உள்ளடக்கத்துக்குச் செல்

சலாபஞ்சிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலாபஞ்சிகா, போசளர் சகாப்த சிற்பம், பேளூர், கர்நாடகா, இந்தியா

சலாபஞ்சிகா (salabhanjika) சிலாபாலிகா எனவும் அறியப்படும் இது இந்திய கலைகளிலும், இலக்கியங்களிலும் பலவிதமான அர்த்தங்களைக் கொண்ட ஒரு சொல்லாகும். [1][2] [3] இது பெண்பால் அம்சங்களைக் காட்டுகிறது. சமசுகிருதத்தில் இந்த வார்த்தையின் அர்த்தம் ஒரு மரக்கிளையை வைத்திருக்கும் பெண் என்பதாகும். இது மதானிகா என்றும் அழைக்கப்படுகிறது. சலாபஞ்சிகா என்பது ஒரு பொதுவான அலங்காரச் சிலையாகும். மேலும், புத்த, இந்து மற்றும் சமண கட்டிடக்கலைகளின் மத மற்றும் மதச்சார்பற்ற இடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்படும் இந்தியச் சிற்பமாகும்.

பௌத்த இலக்கியங்களில், சலாபஞ்சிகா ஒரு பண்டைய இந்தியத் திருவிழாவாகக் குறிக்கிறது. புத்தரின் வாழ்க்கைச் சூழலில் சால் மரம் பூக்கும் போது இது கொண்டாடப்படுகிறது. [4]

பௌத்தத் தளங்களிலுள்ள, தாது கோபுரங்களில் மரத்தாலான ஒரு அழகிய பெண்ணைக் காண்பிக்கின்றன. பொதுவாக புத்தரின் தாய் மாயா வைத்திருப்பது போன்று ஒரு மரக் கிளையை வைத்துள்ளன.

சாஞ்சி தூபித் தளத்தின் கிழக்கு நுழைவாயிலில் ஒரு மரத்தின் கீழ் சலாபஞ்சிகா
பொ.ச. 1100-ல் கட்டப்பட்ட கர்நாடகாவில் ஜலசங்வியிலுள்ள ஈசுவரர் கோவிலில் பல சலாபஞ்சிகாக்கள் உள்ளன. இந்த சிலையில் எந்த மரமும் இல்லை. ஒரு பெண் கன்னட எழுத்துக்களில் கல்வெட்டு ஒன்றை எழுதுகிறார்.

சலாபஞ்சிகா என்ற சொல் சலா மற்றும் பஞ்சிகாவை உள்ளடக்கிய ஒரு கூட்டு சமசுகிருத வார்த்தையாகும். பஞ்சிகா என்ற சொல்லின் அர்த்தம் 'உடைத்தல், குறுக்கிடுதல்'. சலா என்ற சொல்லின் பொருள் "வீடு, இடம், அடைப்பு, சுவர், அரசவை" உதாரணம்- தர்மசலா (ஓய்வு இல்லம்) அல்லது கோசலா (மாடுகளுக்கு ஓய்வு இடம்). [5] இதே சொல் வீடுகளையும் பிற கட்டிடங்களையும் கட்ட பயன்படும் ஒரு மதிப்புமிக்க மரமான சால் மரத்தையும் குறிக்கிறது. சமசுகிருத அறிஞரான வோகலின் கூற்றுப்படி, இந்திய மரபுகளில் சலாபஞ்சிகா என்ற வார்த்தையின் வெவ்வேறு அர்த்தங்கள் சால் மரத்தின் அந்தந்த முக்கியத்துவத்துடன் இணைக்கப்படலாம், புத்த மரபு அதை புத்தரின் பிறப்புடன் தொடர்புபடுத்துகிறது. அதே சமயம் இந்து மற்றும் சமண மரபுகள் ஒரே மாதிரியாக சிலைகள் மற்றும் பிற கலைப் பொருட்களை உருவாக்குவதற்கான மரமாக வகைப்படுத்துகிறது. [6]

இந்துக்கள் மற்றும் சமணர்களின் கலை மற்றும் இலக்கியங்களில், சலாபஞ்சிகா என்ற சொல் தூணிலும், சுவரிலும், அல்லது மண்டபத்திலும் உள்ள சிலையைக் குறிக்கிறது என்று வோகல், ஆச்சார்யா போன்ற பிற அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். [7] [8]

இருப்பிடங்கள்[தொகு]

பௌத்த மரபுகளில், சால் மரத்துடன் புகழ்பெற்ற சலாபஞ்சிகா சிற்பங்கள் பர்குத்திலும், உலக பாரம்பரிய தளமான ராய்சென் மாவட்டத்திலுள்ள சாஞ்சி தூபியின் நுழைவாயில்களிலும் காணப்படுகின்றன. பட்னாவுக்கு அருகில், ஒரு சலாபஞ்சிகாவின் மற்றொரு உதாரணம் பௌத்த தூபியுடன் தோண்டப்பட்டது.

இந்து மரபுகளில், சால் மரம் இல்லாத புகழ்பெற்ற சலாபஞ்சிகா சிற்பங்களில் 12 ஆம் நூற்றாண்டின் தென் மத்திய கர்நாடகாவில் உள்ள பேலூர், ஹளேபீடு சோமநாதபுரம் போன்ற இடங்களில் போசளர் கோயில்களில் சில பிரபலமான சலாபஞ்சிகா சிற்பங்கள் உள்ளன உள்ளன. இந்து மற்றும் சமணக் கோவில்களில் உள்ள சில சலாபஞ்சிகாவில் சிலை அல்லது நிவாரணத்தின் பின்புறம் அல்லது பக்கவாட்டில் பூ அல்லது கொடியின் உருவங்களின் அலங்காரங்கள் இருக்கிறது.

இந்தியா, நேபாளம், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியாவின் பல வரலாற்று கோயில்களில் சலாபஞ்சிகாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு கர்நாடகாவின் ஜலசங்வியிலுள்ள சாளுக்கிய கால கோயில், திரிபாக (S வடிவம்) வடிவத்தில் பல உள்ளன. இந்த ஆரம்பகால சிற்பங்கள் பிற்கால போசள அடைப்புக்குறி -உருவங்களுக்கு உத்வேகம் அளித்தன.

தொடர்புடைய குறிப்புகள்[தொகு]

இந்திய துணைக் கண்டத்தின் பண்டைய இலக்கியங்களில் சால் மரம் பெரும்பாலும் அசோகு மரத்துடன் தவறாகக் கருதப்படுகிறது. [9] லும்பினியிலுள்ள ஒரு தோட்டத்தில் ஒரு அசோக மரத்தின் கீழ் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தபோது, ​​அதன் கிளையைப் பிடித்தபடி இருக்கும் சாக்கிய இராணி மாயாவின் நிலையும் சாலபஞ்சிகாவின் நிலைப்பாடு தொடர்புடையது. [10] சில ஆசிரியர்கள் சலாபஞ்சிகா மரத்தின் அடியில் இருக்கும் ஒரு இளம் பெண்ண்ணின் உருவம், கருவுறுதலின் பண்டைய மர தெய்வம் என்று கூறியுள்ளனர்.[11]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Salabhanjika
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 1. "Sandstone figure of Shalabhanjika Yakshi, stupa 1 at Sanchi, Central India, 1st century AD". British Museum. பார்க்கப்பட்ட நாள் May 11, 2013.
 2. "Temple Strut with a Tree Goddess (Shalabhanjika)". The Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் May 11, 2013.
 3. "salabhanjika". Asia Society Reference. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-02-23.
 4. J Ph Vogel (1929). "The woman and tree or Salabhanjika in Indian Arts and Literature". Acta Orientalia 7: 202–209. https://archive.org/details/in.ernet.dli.2015.71005/page/n209/mode/2up. 
 5. Monier Monier Williams (1994 updated), Sanskrit English Dictionary, शाल śāla śālá, page 260
 6. J Ph Vogel (1929). "The woman and tree or Salabhanjika in Indian Arts and Literature". Acta Orientalia 7: 202–209. https://archive.org/details/in.ernet.dli.2015.71005/page/n209/mode/2up. J Ph Vogel (1929). "The woman and tree or Salabhanjika in Indian Arts and Literature". Acta Orientalia. 7: 202–209.
 7. J Ph Vogel (1929). "The woman and tree or Salabhanjika in Indian Arts and Literature". Acta Orientalia 7: 206–219. 
 8. Louis H. Gray (1906). "The Viddhaśālabhañjikā of Rājaśekhara, Now First Translated from the Sanskrit and Prākrit". Journal of the American Oriental Society 27: 3–4. https://archive.org/details/sim_journal-of-the-american-oriental-society_1906_27/page/3. 
 9. Eckard Schleberger, Die indische Götterwelt. Gestalt, Ausdruck und Sinnbild Eugen Diederich Verlag. Cologne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-424-00898-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-424-00898-2
 10. Buddhistische Bilderwelt: Hans Wolfgang Schumann, Ein ikonographisches Handbuch des Mahayana- und Tantrayana-Buddhismus. Eugen Diederichs Verlag. Cologne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-424-00897-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-424-00897-5
 11. Heinrich Zimmer, Myths and Symbols in Indian Art and Civilization. (1946)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாபஞ்சிகா&oldid=3520739" இலிருந்து மீள்விக்கப்பட்டது