உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெஃப் சதர்லேண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெஃப் சதர்லேண்டு

முனைவர் ஜெஃப் சதர்லேண்டு ஒரு மென்பொருள் மேம்பாட்டு வல்லுனரும், ஆலோசகரும் ஆவார்.

மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் வழிமுறையான இசுக்கிரம் முறையியலை கென் சுவாபர் (Ken Schwaber) அவர்களுடன் சேர்ந்து 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தினார்.

OOPSLA'95 -ல் இசுக்கிர முறையியலை ஒரு முறையான வழிமுறையாக முன்வைப்பதற்காக கென் சுவாபர் அவர்களுடன் இணைந்து பணியாற்றி இசுக்கிர முறையியலின் முதல் பதிப்புகளை வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். இவர்கள் இருவரும் பல மென்பொருள் நிறுவனங்களில் இசுக்கிர முறையியலை நடைமுறைப்படுத்தி, விரிவாக்கி, மேம்படுத்தியுள்ளனர்.

ஜெஃப் அவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புகளையும், கொலராடோ மருத்துவப் பள்ளியில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

Scrum Guide எனப்படும் இசுக்கிர கையேட்டின் இணை ஆசிரியர். தற்போது அவர் Scrum Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஒபன்வியூ வெஞ்சூர் பார்ட்னர்ஸ் (OpenView Venture Partners) என்ற நிறுவனத்தின் மூத்த ஆலோசகராகவும் உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்_சதர்லேண்டு&oldid=2707266" இலிருந்து மீள்விக்கப்பட்டது