கௌராமி
கௌராமி | |
---|---|
![]() | |
Dwarf gourami (Trichogaster lalius) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Osphronemidae |
Subfamilies & Genera[1] | |
|
கௌராமி மீன் (Gourami) இவை நன்னீர் மீன்களில் பேர்சிஃபார்மீசு என்ற வகையைச் சார்ந்த மீன் இனம் ஆகும். இவற்றின் பூர்வீகம் ஆசியாப் பகுதி நாடுகளான இந்தியா, பாக்கித்தான், மற்றும் மலாய் தீவுக்கூட்டம் துவங்கி வட-கிழக்கில் அமைந்துள்ளகொரியா வரைப் பரவியுள்ளது.
கௌராமி என்ற இந்த பெயர் சாவகம் மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும். தாவர உண்ணி மீன் வகையான இவை பெரிய வகை மீன்களுடன் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் இராட்சத கௌராமி, தடிப்பு உதடுடைய கௌராமி, குள்ளக் கௌராமி, [[முத்தமிடும் கௌராமி, முத்துக் கௌராமி, சொர்க்க மீன் எனப் பல வகைகள் உள்ளன. இதன் மேல் துடுப்பு நீட்டிக்கப்பட்டவையாக உள்ளது. இவற்றில் காணப்படும் மீன்களின் குஞ்சுகள் எப்போதும் பெற்றோரின் கவனிப்பிலேயே இருப்பதைக் காணமுடிகிறது. இவை சியாம் சண்டை மீன் போன்று குமிழி கூடு கட்டுகின்றன. இவை 15 பேரினத்துடன் 4 கிளை இனமாகப் பிரிக்கப்பட்டு 133 இனங்கள் பிரித்தறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
படத்தொகுப்பு[தொகு]
ஆண் பெண் குள்ளக் கௌராமி மீன்களில் உடல் வேறுபாட்டின் தோற்றம்
- Gold gourami.jpg
தங்க கௌராமியின் பிரித்தரிந்த தோற்றம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). "Osphronemidae" in FishBase. February 2014 version.