கொட்டாரக்குளம் மகாகணபதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டாரக்குளம் மகாகணபதி கோயில் தென்னிந்தியாவின் கேரளாவில் கொல்லத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். இந்த கோயில் கொல்லம் மாநகராட்சியின் மையப் பகுதியில், கொல்லம் சிவில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1] [2]

மூலவர்[தொகு]

இங்கு மூலவர் விநாயகர் ஆவார். அப்பமும் மோதகம் கோயிலின் பிரசாதங்கள் ஆகும். நாகராஜா, சுவாமி ஐயப்பன் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளனர்.

திருவிழாக்கள்[தொகு]

விநாயக சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அஷ்ட திரவிய மகாகணபதி ஹோமம், கலசபூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன

தினசரி பூசை நேரங்கள்[தொகு]

பூஜைகள் நேரங்கள் (IST)
நிர்மால்ய தரிசனம் 05:00
கணபதி ஹோமம் 05:30
உஷா பூஜை / தீபாராதனை 07:00
நவக்கிரகஹோம பூசை ஆரம்பம் 08:00
சிரப்பு / நவக்கிரஹஹோம தீபாராதனை 10:00
நடை மூடல் 10:30
நடை திறப்பு 16:30
தீபாராதனை 19:00
சிறப்பு பூசை, தீபாராதனை 19:30
நடை மூடப்படல் 20:00

மேலும் பார்க்கவும்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Kerala / Kollam News : Vinayaka Chathurti festival to begin on August 30". பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  2. http://wikimapia.org/country/India/Kerala/Kollam/200/ Map of this Temple