உள்ளடக்கத்துக்குச் செல்

சதுபதி பிரசன்ன சிறீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுபதி பிரசன்ன சிறீ
Sathupati Prasanna Sree
நாரி சக்தி விருது 2022-ல் சிறீ பெற்றபோது
பிறப்பு2 செப்டம்பர் 1964 (1964-09-02) (அகவை 60)
தேசியம்இந்தியர்
பணிபேராசிரியர்
அறியப்படுவது
  • கிழக்கு மற்றும் மேற்கின் பின் நவீன இலக்கியத்தில் பெண்களின் மனோவியல்
  • மௌனத்தின் நிழல்கள்
  • சசி தேசுபாண்டேவின் நாவல்களில் பெண் - ஒரு ஆய்வு
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்சர்தார் படேல் மகாவித்யாலயா (முனைவர்), ஆந்திரப் பல்கலைக்கழகம் (முதுகலை), மாண்டிசோரி மகிளா கலாசாலா (இளங்கலை)[1][2]
கல்விப் பணி
துறைஆங்கில இலக்கியம், மொழியியல்
Sub-disciplineபிரித்தானிய கவிதை
கல்வி நிலையங்கள்ஆந்திரப் பல்கலைக்கழகம்

சதுபதி பிரசன்ன சிறீ (Sathupati Prasanna Sree)(பிறப்பு 2 செப்டம்பர் 1964)[3] என்பவர் இந்திய மொழியியலாளர் ஆவார்.

தொழில்

[தொகு]

சிறீ ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும், ஆய்வுக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[4] சிறீ தனது வாழ்நாள் முழுவதும் சிறுபான்மை பழங்குடி மொழிகளைப் பாதுகாப்பதிலும், இந்தியாவிற்குள் பழங்குடி மொழிகளுக்கான புதிய எழுத்து முறைகளை உருவாக்குவதிலும் பணியாற்றியுள்ளார்.[5][6]

சிறீ குபியா, கோயா, லிங்குவா போர்ஜா, ஜடாபு, கோண்டா-டோரா, கடபா, கோலம், கோண்டி, லிங்குவா கோதியா, சவரா, குர்ரு, சுகாலி, லிங்குவா கவுடு, முகதோரா மற்றும் ராணா மொழிகள் ஆகியவற்றிற்கான எழுத்து முறைகளை உருவாக்கியுள்ளார்.[1][7] 2022ஆம் ஆண்டுஅனைத்துலக பெண்கள் நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவருக்கு நாரி சக்தி விருதுவழங்கினார்.[4]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

சிறீயின் வெளியிடப்பட்ட எழுத்துக்கள்:

  • கிழக்கு மற்றும் மேற்கின் பின் நவீன இலக்கியத்தில் பெண்களின் மனோவியல் (Psychodynamics of the Women in the Post Modern Literature of the East and the West)
  • மௌனத்தின் நிழல்கள் (Shades of Silence)
  • ஷஷி தேஷ்பாண்டேவின் நாவல்களில் பெண் - ஒரு ஆய்வு (Woman in the Novels of Shashi Deshpande - A Study)[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Curriculum Vitae of Dr. Sathupati Prasanna Sree" (PDF). Andhra University. Retrieved 10 November 2017."Curriculum Vitae of Dr. Sathupati Prasanna Sree" (PDF). Andhra University. Retrieved 10 November 2017.
  2. "Professor Sathupati Prasanna Sree". LinkedIn. Retrieved 10 November 2017.
  3. "CV" (PDF). ijmer.in. Retrieved 30 April 2022.
  4. 4.0 4.1 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle Magazine. https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/. 
  5. "Language gets a new face". The Hindu. Retrieved 11 November 2017.
  6. "Scripting it!". Yo! Vizag. Retrieved 11 November 2017.
  7. "Professor Prasanna Sree". Omniglot. Retrieved 11 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுபதி_பிரசன்ன_சிறீ&oldid=3924926" இலிருந்து மீள்விக்கப்பட்டது