கெல்ம்கோட்சின் கட்டில்லா ஆற்றல்
வெப்பவியக்கவியலில் கெல்ம்கோட்சின் கட்டில்லா ஆற்றல் (Helmholtz free energy) அல்லது ஐயூபிஏசி பரிந்துரைப்பின் படி கெல்ம்கோல்ட்சின் ஆற்றல் (Helmholtz energy) என்பது ஒரு மூடிய ஒருங்கியத்தில் இருந்து மாறா வெப்பநிலையில் (சமவெப்பநிலை) பெறப்படும் பயன்படு ஆற்றல் அல்லது வேலை ஆகும். இது ஒரு வெப்பவியக்கவியல் நிலையாற்றல் ஆகும்.
கிப்சின் கட்டில்லா ஆற்றலை (கிப்சின் ஆற்றல்) அழுத்த மாற்றம் ஏற்படும் நிகழ்வுகளில் பயன்படுத்த இயலாது. எனவே அனைத்துப் பயன்பாடுகளிலும் கிப்சின் ஆற்றலைப் பயன்படுத்துவது சிரமம், அச்சமயங்களில் கெல்ம்கோட்சின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வெடிமருந்துகள் ஆராய்ச்சியில், அழுத்தம் மாற்றங்கள் எற்படும் என்பதால் பயன்படு ஆற்றலை அளவிட கெல்ம்கோட்சின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
கெல்ம்கோல்ட்சின் கட்டில்லா ஆற்றல் எர்மான் வொன் கெல்ம்கோட்சு எனும் செருமானிய இயற்பியலாளரால் முதன் முதலில் தரப்பட்டது. இது பொதுவாக A அல்லது F ஆகிய எழுத்துக்களால் கொடுக்கப்படுகிறது. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் A எழுத்தையே பரிந்துரைத்துள்ளது.[1]
வரைவிலக்கணங்கள்
[தொகு]கெல்ம்கோட்சின் ஆற்றல் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:[2]
இங்கு:
- - அக ஆற்றல் (அனைத்துலக முறை அலகுகள் (SI) அலகு: ஜூல்)
- - வெப்பநிலை (SI அலகு: கெல்வின்)
- - சிதறம் (SI அலகு: ஜூல் / கெல்வின்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gold Book. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம். எண்ணிம ஆவணச் சுட்டி:10.1351/goldbook. பார்க்கப்பட்ட நாள் 2012-08-19.
- ↑ Levine, Ira. N. (1978). "Physical Chemistry" McGraw Hill: University of Brooklyn