சமோவான் ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமோவான் ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மியாக்ரா
இனம்:
மி. அல்பிவென்ட்ரிசு
இருசொற் பெயரீடு
மியாக்ரா அல்பிவென்ட்ரிசு
பியாலே, 1848
வேறு பெயர்கள்

பிளாட்டிரிஞ்சசு அல்பிவென்ட்ரிசு

சமோவான் ஈப்பிடிப்பான் (மியாக்ரா அல்பிவென்ட்ரிசு) என்பது மோனார்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சமோவாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் கிராமப்புற தோட்டங்கள் ஆகும். வாழ்விட இழப்பால் சமோவான் ஈப்பிடிப்பான் அச்சுறுத்தப்படுகின்றன.

வகைப்பாட்டியல்[தொகு]

சமோவான் ஈப்பிடிப்பான் முதலில் பிளாட்டிரிஞ்சசு பேரினத்தின் கீழ் விவரிக்கப்பட்டது. இதன் வேறுபெயர்களாக சமோவான் அகண்ட அலகு, சமோவான் மியாக்ரா, சமோவான் மியாக்ரா ஈப்பிடிப்பான் மற்றும் வெண்புழை ஈப்பிடிப்பான் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Myiagra albiventris". IUCN Red List of Threatened Species 2016: e.T22707393A94121152. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22707393A94121152.en. https://www.iucnredlist.org/species/22707393/94121152. பார்த்த நாள்: 15 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோவான்_ஈப்பிடிப்பான்&oldid=3440936" இலிருந்து மீள்விக்கப்பட்டது