கொரின் காப்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரின் லிசெட் காப்மேன்
கொரின் காப்மேன் (2014)
பிறப்பு10-சூலை-1959 (வயது 64)
வாசெனார், நெதர்லாந்து
தேசியம்டச்சு
படித்த கல்வி நிறுவனங்கள்லைடன் பல்கலைக்கழகம்
பணிதொல்பொருள் ஆய்வாளர்

கொரின் லிசெட் காப்மேன் (Corinne Lisette Hofman)[1] 2007 ஆம் ஆண்டு முதல் லைடன் பல்கலைக்கழகத்தில் கரீபியன் தொல்லியல் துறையில் டச்சு மொழி பேராசிரியராக உள்ளார். இவர் 1959 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதியன்று பிறந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு சுபினோசா பரிசை வென்றவர் ஆவார். [2]

காப்மேன் வாசெனாரில் பிறந்தார். [1] இவர் 1993 ஆம் ஆண்டு லைடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

தொல்லியல் இதழான ஆண்டிக்விட்டியின் ஆசிரியர் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

2013 ஆம் ஆண்டு காப்மேன் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமியின் மெரியன் பரிசை வென்றார். மெரியன் பரிசு சிறந்த பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு அறிவியலில் தொழிலைத் தொடர ஊக்குவிக்கிறது.[4]

2014 ஆம் ஆண்டில், டச்சு சுபினோசா பரிசை வென்ற நான்கு பேரில் ஒருவராக இருந்தார். 2.5 மில்லியன் யூரோ மானியம் பெற்றார். [5] 2015 முதல் காப்மேன் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமியில் உறுப்பினராக உள்ளார். [6] காப்மேன் 2016 ஆம் ஆண்டு அகாடமியா யூரோபியாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [7] 2018 ஆம் ஆண்டில் இவர் பிரிட்டிசு அகாடமியின் தொடர்புடைய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Corinne Lisette Hofman (Corinne)". Leiden University. Archived from the original on 28 November 2019.
  2. "Prof. C.L. (Corinne) Hofman". Netherlands Organisation for Scientific Research. 28 August 2014. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015.
  3. "Editorial Advisory Board". Antiquity. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  4. "KNAW Merianprijs voor Caribisch archeologe Corinne Hofman" (in Dutch). Royal Netherlands Academy of Arts and Sciences. 19 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "NWO Spinoza Prize 2014". Netherlands Organisation for Scientific Research. 11 September 2014. Archived from the original on 11 April 2020. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015.
  6. "Corinne Hofman". Royal Netherlands Academy of Arts and Sciences. Archived from the original on 23 August 2017.
  7. "Corinne Hofman". Academia Europaea. Archived from the original on 28 March 2019.
  8. "Record number of academics elected to British Academy". British Academy. 20 July 2018. Archived from the original on 16 December 2019.
  9. "Professor Dr Corinne Hofman FBA". British Academy. Archived from the original on 28 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரின்_காப்மேன்&oldid=3870851" இலிருந்து மீள்விக்கப்பட்டது