உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தீப் சௌதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தீப் சௌதா
பிறப்பு1967/1968 (அகவை 55–56)[1]
புதுபுரம், கானா
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்1996–தற்போது வரை

சந்தீப் சௌதா (Sandeep Chowta) (பிறப்பு 1967 அல்லது 1968) ஓர் இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக பாலிவுட் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பணியாற்றுகிறார். மேலும், இந்தியாவில் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் என்ற இசைத்தட்டு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். [2] இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

2003 ஆம் ஆண்டில், சந்தீப் டெட் எண்ட் என்ற தலைப்பில் போதைப்பொருள்போதைப்பொருள்]] உபயோகிப்பதற்கு எதிரான ஆவணப்படத்தை தயாரித்தார். இது பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. பதினேழு வயது கல்லூரி மாணவியும் போதைப்பொருள் எதிர்ப்பு ஆர்வலருமான தன்யா குப்சந்தனி என்பவ்ர் இதைத் தயாரித்திருந்தார்.

2004 ஆம் ஆண்டில் சந்தீப் சௌதா தனது மும்பையில் இயங்கிவரும் ஏஓ மியூசிக் என்ற புது யுக இசையரங்கத்தில் அமெரிக்க ஜாஸ் இசைக்கலைஞர் ஜே ஆலிவர் மற்றும் இரிச்சர்ட் கன்னாவே ஆகியோரை சேர்த்து அவர்களை குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக்கினார். [3] [4] [5] ஏஓ மியூசிக் இசைக்கலைஞர்களான மிரியம் ஸ்டாக்லி, கார்ல் ஜென்கின்ஸ் ஆகியோரைக் கொண்ட அடிமஸ் என்ற இசைத் தொகுப்புகளின் குரல் மற்றும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் பாடல் குழுமங்களையும் கொண்டுள்ளது. சந்தீப்பின் முயற்சியால் ஏஓ மியூசிக்கின் இசைத் தொகுப்பு வெளியீடுகள் 2009 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் முதல் ஐந்து பட்டியலில் இடம்பிடித்துள்ளது. [6] [7] [8]

சந்தீப் 12 தெலுங்குத் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சந்தீப் சௌதா ஆப்பிரிக்க நாடானகானாவில் பிறந்தார். [9] நைஜீரியாவில் வளர்ந்தார். பின்னர் இந்தியாவின் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். இவர் பந்த் சமூகத்தைச் சேர்ந்த துளு எழுத்தாளரும் தொழிலதிபருமான த. கி. சௌதாவின் மகன். [9] [10] இந்திய வனவிலங்கு ஆராய்ச்சியாளர் பிரஜ்னா சௌதா இவரது சகோதரியாவார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Srinivasa, Srikanth (15 November 1999). "Music is his muse". Deccan Herald. Archived from the original on 19 April 1999. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
 2. "New musical direction". தி இந்து. 26 May 2007 இம் மூலத்தில் இருந்து 13 September 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080913041721/http://www.hindu.com/mp/2007/05/26/stories/2007052652070100.htm. 
 3. AllMusic artist album-"...and Love Rages On!"
 4. AllMusic artist album-"Twirl"
 5. Publicity Wire news article
 6. Zone Music Reporter Charts Top 100 February 2009–"Twirl"
 7. Zone Music Reporter Charts Top 100 August 2011–"...and Love Rages On!"
 8. ZMR Top 10 for April 2013
 9. 9.0 9.1 Correspondent (31 December 2005). "Sandeep Chowta to be back with a bang". manglorean.com இம் மூலத்தில் இருந்து 12 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140912161401/http://www.mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=1801. 
 10. Shivashankar (2013-10-25). "Keeping Tulu close to heart". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/keeping-tulu-close-to-heart/article5269471.ece. 
 11. Savitha Karthik (28 October 2010). "May we have the trumpets please". Deccan Herald. http://www.deccanherald.com/content/108716/may-we-have-trumpets-please.html. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_சௌதா&oldid=3927825" இலிருந்து மீள்விக்கப்பட்டது