ஆனைக் குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'ஆனைக் குகையின்' நுழைவாயில்
குளியல் தடாகம்
குளியல் தடாகத்தில் உள்ள சிலைகள்

ஆனைக் குகை (இந்தோனேசியம்: Goa Gajah) ஆனது இந்தோனேசியாவின் பாலித் தீவின் உபூது என்னும் இடத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. 9 ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்ட இது ஓர் அரணகமாகப் பயன்படுத்தப்பட்டது.[1]

கள விபரம்[தொகு]

குகையின் முகப்பில் பல்வேறு வகை உயிரினங்களின் சிலைகள் அமைந்துள்ளன என்பதுடன் குகையின் நுழைவாயிலில் பிசாசுகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் முதன்மையான சிலை ஒரு யானையினுடையதென்றே முன்னர் கருதப்பட்டது. அதனாற்றான் இதன் பெயர் ஆனைக் குகை என்று வழங்கப்படுகிறது. இத்தொல்லியற் களமானது 1365 இல் எழுதப்பட்ட தேசவர்ணனா எனப்படும் சாவகப் பாடலிற் குறிக்கப்பட்டுள்ளது. இத்தொல்லியற் களத்திலுள்ள பரந்த குளியற் தடாகமொன்று 1950 வரை கண்டறியப்படவில்லை.[2] இதிலுள்ள உருவங்கள் கெட்ட ஆவிகளை விரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டவை எனத் தோன்றுகின்றன.

உலக மரபுரிமை நிலை[தொகு]

இத்தொல்லியற் களம் 1995 ஒக்டோபர் 19 அன்று யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் தற்காலிகப் பட்டியலில் பண்பாட்டு வகையிற் பட்டியலிடப்பட்டது.[3]

வெளித் தொடுப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Davison, J. et al. (2003)
  2. Pringle, R. (2004) p 61
  3. Elephant Cave - UNESCO World Heritage Centre

உசாத் துணை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Goa Gajah
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 8°31′24.20″S 115°17′10.89″E / 8.5233889°S 115.2863583°E / -8.5233889; 115.2863583

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைக்_குகை&oldid=3582443" இருந்து மீள்விக்கப்பட்டது