கேரள மாநகராட்சிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள மாநகராட்சிகள் என்பது இந்தியாவின் மாநிலமான கேரளத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. கேரளாவில் ஆறு மாநகராட்சிகள் தற்போது உள்ளது. இவற்றுள் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி கண்ணூர் மாநகராட்சி ஆகும். இம் மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள்[தொகு]

கேரளத்தில்ல் ஆறு மாநகராட்சிகள் உள்ளன: தெற்கு கேரளத்தில் 2, நடு கேரளத்தில் 2, வடக்கு கேரளத்தில் 2.

Municipal Corporations in Kerala
எண். மாநகரம் மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு மக்கள் தொகை மக்களடர்த்தி/ச.கிமி பரப்பு(ச.கிமீ) படங்கள்
1 திருவனந்தபுரம் திருவனந்தபுரம் 1940 955,494 4,447 214.86 Thiruvananthapuram
2 கோழிக்கோடு கோழிக்கோடு 1962 609,214 5,149 118.312 Calicut
3 கொச்சி எர்ணாகுளம் 1967 601,574 7,040 94.88 Kochi, India
4 கொல்லம் கொல்லம் 2000 388,288 5,316 73.03 Kollam
5 திருச்சூர் திருச்சூர் 2000 315,596 3,111 101.42 Thrissur city
6 கண்ணூர் கண்ணூர் 2015 232,486 2,967 78.35 Kannur
Source:[1] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011


மேற்கோள்கள்[தொகு]

  1. "Hearty Welcome To 116th Meeting of SLBC, Kerala" (PDF). Govt. of India - Ministry of Housing and Urban Affairs. பார்க்கப்பட்ட நாள் 13 June 2020.