கருவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவளம் என்பது அங்கியொன்று தமது குட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் இயற்கை கொள்திறன். கருவள வீதம் என்பது இதனை அளவிடும் அளவீடாக பால் இணைவில் ஈடுபடும் சோடிகளின் எண்ணிக்கைக்கு கிடைக்கும் குட்டிகளின் விகிதம் ஆகும். இது கருத்தரிப்புவீதம் எனும் பதத்திலிருந்து வேறுபட்டது. கருத்தரிப்பு வீதம் என்பது கருமுட்டை உருவாகும் வீதமாகும்.

மனித கருவளம் தங்கியுள்ள காரணிகளாவன: ஊட்டச்சத்து, மனித பாலியல் நடவடிக்கைகள், இரத்த உறவு, பண்பாடு, உள்ளுணர்வு, உட்சுரப்பியல், நேரம், பொருளாதாரம், வாழ்க்கை முறை, மற்றும் உணர்ச்சி.

மக்கட்தொகை[தொகு]

மக்கட்தொகை என்பது உண்மையான குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும்..[1][2] கருவள வீதத்தை அளவிட முடியும், ஆனால் கருத்தரிப்பு விகிதத்தை அளவிட முடியாது. கருவளம் பல்வேறு வழிகளில் அளவிடப்படுகின்றது. முக்கியமாக இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. அவை "கால அளவு" மற்றும் "மக்கட் குழு" அளவீடுகள் ஆகும். கால அளவு அளவீட்டில் குறித்த ஆண்டில் பெறப்பட்ட சனத்தொகையும்,மக்கட் குழு அளவீட்டில் ஒரே வகை மக்கள் குழு குறித்த ஆண்டுகளில் அதிகரித்த அளவும் கணிக்கப்படும்.[3]

கால அளவு அளவீடுகள்[தொகு]

 • பிரித்தறியா பிறப்பு வீகிதம் (CBR) -குறித்த ஆண்டொன்றில் அதன் நடுப்பகுதியில் உயிருடன் இருக்கும் 1000 பேருக்கு உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இதுவாகும். இதன் பிரதிகூலம் குறித்த குடித்தொகைகளில் வயது கட்டமைப்பு தாக்கம் செலுத்துவதாகும்.
 • பொதுக் கருவள விகிதம் (GFR) - குறித்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15-44 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையால் பிரித்து 1000ஆல் பெருக்க வருவது. இது குழந்தை பெறும் வாய்ப்புள்ள தாய்மாரை கருத்திலெடுப்பதுடன் வயது வேறுபாடு கருத்தில் கொள்ளப்படும்.
 • குழந்தை- பெண் விகிதம் (CWR) - 5 வயதுக்குக் குறைவான பிள்ளைகளின் எண்ணிக்கையை 15-49 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையால் பிரித்து 1000 ஆல் பெருக்க வருவது.இது வரலாற்றுத் தகவல்களை பரிமாறுவதில் பயன்படும்.
 • கருவள கூல் சுட்டி - வரலாற்று ஆய்வுகளில் பயன்படும் விசேட கருவி.

மக்கட்குழு அளவீடு[தொகு]

2018இல் உள்ளபடி நாடுகள் வாரியாகமொத்த கருவள வீதம்
 • மொத்தக்கருவள வீதம் (TFR) - ஒரு பெண் தன் ஆயுட்காலத்தில் பேறும் குழந்தைகளின் எண்ணிக்கை. மொத்தக் கருவளவீதம், குறித்த வயதுக்கான கருவள வீதம்(ASFR) போல் ஐந்து மடங்காகக் காணப்படும்.[4]
 • முழு இனப்பெருக்க வீதம் (GRR) - மக்கள் தொகையை உருவாக்கக்கூடிய பெண் குழந்தைகளின் எண்ணிக்கை. இது பெண்குழந்தைகள் வளர்ந்து 50 வயதுவரை உயிர் வாழ்வர் என்ற எடுகோளைக் கொண்டது.
 • நிகர இனப்பெருக்க வீதம் (NRR) - மக்கள் தொகையை உருவாக்கக்கூடிய பெண் குழந்தைகளின் எண்ணிக்கை எனும் முழு இனப்பெருக்க வீதத்திலிருந்து சாத்தியமான 49 வயதுக்கு முன் மரணிக்கும் பெண்களின் மூலம் குறைவுபடும் மக்கட்தொகை கழிக்கப்படும். இதனால் NRR ஆனது GRRஐ விட சிறிதாயிருக்கும். ஆனால் இறப்புவீதம் மாறுபடுவதால் இது நாட்டுக்கு நாடு மாறுபடும். NRR = 1.0, என்பது ஒவ்வொரு சந்ததியிலும் வளர்ந்தவர்களாகும் பெண்கள் 1000 பென் குழந்தைகளைத் தருவார்கள் என்பதாகும்.

கருவளத்தில் சமூகப் பொருளாதாரக் காரணிகள்[தொகு]

ஒரு பெற்றோரின் குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் அந்த ஒவ்வொரு உறுப்பினரும் அதற்கு அடுத்த சந்ததியில் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை என்பன நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது.[5] அதிகரித்த கருவளத்தன்மையில் பொதுவாகப் பங்களிப்பு செய்யும் காரணிகள் சமய உணர்வு,[6] குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம்,[7] மற்றும் தாய்மைக்கான உதவி என்பவற்றை உள்ளடக்கும்.[8] கருவளத்தன்மை குறைவடைவதில் பங்களிப்புச் செய்யும் காரணிகள் வருமானம், கல்வி,[9] பெண் தொழிலில் பங்குபெறல்,[10] நகர வாழ்க்கை,[11], வீட்டுச் செலவு[12], அறிவுக் கூர்மை, வயது.

கருவள உயிரியல்[தொகு]

பெண்கள் கருத்தரிப்பதை அவர்களின் இயக்குநீர் வட்டங்கள் தீர்மானிக்கின்றன. இந்த வட்டம் சுமார் இருபத்தெட்டு நாட்கள் கொண்டது, இதில் கருத்தரிக்கக் கூடிய வளமான காலம் ஐந்து நாட்களாகும். ஆண்கள் தொடர்ச்சியாக கருவளம் கொண்டு காணப்படுவர். ஆயினும் அவர்களின் விந்தின் பண்பு, ஆரோக்கியம், விந்து விசிறலின் எண்ணிக்கை, சுற்றாடல் காரணிகள் என்பவற்றல் பாதிக்கப்படும்.

இரு பாலாரிடத்திலும் வயதுடன் கருவளம் குறைவடையும். பெண்களில் இது விரைவாக நிகழும்.

மாதவிடாய் வட்டம்[தொகு]

சூல் வெளியிடப்படுதலுடன் தொடர்பாக மதவிடாயின் நாளுக்கும் கருக்கட்டலுக்கான சந்தர்ப்பம்.[13]

மாதவிடாய் வட்டம் , பெண்களில் மாதவிடாய் வெளியேற்றத்துடன் தொடங்குகின்றது. அடுத்தது புடைப்பு அவத்தை, இதில் ஈஸ்திரஜன் மட்டம் அதிகரிக்க, புடைப்புத் தூண்டி இயக்குநீர் (FSH) சுரக்கப்பப்பட்டு சூலகத்திலிருந்து முட்டை முதிர்ச்சி அடையும். ஈஸ்திரஜன் உச்ச மட்டத்தை அடையும் போது மஞ்சள்சடல இயக்குநீர்(LH) சுரப்பதால் சூலகத்திலிருந்து சூல் வெளியேறும். மஞ்சள் சடல அவத்தையில், அதாவது சூல் வெளியேற்றத்தின் பின் LH மற்றும் FSH துண்டலால் மஞ்சள் சடலம் உருவாகும். இது புரோஜெஸ்டிரோனை உருவாக்கும். புரோஜெஸ்டிரோன் LH மற்றும் FSH ஆகியவற்றின் உருவாக்கத்தை நிரோதிக்கும். இதனால் (கருக்கட்டல் நிகழாத போது) மஞ்சள் சடலம் சிதைவடையும். மாதவிடாய் வட்டம் மீளநிகழும்.

மாதவிடாய் வட்டத்தின் குறித்த சில நாட்களிலேயே கருவளம் உயர்வாய் இருக்கும். இது பொதுவாக முட்டை வெளியேற்றத்தின் இரு தினங்கள் முன்னும் இரு தினங்கள் பின்னுமாயிருக்கும்.[14] இந்த கருவளக் காலம் பெண்ணுக்கு பெண் வேறுபடும். ஒரே பெண்ணில் கூட வெவ்வேறு மாதவிடாய் வட்டங்களில் வேறுபடலாம்.[15] வெளியேற்றப்பட்ட முட்டை சூலகத்திலிருந்து வெளியேறி 48 மணி நேரத்திற்கு கருவளமுள்ளதாகக் காணப்படும். கருப்பைப் பாதையில் விடப்படும் விந்து சராசரி 48முதல் 72 மணி நேரம் உயிர்வாழக்கூடியது.

பெண் கருவளம்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவில் பெண்கள் பருவமடையும் சராசரி வயது 12.5 வருடங்களாகும்.[16] பொதுவாக 12 முதல் 15 வயதை பெண் பூப்பெய்தும் வயதாக கொள்ளலாம். 80%மான பெண்கள் பூப்படைந்ததில் இருந்து ஒரு வருட காலத்திற்கு முட்டைவெளியேறாத மாதவிடாய்க்குட்படுவர்.மூன்றாம் ஆண்டுகளில் 50%மும் ஆறாவது வருடத்தில் 10%மும் இத்தகைய தன்மைக்குட்படுவர்.[17]

மாதவிடாய் நிறுத்தம் அவர்களின் நடு வயதான 48-55 வயது வரைக் காணப்படும்..[18][19] மாதவிடாய் இடைநிறுத்தம் காரணமாக இயக்கு நீர் சுரப்புகுறைவடைவதுடன் சூலகம் சுருங்க ஆரம்பிக்கும். இந்த பருவம் பெண்களின் கருவள அவத்தையின் முடிவுக் காலம் ஆகும்.

வயதுக்கும் பெண் கருவளத்திற்கும் இடையிலான பாதிப்புகள் குறித்து மருந்துப்பொருள் அல்லது செயற்கை முறை இல்லாத கருத்தரிப்பு 1670-1830 வரைக்குமான :[20]

 • வயது 30
  • 75% ஒரு வருடத்திற்குள் உயிருடன் பிறந்த ஒரு குழந்தையுடன் முடிவடையும் கருவுறுதலைக் கொண்டிருக்கும்.
  • 91% நான்கு வருடத்திற்குள் உயிருடன் பிறந்த ஒரு குழந்தையுடன் முடிவடையும் கருவுறுதலைக் கொண்டிருக்கும்.
 • வயது 35
  • 66% ஒரு வருடத்திற்குள் உயிருடன் பிறந்த ஒரு குழந்தையுடன் முடிவடையும் கருவுறுதலைக் கொண்டிருக்கும்.
  • 84% நான்கு வருடத்திற்குள் உயிருடன் பிறந்த ஒரு குழந்தையுடன் முடிவடையும் கருவுறுதலைக் கொண்டிருக்கும்.
 • வயது 40
  • 44% ஒரு வருடத்திற்குள் உயிருடன் பிறந்த ஒரு குழந்தையுடன் முடிவடையும் கருவுறுதலைக் கொண்டிருக்கும்.
  • 64% நான்கு வருடத்திற்குள் உயிருடன் பிறந்த ஒரு குழந்தையுடன் முடிவடையும் கருவுறுதலைக் கொண்டிருக்கும்.

[20]

உண்மையான இணைகளில் செய்யப்பட்ட கற்கைகளில் உயர் பெறுபேறுகள் பெரப்பட்டன: 2004 இல் 770 ஐரோப்பிய பெண்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 82%மான 35-39 வயது பெண்கள் ஒரு வருட காலத்தில் கருவுற்றதாக அறியப்பட்டது,[21] அதேவேளை 2013இல் 2820 தானிசுப் பெண்களில் 78%மானவர்கள் 35-40 வயதுடையவர்கள் ஒரு வருடத்தில் கருத்தரித்தனர்.[22]

மேற்கோள்கள்[தொகு]

 1. Frank, O. (27 September 2017). "The demography of fertility and infertility". www.gfmer.ch.
 2. Last, John M. "Fecundity and Fertility". Encyclopedia of Public Health. Archived from the original on 11 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2019 – via enotes.com. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 3. For detailed discussions of each measure see Paul George Demeny and Geoffrey McNicoll, Encyclopedia of Population (2003)
 4. Another way of doing it is to add up the ASFR for age 10-14, 15-19, 20-24, etc., and multiply by 5 (to cover the 5 year interval).
 5. Murphy, Michael (2013). "Cross-National Patterns of Intergenerational Continuities in Childbearing in Developed Countries". Biodemography and Social Biology 59 (2): 101–126. doi:10.1080/19485565.2013.833779. பன்னாட்டுத் தர தொடர் எண்:1948-5565. பப்மெட்:24215254. 
 6. Hayford, S. R.; Morgan, S. P. (2008). "Religiosity and Fertility in the United States: The Role of Fertility Intentions". Social Forces 86 (3): 1163–1188. doi:10.1353/sof.0.0000. பப்மெட்:19672317. 
 7. Lars Dommermuth; Jane Klobas; Trude Lappegård (2014). "Differences in childbearing by time frame of fertility intention. A study using survey and register data from Norway". Part of the research project Family Dynamics, Fertility Choices and Family Policy (FAMDYN)
 8. Schaffnit, S. B.; Sear, R. (2014). "Wealth modifies relationships between kin and women's fertility in high-income countries". Behavioral Ecology 25 (4): 834–842. doi:10.1093/beheco/aru059. பன்னாட்டுத் தர தொடர் எண்:1045-2249. 
 9. Rai, Piyush Kant; Pareek, Sarla; Joshi, Hemlata (2013). "Regression Analysis of Collinear Data using r-k Class Estimator: Socio-Economic and Demographic Factors Affecting the Total Fertility Rate (TFR) in India.". Journal of Data Science 11. http://www.jds-online.com/file_download/394/JDS-1130.pdf. பார்த்த நாள்: 2019-11-22. 
 10. Bloom, David; Canning, David; Fink, Günther; Finlay, Jocelyn (2009). "Fertility, female labor force participation, and the demographic dividend". Journal of Economic Growth 14 (2): 79–101. doi:10.1007/s10887-009-9039-9. 
 11. Sato, Yasuhiro (30 July 2006), "Economic geography, fertility and migration" (PDF), Journal of Urban Economics, archived from the original (PDF) on 8 ஆகஸ்ட் 2017, பார்க்கப்பட்ட நாள் 31 March 2008 {{citation}}: Check date values in: |archive-date= (help)
 12. Li, Ang (2019). "Fertility intention‐induced relocation: The mediating role of housing markets". Population, Place and Space. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/psp.2265. 
 13. Dunson, D.B.; Baird, D.D.; Wilcox, A.J.; Weinberg, C.R. (1999). "Day-specific probabilities of clinical pregnancy based on two studies with imperfect measures of ovulation". Human Reproduction 14 (7): 1835–1839. doi:10.1093/humrep/14.7.1835. பன்னாட்டுத் தர தொடர் எண்:1460-2350. https://archive.org/details/sim_human-reproduction_1999-07_14_7/page/1835. 
 14. "Archived copy". Archived from the original on 2008-12-21. பார்க்கப்பட்ட நாள் 2008-09-22.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 15. Creinin, Mitchell D.; Keverline, Sharon; Meyn, Leslie A. (2004). "How regular is regular? An analysis of menstrual cycle regularity". Contraception 70 (4): 289–92. doi:10.1016/j.contraception.2004.04.012. பப்மெட்:15451332. https://archive.org/details/sim_contraception_2004-10_70_4/page/289. 
 16. Anderson, S. E.; Dallal, G. E.; Must, A. (2003). "Relative Weight and Race Influence Average Age at Menarche: Results From Two Nationally Representative Surveys of US Girls Studied 25 Years Apart". Pediatrics 111 (4 Pt 1): 844–50. doi:10.1542/peds.111.4.844. பப்மெட்:12671122. 
 17. Apter D (February 1980). "Serum steroids and pituitary hormones in female puberty: a partly longitudinal study". Clin. Endocrinol. 12 (2): 107–20. doi:10.1111/j.1365-2265.1980.tb02125.x. பப்மெட்:6249519. 
 18. Takahashi, TA; Johnson, KM (May 2015). "Menopause.". The Medical Clinics of North America 99 (3): 521–34. doi:10.1016/j.mcna.2015.01.006. பப்மெட்:25841598. 
 19. Bourgeois, F. John; Gehrig, Paola A.; Veljovich, Daniel S. (1 January 2005). Obstetrics and Gynecology Recall. Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780781748797. https://books.google.com/?id=SozvHsW4VysC&pg=PA435&dq=gynecology%20menopause%20range%2048-55#v=onepage&q&f=false. 
 20. 20.0 20.1 A computer simulation run by Henri Leridon, PhD, an epidemiologist with the French Institute of Health and Medical Research:
 21. Dunson, David B.; Baird, Donna D.; Colombo, Bernardo (2004). "Increased Infertility With Age in Men and Women". Obstetrics & Gynecology 103 (1): 51–6. doi:10.1097/01.AOG.0000100153.24061.45. பப்மெட்:14704244. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2004-01_103_1/page/51. 
 22. Rothman, Kenneth J.; Wise, Lauren A.; Sørensen, Henrik T.; Riis, Anders H.; Mikkelsen, Ellen M.; Hatch, Elizabeth E. (2013). "Volitional determinants and age-related decline in fecundability: a general population prospective cohort study in Denmark". Fertility and Sterility 99 (7): 1958–64. doi:10.1016/j.fertnstert.2013.02.040. பப்மெட்:23517858. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவளம்&oldid=3761425" இலிருந்து மீள்விக்கப்பட்டது