க. ம. ஜார்ஜ் (எழுத்தாளர்)
க. ம. ஜார்ஜ் | |
---|---|
பிறப்பு | இடையரண்முலா, திருவிதாங்கூர் | 20 ஏப்ரல் 1914
இறப்பு | 19 நவம்பர் 2002 திருவனந்தபுரம் | (அகவை 88)
தேசியம் | Indian |
மற்ற பெயர்கள் | கரிம்புமண்ணில் மத்தாய் ஜார்ஜ் |
பணி |
|
அறியப்படுவது | மலையாள இலக்கியம், மலையாள கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
விருதுகள் |
|
கரிம்புமண்ணில் மத்தாய் ஜார்ஜ் ( Karimpumannil Mathai George ) (1914-2002), டாக்டர். கே.எம். ஜார்ஜ் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், ஓர் மலையாள எழுத்தாளரும் மற்றும் கல்வியாளரும் ஆவார். அறிஞர், நுட்பமான நிறுவனத் திறன்களைக் கொண்ட இலக்கிய விமர்சகர், ஒப்பீட்டு இந்திய ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களின் முன்னோடி என்றும் இவர் அறியப்படுகிறார். [1] இவர் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ, கேரள அரசின் உயரிய இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது மற்றும் மூன்றாவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்ம பூசண் போன்ற விருதுகளைப் பெற்றவர்.
சுயசரிதை
[தொகு]கே.எம். ஜார்ஜ் 20 ஏப்ரல் 1914 அன்று தென்னிந்தியாவின் கேரளாவின் இன்றைய பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள [[திருவிதாங்கூரிலுள்ள இடையரண்முலா என்ற இடத்தில் குரியன் மத்தாய் மற்றும் மாரியம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [2] மலக்கரா தொடக்கப் பள்ளி, இடையாரன்முலா மார்த்தோமா பள்ளி மற்றும் கோழஞ்சேரி புனித தாமஸ் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, அலுவா இயூனியன் கிருத்துவக் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெறுவதற்கு முன்பு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்தார். பின்னர் அங்கேயே விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ், தனது படிப்பையும் தொடர்ந்தார். 1941 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] சிம்லாவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி மற்றும் சிகாகோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராக இருந்தார். [2] ஹவாயிலுள்ள கிழக்கு-மேற்கு மையத்தில் மூத்த நிபுணராகவும் இருந்த ஜார்ஜ், இந்திய எழுத்தில் மேற்குலகின் தாக்கம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். [2] சாகித்ய அகாடமியுடன் அதன் தொடக்கத்திலிருந்தே தொடர்பிலிர்நுதார். மேலும், அதன் தென் மண்டலத்தின் செயலாளராகவும் இருந்தார். இவர் கேரள சாகித்ய அகாடமியின் துணைத் தலைவராகவும் இருந்தார். [2]
ஜார்ஜ் எலியம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1944 இல் திருமணம் நடந்தது. அவர் 19 நவம்பர் 2002 அன்று திருவனந்தபுரத்தில் தனது 88 வயதில் இறந்தார்.[2]
இலக்கியப் பணி
[தொகு]ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் சமமாகப் புலமை பெற்ற இவருக்கு பல இந்திய மொழிகளிலும் நல்ல புலமை இருந்தது. இவர் 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். சில படைப்புகளை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். 10 க்கும் மேற்பட்ட சிறந்த தொகுப்புகளைத் திருத்தியுள்ளார். [3] மலையாள இலக்கியத்தின் வரலாறு குறித்த சில அதிகாரபூர்வமான புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். [4] ராமசரிதம் மற்றும் ஆரம்பகால மலையாள ஆய்வு, என்பது இவரது திராவிட மொழியியல் துறையில் இவரது முனைவர் பட்ட ஆய்வேடு. அமெரிக்க வாழ்க்கை முறையின் கணக்கான அமெரிக்கன் லைவ்ஸ் த்ரூ இந்தியன் ஐஸ் என்ற ஆங்கிலப் படைப்பையும் எழுதினார். சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு தான் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய பயணக் குறிப்புகளையும் எழுதினார். [2] மலையாள கலைக்களஞ்சியம் மற்றும் ஒப்பீட்டு இந்திய இலக்கியம் ஆகியவற்றின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]இலக்கியம் மற்றும் பிற கல்வி விஷயங்களில் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக , டாக்டர் கே.எம். ஜார்ஜ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தை, கேரள அரசு இவரது நினைவாக நிறுவியுள்ளது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Who's who of Indian Writers, 1999
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi. Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "List of works". Kerala Sahitya Akademi. Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ K. M. Tharakan (1977). "Western Influence on Malayalam Language and Literature: by Dr. K. M. George, Sahitya Akademi, New Delhi". Indian Literature 20 (5): 129–133. https://www.jstor.org/stable/pdf/24158378.pdf. பார்த்த நாள்: 6 February 2023.
- ↑ . 20 March 2003. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Dr-K-M-George-study-and-research-centre-to-be-set-up/articleshow/40883504.cms.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Portrait commissioned by Kerala Sahitya Akademi". Kerala Sahitya Akademi. 2019-04-23. Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
- "Handwriting". Kerala Sahitya Akademi. 2019-04-23. Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.