சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அமைந்துள்ளது. இது உத்தரப் பிரதேச மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இத்துடன் எழுநூற்றுக்கும் அதிகமான கல்லூரிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. நான்கரை லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். கலை, அறிவியல், பொறியியல், கணினிப் பயன்பாடு, மேலாண்மை, உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கு கான்பூர் பல்கலைக்கழகம் என்ற பெயரும் உண்டு.

வளாகம்[தொகு]

இது 264 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. கலையரங்கம், வங்கி, உணவகம், நூலகம், விடுதி உள்ளிட்ட வசதிகளும் வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளன.

துறைகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • கவின்கலை
  • நூலகவியல்
  • இசை
  • உடல்கல்வி
  • மருத்துவம்

முன்னாள் மாணவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)