கோ சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோ சன்
கோ சன்
விண்ணோடி
 தேசியம் தென் கொரியர்
 பிறப்பு அக்டோபர் 19, 1976 (1976-10-19) (அகவை 39)
பூசான், தென் கொரியா
 பணி1 ஆய்வாளர்
 தேர்வு 2006 கொரிய விண்வெளி வீரர் தேர்வு
 திட்டங்கள் இல்லை
 1 முந்தைய அல்லது தற்போதைய.

கோ சன் தென் கொரியாவின் சம்சுங் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வாளர் ஆவார். இவர் தென் கொரியாவின் முதல் விண்ணோடியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கோ பூசான் நகரில் அக்டோபர் 19, 1976 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தைய இழந்த இவரையும் இவரது சகோதரியையும் தாயார் வளர்த்தார். மேல்நிலைப் பள்ளியில் சீன மொழியை முக்கிய பாடமாக கொண்டு தேர்ந்த கோ, சோல் தேசிய பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் இணைந்தார். 2004 ஆம் ஆண்டு தென்கொரிய தேசிய புதுனர் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப்பத்தக்கதைப் பெற்றார், மேலும் அதே ஆண்டு சீனாவின் சிஞியாங் மாகாணத்தில் உள்ள 7,546 மீட்டர் உயரமான முஸ்டக் அடா மலையையும் ஏறினார்.

விண்ணோடியாக[தொகு]

டிசம்பர் 25, 2006 அன்று கோ, சியுஸ் டி எம் ஏ-12 இல் (Soyuz TMA-12)இல் விண்ணோடுவதற்கான தென்கொரியாவின் முதல் விண்ணோடிக்கான தேர்வுகளில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானார். செப்டம்பர் 5, 2007 இல் தென்கொரிய விஞ்ஞான தொழிற்நுட்ப அமைச்சு, இரசியாவில் நடைப் பெற்ற பயிற்சி மற்றும் தேர்வுகளின் மூலம் கோவை 29வயதான யீ சூ யியொன்னுக்கு மேலாக தெரிவு செய்தது..[1][2]

வெளியிணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_சன்&oldid=1708156" இருந்து மீள்விக்கப்பட்டது