உள்ளடக்கத்துக்குச் செல்

கோங் யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோங் யூ
பிறப்புகோங் ஜி-சுள்
சூலை 10, 1979 (1979-07-10) (அகவை 44)
புசான்
தென் கொரியா
கல்விக்யுங் ஹீ பல்கலைக்கழகம்
(அரங்கு)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001-இன்று வரை

கோங் யூ (ஆங்கில மொழி: Gong Yoo) (பிறப்பு: ஜூலை 10, 1979) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் காபி பிரின்ஸ், பிக் போன்ற மிகவும் புகழ் பெற்ற தொடர்கள் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

2001-2004[தொகு]

இவர் க்யுங் ஹீ பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரி பட்டம் பெற்றார்.[1] 2000ஆம் ஆண்டு தனது முதல் வேலையாக எம்நெட் என்ற தொலைக்காட்சியில் காணொளி தொகுப்பாளராக பணிபுரிந்தார் அதை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஸ்கூல் 4 என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.[2] 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடக நடிகர், துணை நடிகர், இசை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் என பல துறைகளில் பணிபுரிந்தார்.

2005-2007[தொகு]

2005ஆம் ஆண்டு இவர் முதல் முதலில் காதநாயக்கான நடித்த தொடர் ஹலோ மை டீச்சர் ஆகும் இந்த தொடர் சியோல் ஒலிபரப்பு அமைப்பு என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை காங் ஹைஜின் நடித்து இருந்தார்.[3] இதை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு காதல் தொடரான ஒன் பைன் டே தொடரில் நடித்தார்.[4]

2007ஆம் ஆண்டு இவர் நடித்த நகைச்சுவை மற்றும் காதல் நிறைந்த காபி பிரின்ஸ் என்ற தொடர் மிகவும் வெற்றி பெற்றது, இந்த தொடருக்கு பிறகு இவர் மிகவும் புகழ் பெற்ற நடிகரானர்.[5][6] இந்த தொடர் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

2008–2015[தொகு]

இவர் சனவரி 14, 2008ஆம் ஆண்டு தனது தரைப்படை சேவைக்கு சேற்று டிசம்பர் 8, 2009 சேவை முடித்து மீண்டும் நடிப்புத்துறைக்கு வந்தார்.[7][8] இவர் தனது சேவையில் வானொலி தொகுப்பாளராக படைத்துறையில் பணியாற்றினார்.[9]

இவரின் மறுவருகையாக நடித்த திரைப்படம் பிண்டிங் மிஸ்டர்.டெஸ்டினி என்ற திரைப்படம் ஆகும்.[10][11] இந்த திரைப்படம் டிசம்பர் 9, 2010ஆம் ஆண்டு கொரியாவில் வெளியாக மிக பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பிக் என்ற நகைச்சுவை-காதல் தொடரில் நடித்தார்.[12] சைலென்சட், சஸ்பெக்ட் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.

2016-இன்றுவரை[தொகு]

2016ஆம் ஆண்டு இவர் நடித்த திரைப்படம் அ மேன் அண்ட் அ வுமேன் என்ற படம் ஆகும்,[13][14] இந்த திரைப்படத்தை தொடர்ந்து டிரெயின் டு பூசன் என்ற சோம்பை திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைத்தது.[15] தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஆண்டில் கார்டியன்: லோன்லி அண்ட் கிரேட் கோட் என்ற தொடரில் கோல்பினாக நடித்தார். இந்த தொடரும் வெற்றி பெற்றது. இந்த தொடரில் நடித்ததாற்காக பல விருதுகளும் வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "김희선·성유리·옥주현·공유·J-Walk·이선진…학사모 쓴 스타들". Kyunghyang Shinmun (in Korean). 2005. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. ""카메라 선물로 달력 만드는 이 남자, '공유'할 수 없나요?"". Oh My News (in Korean). 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 3. "SBS 새 수목드라마 '건빵선생과 별사탕'". Cine21 (in Korean). 12 April 2005. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 4. "MBC's New Mini-series "One Fine Day"". MBC Global Media. 14 February 2008.
 5. "'공유' 인생드라마 '커피프린스 1호점', 연속 방송". Insight (in Korean). 28 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 6. "'만인의 연인'으로 사랑받는~ 공유". The DongA Ilbo (in Korean). 20 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 7. "Gong Yoo to Leave For the Military Next Year". The Korea Times. 19 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.
 8. "Actor Gong Yoo Finishes 2-Year Military Service". The Korea Times. 8 December 2009.
 9. "'현역 제대' 공유 '홀가분하고 기분좋다'" (in ko). Asiae. http://www.asiae.co.kr/news/view.htm?idxno=2009120808080583569. 
 10. "Gong Yoo and Lim Soo-jung to star in new film "First Love"". Asiae. 8 April 2010.
 11. "Theatrical Releases in 2010: Box-Office Admission Results". Koreanfilm.org. Retrieved 2012-06-04.
 12. "Actors hope to score 'Big' in new show". Korea JoongAng Daily. 16 April 2012.
 13. "JEON Do-yeon and GONG Yoo Pair Up for LEE Yoon-ki". Korean Film Biz Zone. 12 August 2014.
 14. "Rom-com king takes on serious role". Korea JoongAng Daily. 25 January 2016.
 15. "Movie star Gong Yoo opens up about his own fears". The Korea Herald. 20 July 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்_யூ&oldid=3865834" இலிருந்து மீள்விக்கப்பட்டது