சரோஜினி புல்லா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜினி புல்லா ரெட்டி
Sarojini Pulla Reddy
மாநகரத்தந்தை, ஐதாராபாத்து மாநகராட்சி
முன்னையவர்இராணி குமுதினி தேவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 பிப்ரவரி 1923
மகபூப்நகர்
இறப்பு3 பெப்ரவரி 2013(2013-02-03) (அகவை 89)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மருத்துவர் புல்லா ரெட்டி போலும்பாலி
வாழிடம்(s)பவன்பாலி, ஐதராபாத்து

சரோஜினி புல்லா ரெட்டி (Sarojini Pulla Reddy)(1923-2013) என்பவர் ஐதராபாத்து மாநகராட்சியின் இரண்டாவது பெண் மாநகரத் தந்தை ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சரோஜினி புல்லா ரெட்டி 22 பிப்ரவரி 1923 அன்று ஐதராபாத் மாநிலத்தின் (தற்போது தெலங்காணா) மகபூப்நகரில் கொண்டா ரெட்டி மற்றும் அனுசுயா ரெட்டிக்கு மகளாகப் பிறந்தார்.[1]

பணி[தொகு]

சரோஜினி புல்லா ரெட்டி 1963-ல் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1964-ல் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இவர் 1965 முதல் 1966 வரை ஐதராபாத்து மாநகராட்சியின் இரண்டாவது பெண் மாநகரத்தந்தையாக இருந்தார். இவர் 1967 மற்றும் 1972-ல் மலக்பேட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1978-ல் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 1975-ல் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் முதல் தலைவரானார். இவர் 1979-ல் அப்போதைய முதல்வர் மாரி சென்னா ரெட்டியால் சட்ட சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.[2]

சரோஜினி புல்லா ரெட்டி 1978-82க்கு இடையில் தங்குதுரி அஞ்சய்யா, பவனம் வெங்கடராமி ரெட்டி மற்றும் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி ஆகியோரின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகம், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

ஐதராபாத்து காங்கிரசு குழுவின் தலைவராகப் பதவியேற்ற முதல் பெண் ரெட்டி ஆவார். இவர் ஜலகம் வெங்கல ராவ் பொறுப்பேற்ற காலத்தில் ஆந்திரப் பிரதேச காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர், இவர் அடுத்தடுத்த தலைவர்களின் கீழ் ஆந்திரப் பிரதேச காங்கிரசின் துணைத் தலைவராக இருந்தார். 2001-ல் கட்சியின்[3] உயர்ந்த கொள்கை உருவாக்கும் அமைப்பான காங்கிரசு செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சரோஜினி ரெட்டி 1945-ல் மருத்துவர் புல்லா ரெட்டி போலம்பள்ளியை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் இருந்தார். கணையப் புற்றுநோயின் காரணமாக சரோஜினி பிப்ரவரி 3, 2013 அன்று போவன்பல்லி இல்லத்தில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sarojini Pulla Reddy".
  2. "Sarojini Pulla Reddy dead" (in en-IN). The Hindu. 2013-02-04. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/sarojini-pulla-reddy-dead/article4378137.ece. 
  3. Jafri, Syed Amin (2001-02-12). "'It is a reward for my loyalty'". www.rediff.com.
  4. Shashank (February 6, 2013). "GHMC pays rich tributes to Sarojini Pulla Reddy". The Siasat Daily – Archive (in அமெரிக்க ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_புல்லா_ரெட்டி&oldid=3688993" இலிருந்து மீள்விக்கப்பட்டது