கொல்லக்காயில் தேவகி அம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவகி அம்மா
கொல்லக்காயில் தேவகி அம்மா நாரி சக்தி விருது பெற்றபோது
பிறப்புகொல்லக்காயில் தேவகி அம்மா
அண். 1934
முத்துகுளம்
தேசியம்இந்தியர்
பணிவனவர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது

கொல்லக்காயில் தேவகி அம்மா (Kollakkayil Devaki Amma)(பிறப்பு c. 1934 ) என்பவர் இந்திய விவசாயப் பெண் ஆவார். இவர் ஒரு வாகன விபத்து காரணமாக விவசாயம் செய்வதிலிருந்து காடு வளர்க்கத் தொடங்கினார். தற்போது 4.5 ஏக்கர் பரப்பளவில் 3,000க்கும் மேற்பட்ட மரங்களை இவர் வளர்த்துள்ளார். இவரது பணிக்காக நாரி சக்தி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தேவகி அம்மா 1934ஆம் ஆண்டு கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள முகத்துக்குளத்தில் பிறந்தார்.[1] தோட்டக்கலை மீதான இவரது ஆர்வம் இவரது தாத்தாவால் ஏற்படுத்தப்பட்டது. தேவகி அம்மா, ஆசிரியையாக இருந்த கோபாலகிருஷ்ண பிள்ளையை மணந்து, நெல் விளையும் வயல்களில் வேலை செய்து வந்தார்.[2][3] 1980ஆம் ஆண்டில், தேவகி அம்மா ஒரு பயங்கரமான வாகன விபத்தில் சிக்கி, மூன்று வருடங்கள் படுக்கையிலிருந்தார்.[2]

காடு[தொகு]

விபத்திலிருந்து மீண்ட பிறகு, தேவகி அம்மாவால் நெல் வயல்களில் வேலை செய்ய முடியாமல் போனதால், தனது வீட்டின் பின்னால் உள்ளத் தோட்டத்தில் மரங்களை நடத் தொடங்கினார். காலப்போக்கில் இவர் 4.5 ஏக்கர் நிலப்பகுதி காடாக மாறியது.[1] இதில் கிருஷ்ணானல், மஹோகனி, மா, கஸ்தூரி, பைன், நட்சத்திரம் மற்றும் புளி உட்பட 3,000 மரங்கள் உள்ளன.[2][1] அரிய தாவரங்களும் இவர் வளர்த்த காடுகளில் உள்ளன. மேலும் அமுர் வல்லூறு, ப்ளூத்ரோட்ஸ், நெடுங்கால் உள்ளான், ஈப்பிடிப்பான் மற்றும் மரகதப் புறாக்கள் போன்ற பறவைகளின் வாழிடமாக இந்த காடுகள் உள்ளன.[2][1][4] தேவகி அம்மா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் காட்டில் கால்நடைகளை வளர்த்தும், மழைநீரைச் சேகரித்தும் பணியாற்றி வருகின்றார்.[4]

விருதுகள்[தொகு]

தேவகி அம்மாவுக்கு ஆலப்புழா மாவட்டத்தின் சமூக வனவியல் விருதும், விஞ்ஞான பாரதியின் பூமித்ரா விருதும் வழங்கப்பட்டது. கேரள மாநிலம் இவருக்கு அரி வியக்தி விருதினையும் . தேசிய அளவில் இவர் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது[5] மற்றும் நாரி சக்தி விருதினையும் பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 A, Sam Paul (4 May 2019). "In 4.5 acres, she nurtures a dense forest" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/in-45-acres-she-nurtures-a-dense-forest/article27036160.ece. A, Sam Paul (4 May 2019). "In 4.5 acres, she nurtures a dense forest". The Hindu. Retrieved 9 January 2021.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Adil, Yashfeen (24 September 2019). "Kollakkayil Devaki Amma: The Woman Who Built A Forest". Feminism In India. https://feminisminindia.com/2019/09/25/kollakkayil-devaki-amma-the-woman-who-built-a-forest/. Adil, Yashfeen (24 September 2019). "Kollakkayil Devaki Amma: The Woman Who Built A Forest". Feminism In India. Retrieved 9 January 2021.
  3. "The woman who gave birth to a forest". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.
  4. 4.0 4.1 Karelia, Gopi (19 March 2019). "Working for 40 Years, Kerala's 85-YO Devaki Amma Grew a Forest All By Herself!". The Better India. https://www.thebetterindia.com/175425/kerala-devaki-amma-forest-nari-shakti-puraskar-inspiring-woman/. 
  5. "The woman who gave birth to a forest, Kollakkayil Devaki Amma, Alappuzha, Personal Forest, Attraction, Kerala Tourism". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.