கொமொரோசு இடலைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Comoros olive pigeon
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கொலம்பா
இனம்:
C. pollenii
இருசொற் பெயரீடு
Columba pollenii
Schlegel, 1865

கொமொரோசு இடலைப் புறா (Comoro olive pigeon)(கொலம்பா பொலேனி) அல்லது கொமொரோசு இராமரோன் புறா அல்லது கொமொரோசு புறா என்றும் அழைக்கப்படுகிறது. இது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினம் ஆகும். இது கொமொரோசு மற்றும் மயோட்டேயில் வாழ்கிறது. வாழ்விட இழப்பு காரணமாக இது அரிதாகி வருகிறது.

விளக்கம்[தொகு]

மற்ற புறா இனங்களிலிருந்து எளிதில் வேறுபடுத்திக் காட்டக்கூடியது, கொமொரோசு இடலைப் புறா கொமோரோ தீவுகளில் உள்ள மிகப்பெரிய பறவையாகும்.[2] இது கருமையான இறகுகளைக் கொண்டுள்ளது. இளம்பருவப் புறாக்கள் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதேசமயம் வயதான புறாக்கள் மந்தமான பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். கொமொரோசு இடலைப் புறா "குக்-ஓஹூ ஹூ ஹூ" என்ற ஆழமான ஒலியினை உருவாக்குகிறது.[3]

வாழ்விடம்[தொகு]

இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகளாகும். மேலும் இது கொமொரோசு (குறிப்பாக கர்தாலா மலை ) மற்றும் மயோட்டேயில் காணப்படுகிறது. மயோட்டே பகுதிகளில் அதிக அடர்த்தியுடன் காணப்படுகிறது.[3]

நிலை[தொகு]

பெரும் கொமோரோவின் சில பகுதிகளில் உள்ளூரில் பொதுவானதாக விவரிக்கப்பட்டாலும், கொமொரோசு இடலைப் புறா பொதுவாகச் சிறிய எண்ணிக்கையுடன் காணப்படும் அரிதான பறவையாகும். அது எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் இது வாழும் வன வாழ்விடத்தை அகற்றுவதாகும். இந்தப் புறா வாழும் நான்கு தீவுகளிலும் வேட்டையாடப்படுகிறது. கொமொரோசு புறாக்களின் எண்ணிக்கையின் நிலை தெரியவில்லை. ஆனால் மொத்த மக்கள்தொகை 10,000க்கும் குறைவாக இருக்கலாம். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதனை "அச்சுறு நிலை அண்மித்த இனமாக" அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமொரோசு_இடலைப்_புறா&oldid=3929290" இலிருந்து மீள்விக்கப்பட்டது