சரோனிக் வளைகுடா

ஆள்கூறுகள்: 37°47′N 23°23′E / 37.783°N 23.383°E / 37.783; 23.383
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோனிக் வளைகுடா
சரோனிக் வளைகுடா மற்றும் அதன் முக்கிய தீவுகள்
Location of the Saronic Gulf within Greece
Location of the Saronic Gulf within Greece
சரோனிக் வளைகுடா
கிரேக்கத்திற்குள் சரோனிக் வளைகுடாவின் அமைவிடம்
அமைவிடம்அட்டிகா மற்றும் பெலொப்பொனேசியா
ஆள்கூறுகள்37°47′N 23°23′E / 37.783°N 23.383°E / 37.783; 23.383
வகைவளைகுடா
பூர்வீக பெயர்Σαρωνικός κόλπος (கிரேக்கம்)
Part ofஏஜியன் கடல்
வடிநில நாடுகள்கிரேக்கம்

சரோனிக் வளைகுடா (Saronic Gulf, கிரேக்கம் : Σαρωνικός κόλπος, Saronikós kólpos ) அல்லது ஏஜினா வளைகுடா என்பது கிரேக்கதில், அட்டிகா மற்றும் ஆர்கோலிஸ் தீபகற்பங்களுக்கு இடையே உள்ள ஒரு வளைகுடா ஆகும். இது ஏஜியன் கடலின் ஒரு பகுதியாகும். இது கொரிந்தின் பூசந்தியின் கிழக்குப் பகுதியை வரையறுக்கிறது, மேலும் இது கொரிந்து கால்வாயின் கிழக்கு முனையாகும். வளைகுடாவில் உள்ள சரோனிக் தீவுகள் கிரேக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றவை. வளைகுடாவில் உள்ள மிகப்பெரிய தீவான, சலாமிஸ் தீவின் பெயரில், கிரேக்க பாரசீகப் போர்களில் குறிப்பிடத்தக்க கடற்படைப் போரான சலாமிஸ் போர் அழைக்கப்படுகிறது. மெகாரா வளைகுடா சரோனிக் வளைகுடாவின் வடக்கு முனையாக உள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த வளைகுடாவின் பெயரானது பிசிஃபே ஏரியில் (நவீன பிசிஃப்டா) மூழ்கிய தொன்மவியல் மன்னர் சரோனிடமிருந்து வந்தது.

வரலாறு[தொகு]

சலாமிஸ் போரானது, நவீன கால பைரேயசின் மேற்கில், சரோனிக் வளைகுடாவில் நடந்தது. சலாமிஸ் தீவில் நடந்த இந்த கடற்படைப் போரில் ஏதெனியர்கள் செர்கசை தோற்கடித்தனர், நவீன ஐரோப்பிய கலாச்சாரத்தின் தொட்டிலாக ஐகாலியோ உறுதிசெய்யப்பட்டது.

பழங்காலத் துறைமுகமான சென்கிரே இங்குதான் இருந்தது.

நிலவியல்[தொகு]

வளைகுடாவில் ஏஜினா, சலாமிஸ், போரோஸ் தீவுகளுடன் சிறிய தீவுகளான பட்ரோக்லோஸ் மற்றும் ஃப்ளீவ்ஸ் ஆகியவை உள்ளன. பிரேயஸ் துறைமுகம், வளைகுடாவின் வடகிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. முன்னர் பயன்பாட்டில் இருந்த எலினிகான் சர்வதேச விமான நிலையத்தின் தளம் இதன் வடகிழக்கில் உள்ளது.

வளைகுடாவில் போரோஸ் முதல் எபிடாரஸ் வரையிலும், கலாடாகி முதல் கினெட்டா வரையிலும், மெகாராவிலிருந்து எலியூசிஸ் வரையிலும், பிரேயஸிலிருந்து அனாவிஸஸ் வரையிலும் கடற்கரைகள் வரிசையாக அமைந்துள்ளன. ஏதென்சின் நகர்ப்புற பகுதியை இந்த வளைகுடாவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள் சூழ்ந்துள்ளன.

இந்த வளைகுடாவில் பலேரோன் விரிகுடா, வடக்கே எலெஃப்சினா விரிகுடா, வடமேற்கில் கெக்ரிஸ் விரிகுடா கிழக்கில் சோஃபிகோ விரிகுடா ஆகிய விரிகுடாக்கள் உள்ளன.

மெத்தனாவின் எரிமலை தென்மேற்கில் கிரோமியோனியாவுடன் கொரிந்த், ஏஜினா மற்றும் போரோஸின் பூசந்தியில் அமைந்துள்ளது. மெத்தனா மிகவும் இளம் எரிமலை மையமாகவும் உள்ளது. மேலும் மிலோஸ் தீவு, சாண்டோரினி தீவு, நிசிரோஸ் தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாட்டில் உள்ள எரிமலைகளின் சைக்லாடிக் வளைவின் வடமேற்கு முனையாக உள்ளன. மெத்தனாவில் உள்ள ஒரு நீர்மருத்துவமுறை சார்ந்த மருத்துவ நிறுவனம், அப்பகுதியில் வெளிப்பட்டுவரும் சூடான கந்தக நீரை பயன்படுத்துகிறது. மிக சமீபத்திய எரிமலை வெடிப்பு என்பது 17 ஆம் நூற்றாண்டில் மெத்தனாவுக்கு வடக்கே கடலுக்கு அடியில் வெடித்தது.

வளைகுடாவில் கொரிந்தின் கிழக்கே மற்றும் அஜியோ தியோடோரோய், எலியூசிஸ், அஸ்ப்ரோபிர்கோஸ், ஸ்கரமங்காஸ் மற்றும் கெரட்சினிக்கு மேற்கே உள்ள வளைகுடாவின் வடக்குப் பகுதியைச் சுற்றி பொட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் கிரேக்கத்துக்கான பெரும்பகுயான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் அவற்றில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதால் பிரேயஸ், மற்றும் கால்வாயில் வணிக ரீதியான கப்பல் போக்குவரத்து போன்றவை வளைகுடாவை வணிக ரீதியான கப்பல் போக்குவரத்துடன் மிகவும் பரபரப்பான பகுதியாக ஆக்குகின்றன.

குறிப்பாக வடமேற்கு பகுதியில் பிளவுக்கோடு ஆதிக்கம் செலுத்துகின்றன.

போரோஸ் தீவில் இருந்து சரோனிக் வளைகுடாவின் பரந்த காட்சி

படகோட்டம்[தொகு]

சரோனிக் வளைகுடாவில் பாய்மரக் கப்பல் பயணம் பிரபலமாக உள்ளது.

வளைகுடா குறிப்பிடத்தக்க இரண்டு தொல்லியல் தளங்களைக் கொண்டுள்ளது: எபிடாரஸில் உள்ள பழங்கால அரங்கம் மற்றும் அருகிலுள்ள அஸ்க்லெபியோன் மற்றும் ஏஜினாவில் உள்ள அஃபாயா கோயில் ஆகியவை ஆகும்.

மற்றவை[தொகு]

சரோனிக் வளைகுடா ஏஜியன் கடலில் குறுகிய மூக்கு சாதாரண ஓங்கில்கள கூடும் பகுதிகளில் ஒன்றாகும். [1] அண்மைய காலங்களில், சுற்றுச்சூழல் நிலைமைகளை மேம்படுத்துவதன் காரணமாக துடுப்பு திமிங்கலங்கள் போன்ற பெரிய திமிங்கலங்கள் வளைகுடாவில் காணப்படுகின்றன. [2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோனிக்_வளைகுடா&oldid=3498759" இலிருந்து மீள்விக்கப்பட்டது