். அவை முறையே -
- அணிக்கு சேவை
- அணியை பாதுகாத்தல்
- அணிக்கு வழிகாட்டல் (இசுக்கிர பயன்பாட்டில்)
- ஒரு இசுக்கிர முதன்மையாளர் எதை செய்யமுடியாது/செய்யக்கூடாது:
- இசுக்கிர முதன்மையாளர் அணியை நிர்வகிக்க முடியாது
- இசுக்கிர முதன்மையாளர் அணியினருக்கு பணிகளை ஒதுக்க முடியாது
- இசுக்கிர முதன்மையாளர் அணியினருக்காக முடிவுகளை எடுக்க முடியாது
- இசுக்கிர முதன்மையாளர் தயாரிப்பு உத்தியில் முடிவெடுக்க முடியாது
அணி
[தொகு]- அணியின் இலட்சிய அளவு
- இசுக்கிர அணியில் ஏழிலிருந்து ஒன்பது உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.
- மூன்றிலிருந்து, பதினைந்து உறுப்பினர்கள் வரைகூட சில இசுக்கிர அணிகள் உள்ளன
- அணியின் கலப்பு செயல்பாடு
- ஒரு மென்பொருளை உற்பத்தி செய்ய தேவையான வெவ்வேறு வகையான (அல்லது அனைத்து) திறமைகளும் படைத்த அணி
- அணியின் சுயமேலாண்மைத்திறம்
- அணியின் வாக்குறுதியை நிறைவேற்ற, விரைவோட்ட நோக்கங்களை அடையும் பொருட்டு தம்மை நிர்வகிக்கும் திறம்
சந்திப்புகள் (விரிவாக)
[தொகு]தினசரி இசுக்கிர சந்திப்பு
[தொகு]ஒவ்வொரு நாளும் இசுக்கிர அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பர்:
- நீ நேற்று என்ன செய்தாய்?
- இன்று என்ன செய்வாய்?
- நீ எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?
இது போன்ற தினசரி சந்திப்புகளால் அணி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற முடியும். தினசரி இசுக்கிர சந்திப்புகளில் மேலெழும் பிரச்சினைகளை தீர்க்க, இசுக்கிர முதன்மையாளர் அணிக்கு உதவி புரிவார்.
விரைவோட்ட திட்ட சந்திப்பு
[தொகு]ஒவ்வொரு விரைவோட்டத்தின் முதல்நாளன்று விரைவோட்ட திட்ட கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பு உரிமையாளர், இசுக்கிர முதன்மையாளர் மற்றும் அணியினர் ஆகியோர் பங்கேற்பர். அவசியமிருந்தால் பங்குடையோரும் பங்கேற்கலாம். இந்தக்கூட்டம் ஒன்றிலிருந்து இரண்டு மணிநேரம் வரை நீடிக்கும். விரைவோட்டத்தின் கால அளவைப் பொறுத்து அது மாறுபடும். உதாரணமாக, ஒரு நான்கு வார விரைவோட்டத்தின் திட்டமிடல் கூட்டம், சில சமயங்களில் நான்கிலிருந்து எட்டு மணிநேரம் வரை கூட நீடிக்கும்.
இந்த சந்திப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும்.
முன் திட்டமிடல் கூட்டம்
[தொகு]- தயாரிப்பு உரிமையாளர் தனது தயாரிப்புப் பொருட்பட்டியலிலுள்ள செயற்கூறுகளைப் பற்றியும், அவை எதன் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டன எனவும் விளக்கமளிப்பார்.
- அணியினர் செயற்கூறுகளைக் குறித்த விவரங்களை புரிந்துகொள்வர்.
- தயாரிப்பு உரிமையாளர் இந்த கூட்டத்தில் மேலெழும் அணியினரின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவார்.
திட்டமிடல் கூட்டம்
[தொகு]- அணியினர் இந்த விரைவோட்ட காலத்தில் தம் கைவசமுள்ள நேரத்தின் அடிப்படையில், நிறைவேற்றப்படவேண்டிய செயர்கூறுகளை 'தயாரிப்புப் பொருட்பட்டியலில்' இருந்து தேர்ந்தெடுப்பர்.
- இந்த விரைவோட்டத்தில் இத்தனை செயர்கூறுகளை செய்து முடிப்போம் என்பதை அணி தான் முடிவு செய்து வாக்குறுதியளிக்கும். இசுக்கிரத்தில் இதனை அணியின் வாக்குறுதி என்று அழைப்பர்.
- அணியின் இந்த முடிவில் தயாரிப்பு உரிமையாளரோ, இசுக்கிர முதன்மையாளரோ அல்லது மற்ற பங்குடையாரோ தலையிடக் கூடாது என்பது இசுக்கிர விதி.
- அவை பணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பணியும் அணியினரால் நிறைவேற்ற தேவையான நேரம் கணிக்கப்படும்.
விரைவோட்ட ஆய்வு சந்திப்பு
[தொகு]இந்த சந்திப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும்.
- விரைவோட்ட முன் ஆய்வுக் கூட்டம்
- விரைவோட்ட பின் ஆய்வுக் கூட்டம்
விரைவோட்டம்
[தொகு]இசுக்கிரம் முறையில் ஒரு திட்டம் செயற்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. அந்தச் செயற்கூறுகள் முக்கியத்துவம் அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன. பொதுவாக ஒன்றிலிருந்து நான்கு கிழமைகளில் நிறைவேற்றப்படக்கூடிய செயற்கூறுகள் ஒரு தொகுதியாக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியும் நிறைவேற்றப்படவேண்டிய பணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு தொகுதி இறுதியிலும் மெய்த்தேர்வு செய்யப்பட்ட (பரிசோதிக்கப்பட்ட) 'செயல்புரியும் மென்பொருள்' உருவாக்கப்படும். இவ்வாறு ஒன்றிலிருந்து நான்கு கிழமைகளில் ஒரு தொகுதியை நிறைவேற்றி, செயல்புரியக்கூடிய, விற்பனைக்கு தகுதிவாய்ந்த மென்பொருளை உருவாக்கலை விரைவோட்டம் (Sprint) என்பர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்த இணைப்பில் கென் சுவாபர் இசுக்கிரமை மிக அருமையாக விளக்கி இருக்கிறார் - https://www.youtube.com/watch?v=_47VWIvOKH8