உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வக்ய சிங் கத்தியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வக்ய சிங் கத்தியார்
Sarvagya Singh Katiyar
பிறப்பு1935
இந்தியா
இறப்பு09 அக்டோபர் 2018
பணிவிஞ்ஞானி
அறியப்படுவதுநொதியம்
விருதுகள்பத்ம பூசண்
பத்மசிறீ
ஆச்சார்யா பி.சி ராய் நினைவு பதக்கம்
பேராசிரியர் பி.என். கோசு நினைவு விருது
சோகா பல்கலைக்கழக உயர் விருது
புதிய நூற்றாண்டு உயரிய பட்டயம்
விஞ்ஞான் கொளரவ விருது
அறிவியல் திறமைக்கான தங்கப் பதக்கம்
அசுதோசு முகர்ச்சி நினைவு விருது
ஆர்.சி. மெக்ரோத்ரா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது.
வலைத்தளம்
web site

சர்வக்ய சிங் கத்தியார் (FRSC) (Sarvagya Singh Katiyar) என பிரபலமாக அறியப்படும் எசு. எசு. கத்தியார் ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார் [1] நொதிப்பியியலில் சிறப்பு நிபுணரும், லக்னோ, டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் இயக்குனரும் ஆவார்.[2][3] இவர் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் முன்னாள் தலைவரும், கான்பூரின் சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம் [4] மற்றும் சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராவார் . 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[5], 2009 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது.[6][7]

கல்வி

[தொகு]

சர்வக்ய சிங் கத்தியார், 1935 இல் பிறந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் முதுகலை அறிவியல் படித்தார். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வென்ற என். ஏ. ராமையாவின் வழிகாட்டுதலின் கீழ் கான்பூர்,தேசிய சர்க்கரை நிறுவனத்திலிருந்து 1962 இல் வேதியியல் இயக்கவியலில் பி.எச்.டி. முடித்தார்.[2][8]

பின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற இவர் , விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் ஜான் டபிள்யூ. போர்ட்டருடன் பணிபுரிந்தார். முதன்முறையாக கொழுப்பு அமில சின்தடேசு அணைவு நொதியின் இயக்கவியல் பொறிமுறையை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர இந்தியா திரும்பிய இவர் 1989 இல் வேதியியல் துறையின் தலைவரானார். 1994 வரை கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். (இன்றைய சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம்). 2007 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை தொடர்ச்சியாக நான்கு முறை இவர் இந்த பதவியை வகித்தார். பல்கலைக்கழக வரலாற்றில் அவ்வாறு பதவி வகித்த முதல் துணைவேந்தர் இவர்தான்.[3]

ஆராய்ச்சி

[தொகு]

கத்தியார் என்சைம்கள் எனப்படும் நொதிகள் மற்றும் அவற்றின் வடிவம் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாக அறியப்படுகிறது. இது கைனேசுகள் மற்றும் டீஹைட்ரஜனேஸ்கள் ஆகியவற்றின் வினையூக்கி களத்தைப் புரிந்துகொள்ள உதவியது. தொழில்துறை நோக்கங்களுக்காக வினையூக்க எதிர்வினைகளுக்கான நொதிகளின் பயன்பாட்டை விரிவுபடுத்தியது.[2] இவரது ஆய்வுகள் பியர் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 125 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[9]

இவர் பல முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு அவர்களின் படிப்பில் வழிகாட்டியுள்ளார். கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் அங்குள்ள துறைத் தலைவராக இருந்த காலத்தில் முதல் உயிர் வேதியியல்-பயோடெக்னாலஜி ஆய்வகம் நிறுவப்பட்டது. சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தராக 50 புதிய படிப்புகளைத் தொடங்கினார் என்றும் அறியப்படுகிறது. லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னணியில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.[3]

பணிகள்

[தொகு]

கத்தியார் தி வேர்ல்ட் அகாடமி ஆஃப் சயின்சஸ்,[10] தேசிய அறிவியல் அகாடமி, இந்தியா,[11] இந்திய தேசிய அறிவியல் அகாடமி மற்றும் நியூயார்க் அறிவியல் அகாடமி ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக ஊழியர் ஆவார். இவர் அமெரிக்க வேதியியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் வேதியியலுக்கான வேந்திய சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார் .[3] இவர் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் [12] மற்றும் இந்திய அறிவியல் காங்கிரசு சங்கத்தின் முன்னாள் தலைவராக உள்ளார். மேலும் உத்தரபிரதேச உயர் கல்விக்கான மாநில அமைப்புக்கு அதன் தலைவராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும், கூடுதல் உறுப்பினராகவும் இருந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Marquis Who's Who". Marquis Who's Who. 2015. Archived from the original on 8 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "INSA". Indian National Science Academy. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 "Zoom Info". Zoom Info. 2015. Archived from the original on 21 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "TOI". Times of India. 25 February 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
  5. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  6. "Padma Bhushan 2009". The Hindu. 26 January 2009. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
  7. Padma Awards Given Away. October 2009. https://books.google.ae/books?id=k2Ual-NgAVMC&pg=PT158&lpg=PT158&dq=Sarvagya+Singh+Katiyar&source=bl&ots=xJb-jYjnMP&sig=4DtkjglBH-H4KrzlGNyS7DIwUvA&hl=en&sa=X&ei=kiTWVJDSBcHhapjRgLgH&redir_esc=y#v=onepage&q=Sarvagya%20Singh%20Katiyar&f=false. 
  8. "Ramaiah". INSA. 2015. Archived from the original on 9 February 2015. பார்க்கப்பட்ட நாள் 8 February 2015.
  9. "Microsoft Academic Search". Microsoft Academic Search. 2015. Archived from the original on 19 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "TWAS". The World Academy of Sciences. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
  11. "NASI". NASI. 2015. Archived from the original on 15 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://web.archive.org/web/20160315081652/http://nasi.org.in/fellows.asp?RsFilter= ignored (help)
  12. "Edge Forum". Edge Forum. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வக்ய_சிங்_கத்தியார்&oldid=3929640" இலிருந்து மீள்விக்கப்பட்டது