சஙீரான்
சஙீரான் ஆதி மனிதன் வாழிடம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
சஙீரானிலிருந்து பெறப்பட்ட படிமத்தின் மாதிரியுரு ("சஙீரான் 17") | |
வகை | பண்பாட்டு |
ஒப்பளவு | iii, vi |
உசாத்துணை | 593 |
UNESCO region | ஆசியா-பசுபிக்கு |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1996 (20th தொடர்) |
சஙீரான் (இந்தோனேசிய மொழி: Sangiran) என்பது இந்தோனேசியாவின் சாவகத் தீவில் உள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களமொன்றாகும். இப்பகுதியின் பரப்பளவு 48 கிமீ² ஆகும். இது நடுச்சாவக மாகாணத்தின் சுராகார்த்தா நகரிலிருந்து வடக்கே 15 கிமீ தொலைவில் சோலோ ஆற்றுப் பள்ளத்தாக்கிற் காணப்படுகிறது. இப்பகுதி 1996 இல் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோவினாற் குறித்துரைக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]1934 ஆம் ஆண்டு, மானுடவியலாளரான குசுத்தாவு ஃகையின்றிச்சு இரால்ஃபு வொன் கொயெனிக்சுவால்டு என்பவர் இப்பகுதியை ஆராயத் தொடங்கினார். அவரது ஆய்வு தொடங்கி சில ஆண்டுகளில் மனித மூதாதையரின் புதை படிமங்கள் சிலவற்றைக் கண்டெடுத்தார். அவற்றுக்குச் சாவக மனிதன் எனப் பெயரிடப்பட்டது. அறிவியலில் முதலில் Pithecanthropus erectus என்றறியப்பட்ட "சாவக மனிதன்" தற்போது Homo erectus எனக் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட 60 இற்கு மேற்பட்ட மனிதப் படிமங்களில் இதுவரை விவரிக்க இயலாத "கன்மண்டை" வடிவங்கள் காணப்பட்டன. இவற்றுக்குக் கூடுதலாக, அந்த முற்கால மானிடர்களால் வேட்டையாடப்பட்ட விலங்கினங்கள் பலவற்றினதும் அவர்களுடன் தமது வாழிடத்தைப் பகிர்ந்து கொண்ட விலங்கினங்களினதும் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த மனித எச்சங்கள் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழைமையானவை.[1] இவையே தற்போது கண்டறியப்பட்டுள்ள மனித எச்சங்களிற் காலத்தால் முந்தியவை.[2]
மேற்கோள்கள்
[தொகு]வெளித் தொடுப்புகள்
[தொகு]- உலக பாரம்பரியச் சுற்றுலாவின் 360° சஙீரான் அருங்காட்சியகக் காட்சி பரணிடப்பட்டது 2008-07-26 at the வந்தவழி இயந்திரம்
- சஙீரான் அருங்காட்சியகத் தங்குமிட விபரங்கள் பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்