கொத்திறைச்சி
Appearance
இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (ஏப்பிரல் 2024) |
கொத்திறைச்சி (sausage) என்பது இறைச்சியைப் பக்குவப்படுத்தி, பயன்படுத்தும் உணவு வகையாகும். இது பாரம்பரியாக பல நாடுகளில் உணவு பதப்படுத்தல் தொழிலாக உள்ளன.[2] வழமையாக இதனைத் தயாரிக்க பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, அல்லது கோழியின வளர்ப்புப் பறவைகள் இறைச்சி, உப்பு, மணப்பொருட்கள்(spices), இன்னும் சில செயற்கை வாசனையூட்டிகள், தானியங்கள், ரொட்டிப் பொடிகள் கலந்தும் தயாரிக்கப்படுகிறது. இப்பொருட்களுடன் நன்கு கொத்தப்பட்டு இறைச்சியானது, மனிதக் குடல் போன்ற தோற்றமுள்ள உறைக்குள் திணிக்கப்படுகிறது. இது பலவிதங்களில் சமைக்கப்படுகிறது. சில நாடுகளில் வெள்ளைப்பூண்டு, மிளகு, வைன் கலந்தும் தயாரிக்கப்படுகிறது.