பூட்ஸ்டிராப் (தோற்றத்திற்கான கட்டமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூட்ஸ்டிராப்
Bootstrap
வடிவமைப்பு மார்க் ஓட்டோ, ஜேக்கப் தார்ன்டன்
தொடக்க வெளியீடு ஆகத்து 2011
(6 ஆண்டுகளுக்கு முன்னர்)
 (2011-08)
அண்மை வெளியீடு 3.0.2 / 6 நவம்பர் 2013
(4 ஆண்டுகள் ago)
 (2013-11-06) [1]
நிரல்மொழி எச்.டி.எம்.எல், சி.எஸ்.எஸ், ஜாவாஸ்கிரிப்ட்
இயக்கு முறைமை பல்வகை இயங்குதளங்கள்
அளவு 83.8 KB (archived)
உருவாக்க நிலை செயல்பாட்டில்
வகை எச்.டி.எம்.எல், சி.எஸ்.எஸ் சார்ந்த வடிவமைப்பு வார்ப்புருக்கள்
உரிமம் எம்.ஐ.டி உரிமம் (அப்பாச்சி உரிமம்)
இணையத்தளம் getbootstrap.com

பூட்ஸ்டிராப் (Bootstrap) என்பது இணையதளங்கள், இணையவழிப் பயன்பாடுகள் ஆகியவற்றில் பயன்படுத்தக் கூடிய இலவச கருவிகளின் தொகுப்பு. இவை எச்.டி.எம்.எல், சி. எஸ். எஸ் ஆகியவற்றைச் சார்ந்து இயங்கக் கூடிய வடிவமைப்பு வார்ப்புருக்களாகும். இவற்றைக் கொண்டு வலைத்தளங்களில் பல வசதிகளைப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்தினால், பயனரின் கருவிக்கேற்ப வலைத்தளங்களின் வடிவமைப்பு மாறி, எடுப்பான தோற்றம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டது.

இதுவே கிட்ஹப் தளத்தில் பரவலான திட்டம். [2]. நாசாவின் இணையதளத்திலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. [3][4]

வரலாறு[தொகு]

இணையதளங்களில் கருவிகள் வெவ்வேறாக இருந்தமையால் சிக்கல் எழுந்தது. இதற்கான தீர்வுகாண, டுவிட்டரில் பணியாற்றிய மார்க் ஓட்டோ, ஜேக்கப் தார்ன்டன் ஆகியோர் பூட்ஸ்டிராப் என்னும் கருவியை வடிவமைத்தனர்.

வசதிகள்[தொகு]

பூட்ஸ்டிராப், எச்.டி.எம்.எல் 5, சி.எஸ்.எஸ் 3 ஆகியவற்றுடன் இயங்காது. பெரும்பாலான வலை உலாவிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இதன் தளத்தில் இருந்து இலவ்சமாக பதிவிறக்கி, உங்கள் கணினியில் பயன்படுத்தலாம்.

இது 2.0 என்ற பதிப்பில் வெளியானது. இது கட்டற்ற மென்பொருள் என்பதால், விரும்பும் யாவரும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இதன் ஆவணங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Bootstrap 3.0.2 released
  2. "GitHub: Search Stars>1". பார்த்த நாள் 5 October 2013.
  3. "NASA - Spot The Station" (2012-11-06).
  4. "MSNBC - Breaking News" (2012-11-06).

இணைப்புகள்[தொகு]