சரகோசா
சரகோசா | |
---|---|
![]() தூண் அன்னை பசிலிக்காவும் எப்ரோ ஆறும் | |
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சி சமூகம் | அரகோன் |
மாநிலம் | சரகோசா மாநிலம் |
கொமார்க்கா | சரகோசா |
மாவட்டங்கள் | காசுக்கோ அன்டிங்கோ, சென்ட்ரோ, டெலிசியசு, யுனிவர்சிடாடு, சான் ஓசே, லாசு புயென்தசு, லா அல்மோசாரா, ஓலிவர்-வால்டர்பெரோ, டார்ரெரோ-லா பாசு, மார்கன் இசுகுயர்டா, பரியோசு ரூரல்சு நார்ட்டே, பரியோசு ரூரல்சு ஓஸ்ட்டே |
அரசு | |
• வகை | மேயர்-மன்றம் |
• நிர்வாகம் | அயுனாட்மியென்டோ டெ சரகோசா |
• நகரத்தந்தை | யுவான் ஆல்பர்ட்டோ பெல்லோக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,062.64 km2 (410.29 sq mi) |
ஏற்றம் | 199 m (653 ft) |
மக்கள்தொகை (1 சனவரி 2010)எசுப்பானிய தேசிய புள்ளிவிவர நிறுவனம் (INE) | |
• மொத்தம் | 6,99,755 |
• அடர்த்தி | 660/km2 (1,700/sq mi) |
இனங்கள் | சரகோசனோ (ஆண்), சரகோசனா (பெண்) |
நேர வலயம் | CET (GMT +1) |
• கோடை (பசேநே) | CEST (GMT +2) (ஒசநே) |
Postcode | 50001 - 50018 |
ISO 3166-2 | ES-Z |
இணையதளம் | http://www.zaragoza.es/ |
சரகோசா (Zaragoza , /ˌzærəˈɡoʊzə, ˌsærəˈɡoʊsə, ˌθærəˈɡoʊθə/; எசுப்பானியம்: [θaɾaˈɣoθa]) [1] எசுப்பானியாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் அரகொன் தன்னாட்சி சமூகத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது எப்ரோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அரகொன் மற்றும் எப்ரோ ஆற்று வடிநிலத்தின் மையத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
செப்டம்பர் 1, 2010இல் சரகோசாவின் மக்கள்தொகை 701,090 ஆக இருந்தது.[2] இதன் நிர்வாக எல்லைக்குள்ளான நிலப்பரப்பு 1,062.64 சதுர கி.மீ (410.29 சதுர மைல்கள்) ஆகும். எசுப்பானியாவின் நகராட்சிகளில் இது மக்கள்தொகையின்படி ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நகர எல்லைகளுக்கான மக்கள்தொகைப்படியான வரிசையில் 32வதாக உள்ளது. பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 783,763 குடிகளாக 2006இல் மதிப்பிடப்பட்டது. அரகொன் மக்கள்தொகையில் 50 விழுக்காடு பேர் இந்த நகராட்சியில் வசிக்கின்றனர்.
நகரம் கடல்மட்டத்திலிருந்து 199 மீட்டர்கள் (653 அடிகள்) உயரத்தில் உள்ளது. சரகோசா 2008ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் நீர் மேலாண்மை மற்றும் பேணத்தகு மேம்பாடு குறித்த உலகக் கண்காட்சியை எக்ஸ்போ 2008 நடத்தியது. 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாக தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்டது.
நாட்டுப்புறக் கதைகள், உள்ளூர் சமையல்முறை, தூண் அன்னை பசிலிக்கா, லா சியோ பெருங்கோவில், அல்யபேரியா அரண்மனை போன்ற கட்டிடங்களுக்காக அறியப்பட்டது. இந்தக் கட்டிடங்கள் அரகொன் முதெகர் கட்டிடப்பாணியின் அங்கமாக உள்ளன;இவை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன உலகப் பாரம்பரியக் களமாக உள்ளன. எசுப்பானியாவில் முதன்மையாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் இங்கு கொண்டாடப்படும் தூண் திருவிழா (Fiestas del Pilar) ஒன்றாகும்.
தொடர்புள்ள பக்கங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Saragossa". Collins Dictionary. n.d. இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923232244/http://www.collinsdictionary.com/dictionary/english/saragossa?showCookiePolicy=true. பார்த்த நாள்: 26 September 2014.
- ↑ "Zaragoza supera los 700.000 habitantes". Heraldo.es. 2006-01-01 இம் மூலத்தில் இருந்து 2011-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716201215/http://www.heraldo.es/noticias/zaragoza/zaragoza_supera_los_700_000_habitantes.html. பார்த்த நாள்: 2011-04-10.
வெளி இணைப்புகள்[தொகு]

- Council of Zaragoza
- Zaragoza Tourism Board Official Website பரணிடப்பட்டது 2008-06-17 at the வந்தவழி இயந்திரம்
- Demographics in 2015: Zaragoza City council