சன்னா இசுடீவர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்னா இசுடீவர்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டினோப்டெர்ஜி
வரிசை:
அனாபேண்டிபார்மிசு
குடும்பம்:
சன்னானிடே
பேரினம்:
சன்னா
இனம்:
ச. இசுடீவர்தி
இருசொற் பெயரீடு
சன்ன இசுடீவர்தி
லின்னேயசு, 1758
வேறு பெயர்கள் [2]
  • ஒபியோசெபாலசு இசுடீவர்தி பிளேபேர், 1867

சன்னா இசுடீவர்தி (Channa stewartii என்பது சன்னிடே குடும்பத்தில் உள்ள குள்ளமான பாம்புத் தலை மீனாகும்.[3] இவ்வகை விரால் மீன்கள் நேபாளம் மற்றும் இந்திய மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டது. இது வங்கதேசத்திலும் காணப்படுகிறது.[1] இந்த நன்னீர் மீன் பெரும்பாலும் மலைப்பகுதியில் உள்ள ஓடைகளில் வாழ்கிறது.[1] ஆனால் குளங்களிலும் காணலாம்.[2] இது உணவு மீனாகப் பயன்படுத்தப்படுவதைக் காட்டிலும் மீன் காட்சியகத்தில் பொதுவாகக் காணப்படுகிறது.[4] இந்த மீன் 25 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[2]

இதனுடையச் சிற்றினப்பெயரானது அசாம் காசாரில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய மேஜர் இராபர்ட்டு இசுடீவர்ட்டு நினைவாக இடப்பட்டது. இசுடீவர்ட்டு கச்சரிடமிருந்து மீன்களின் மாதிரிகளை அதிக அளவில் சேகரித்து பிளேபேரிடம் வழங்கியிருந்தார். அதிலிருந்த மீன்களில் சன்னா இசுடீவர்த்தியும் ஒன்று.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Chaudhry, S. (2010). "Channa stewartii". IUCN Red List of Threatened Species 2010: e.T166650A6255696. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166650A6255696.en. https://www.iucnredlist.org/species/166650/6255696. பார்த்த நாள்: 24 December 2019. 
  2. 2.0 2.1 2.2 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Channa stewartii" in FishBase. February 2019 version.
  3. "ITIS Standard Report Page: Channa stewartii". www.itis.gov.
  4. "Channa stewartii". archive.usgs.gov. Archived from the original on 2017-01-08. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  5. Christopher Scharpf; Kenneth J. Lazara (21 October 2019). "Order ANABANTIFORMES: Families ANABANTIDAE, HELOSTOMATIDAE, OSPHRONEMIDAE, CHANNIDAE, NANDIDAE, BADIDAE, and PRISTOLEPIDIDAE". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னா_இசுடீவர்தி&oldid=3553225" இலிருந்து மீள்விக்கப்பட்டது