கேகன் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேகன் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
பிரிவு: முதுகெலும்பிகள்
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சையூரிடே
பேரினம்: பெட்டினோமிசு
இனம்: பெ. கெகெனி
இருசொற் பெயரீடு
பெட்டினோமிசு கெகெனி
ஜெண்டிக், 1888

கேகன் பறக்கும் அணில் (Hagen's flying squirrel)(பெட்டினோமிசு கெகெனி) என்பது இசுகுரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.[2]

வாழிடம்[தொகு]

இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தன் மற்றும் சுமத்ராவில் இது காணப்படுகிறது.[3]

விளக்கம்[தொகு]

மந்தமான சிவப்பு-பழுப்பு நிற ரோமங்களைக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான மரம் விட்டு மரம் சறுக்கிச் செல்லும் உயிரி ஆகும். கேகன் பறக்கும் அணில் உடலின் மேல் பகுதி பழுப்புத் தோலுடன் காணப்படும். இதன் அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் உள்ளது. சிவப்பு-பழுப்பு நிறத்தின் ஒரு பரந்த பட்டை இதன் கண்களுக்கு இடையிலிருந்து காதுகள் வரை நீண்டு காணப்படும்.[3]

இதன் காதுகளுக்கு முன்னும் பின்னும் நீண்ட, கடினமான முடிகள் உள்ளன. இதன் வால் அடர்த்தியான மயிருடன், மேலே கறுப்பு-சிவப்பு நிறமாகவும், கீழே கறுப்பு-சிவப்பு நுனிகளைக் கொண்டதாகவும் இருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gerrie, R.; Kennerley, R.; Koprowski, J. (2017). "Petinomys hageni". IUCN Red List of Threatened Species 2017: e.T16736A22241918. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T16736A22241918.en. https://www.iucnredlist.org/species/16736/22241918. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
  3. 3.0 3.1 3.2 World, Hagen’s Flying Squirrel, Petinomys hageni, Gliding Mammals of the. "Hagen's Flying Squirrel / Petinomys hageni". www.myym.ru (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-22.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேகன்_பறக்கும்_அணில்&oldid=3741305" இலிருந்து மீள்விக்கப்பட்டது