கோவிந்த் வசந்தா
கோவிந்த் வசந்தா | |
---|---|
பிறப்பு | 29 அக்டோபர் 1988 இரிஞ்ஞாலகுடா, திருச்சூர், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | கோவிந்த் மேனன் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது வரை |
பெற்றோர் | பீதாம்பரன் மேனன்-வசந்தகுமாரி |
வாழ்க்கைத் துணை | இரஞ்சனி மேனன் (தி. 2012) |
கோவிந்த் வசந்தா (Govind Vasantha) (பிறப்பு: அக்டோபர் 29, 1988) ஓர் இந்திய இசையமைப்பாளரும், பாடகரும், வயலின் இசைக்கலைஞரும் ஆவார். இவர் மலையாளத் திரையுலகிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் முக்கியமாக பணியாற்றுகிறார்.[1][2] இவர் 'தாணிக்குடம் பிரிட்ஜ்' என்ற இசைக் குழுவை நிறுவி நடத்தி வருகிறார். அதில் இவர் ஓர் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் இருக்கிறார்.[1] 96 என்ற தமிழ் படத்தில் தனது பணிக்காக சிறந்த இசை இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கோவிந்த், 1988 அக்டோபர் 29 அன்று பீதாம்பரன்- வசந்தகுமாரி தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் கேரளாவின் திரிச்சூரின் இரிஞ்ஞாலகுடாவிலுள்ள ஓர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் [3] மூத்த சகோதரர் கோபிநாதன் ஓர் கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். மேலும் இசையின் ஆரம்பகால வெளிப்பாடு இவரது மாமா மூலமாகவே இருந்தது. கோவிந்த், சாதியை அகற்றுவதற்கான முயற்சியாக மேனன் என்ற தனது குடும்பப் பெயரை தனது தாயின் பெயரான வசந்தா என்பதை எடுத்துக் கொண்டு, கோவிந்த் வசந்தாவாக மாறினார். இது ஒரு தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளிப்படுத்தப்பட்டது.[4] இவரது தந்தை 2012 ஆம் ஆண்டில் கேரள அரசின் நீர்ப்பாசனத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதிலிருந்து, தாணிக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவில் நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார்.[5] கோவிந்த் தனது நீண்டகால காதலியான இரஞ்சினி அச்சுதன் என்பவரை 4 திசம்பர் 2012 அன்று திருமணம் செய்து கொண்டார். மலையாள நடிகை ஐஸ்வர்யா இலட்சுமி இவரது உறவினராவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Let the music play". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/let-the-music-play/article6506833.ece. பார்த்த நாள்: 21 October 2014.
- ↑ "Govind Vasantha turns composer in K'wood". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/Govind-Menon-turns-composer-in-Kwood/articleshow/42870199.cms. பார்த்த நாள்: 21 October 2014.
- ↑ "", Anasuya (28 August 2014). "He rocks the Bridge". The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/music/peethambaran-thaikkudam-bridges-latest-sensation/article6360648.ece.
- ↑ "Govind P | Thaikkudam Bridge". Thaikkudam Bridge. http://thaikkudambridge.com/profile/govind-/.
- ↑ "Peethambaran | Thaikkudam Bridge". Thaikkudam Bridge. http://thaikkudambridge.com/profile/peethambaran/.