சப்பானிய உயிர்தகவலியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுருக்கம் JSBi
உருவாக்கம் 1999 ( 1999 )
வகை கற்ற சமுதாயம்
உறுப்பினர்

சப்பானிய உயிர்தகவலியல் சங்கம் (Japanese Society for Bioinformatics) என்பது 1999-ல் நிறுவப்பட்ட உயிர் தகவலியல் மற்றும் கணினி உயிரியல் சப்பானிய ஆராய்ச்சி சங்கமாகும்.[1] இந்தச் சமூகம் பன்னாட்டுக் கணக்கீட்டு உயிரியலின் இணைந்த பிராந்தியக் குழுவாகும்.[2] உயிர் தகவல்தொடர்புக்கான ஆசியச் சங்கங்களின் உறுப்பினராகவும் உள்ளது. சப்பானிய நிறுவனங்களான ஹிட்டாச்சி, புஜிட்சு மற்றும் ஷியோனோகி ஆகியவை இதன் துணை நிறுவன உறுப்பினர்களாகும்.[1][3]

2001ஆம் ஆண்டு முதல், சப்பானிய உயிர்தகவலியல் சமூகம் ஓக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிக்கப்பத்துடன் இணைந்து உயிர்தகவலியல் துறையில் சிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகளுக்காக சப்பானிய உயிர்தகவலியல் பரிசை வழங்கியுள்ளன.[4]

தலைவர்கள்[தொகு]

பின்வரும் நபர்கள் சப்பானிய உயிர்தகவலியல் சமூகத்தின் தலைவராக இருந்துள்ளனர்:

  1. மினோரு கனேஹிசா, கியோட்டோ பல்கலைக்கழகம் (1999-2004)
  2. சடோரு மியானோ, டோக்கியோ பல்கலைக்கழகம் (2004-2005)
  3. யுகிஹிரோ எகுச்சி, மிட்சுய் அறிவாற்றல் தொழிலக நிறுவனம் (2005-2006)
  4. கென்டா நகாய், டோக்கியோ பல்கலைக்கழகம் (2006-2008)
  5. ஒசாமு கோடோ, கியோட்டோ பல்கலைக்கழகம் (2008-2010)
  6. ஹிடியோ மட்சுடா, ஒசாகா பல்கலைக்கழகம் (2010-2013)
  7. கியோஷி அசாய் (அறிவியலாளர்), டோக்கியோ பல்கலைக்கழகம் (2013-2015)
  8. கென்டாரோ ஷிமிசு (அறிவியலாளர்), டோக்கியோ பல்கலைக்கழகம் (2015-2017)
  9. கெங்கோ கினோஷிதா, தோஹோகு பல்கலைக்கழகம் (2017–2019)
  10. வட்டாரு இவாசாகி, டோக்கியோ பல்கலைக்கழகம் (2019–)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nakai, Kenta (15 August 2007). "THE JAPANESE SOCIETY OF BIOINFORMATICS (JSBi)". Asia-Pacific Biotech News 11 (15): 1056–1057. doi:10.1142/S0219030307001140. 
  2. "Affiliates & COSIs". www.iscb.org. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
  3. "Japanese Society for Bioinformatics - JSBi :: 賛助会員". www.jsbi.org (in Japanese). பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Japanese Society for Bioinformatics - JSBi :: Oxford Journals - JSBi Prize". www.jsbi.org. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.

வெளி இணைப்புகள்[தொகு]