குழாய்வேலை
குழாய்வேலை (குழாய் சீர் செய்தல், Plumbing) என்பது ஒரு கட்டிடத்தில் நிறுவப்பட்டிருக்கும், குழாய்கள், வடிகால் உதிரிப்பாகங்கள், அடைப்பான்கள்(வால்வு), அடைப்பான்களின் கூட்ட அமைப்புகள், மற்றும் சாதனங்களை, குடிப்பதற்காகவும் வெப்பமூட்டவும் துவைப்பதற்காகவும், நீரை விநியோகம் செய்வதற்காகவும், தண்ணீரால் பரவும் கழிவுகளை அகற்றவும், சேர்த்து அமைக்கும் முறையாகும். மற்றும் குழாய்கள், பிளம்பிங் சாதனங்களை வைத்து செய்யப்படும் திறமையான வர்த்தகமும் பிளம்பிங்தான். ஒரு பிளம்பர் என்பவர், குழாய் அமைப்புகள், தண்ணீர் சூடேற்றிகள் மற்றும் பின்னோட்டத் தடுப்புகள் போன்ற ப்ளம்பிங் சாதனங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுபவர் அல்லது பழுது பார்ப்பவர் ஆவார். பிளம்பிங் தொழில்சாலையானது, சுத்தமான தண்ணீர் தேவை, சுகாதார சேகரிப்பு மற்றும் கழிவுகளின் போக்குவரத்து ஆகியவற்றால், ஒவ்வொரு வளர்ந்த பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை மற்றும் கணிசமான பகுதியாகும்.[1] "பிளம்பிங்", என்ற வார்த்தை, ஒரு காலத்தில் குழாய்கள் ஈயத்தில் இருந்து செய்யப்பட்டதால் "பிளம்பம்" என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.[2]
குழாய்வேலை பொதுவாக குடிநீர் வழங்கல் மற்றும் சாக்கடை முறைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்றால்,பிளம்பிங் முறை ஒரு கட்டிடத்திற்கு உதவுகிறது. மற்றவையோ ஒரு கூட்டமான கட்டிடங்களுக்கு சேவை செய்கின்றன.[3]
வரலாறு
[தொகு]பண்டைய நாகரிகங்கள் ஆன கிரேக்கம், ரோமன், பாரசீக, இந்திய, மற்றும் சீன நகரங்களில், அவர்கள் பொது குளியல் முறையை உண்டாக்கிய போது,எண்ணிக்கையில் அதிக மக்களுக்கு, குடிநீர், கழிவுகளின் வடிகால் தேவைப்பட்டதால், பிளம்பிங் தோன்றியது.[4] கி.மு 2700 வாக்கில், சிந்து சமவெளி நாகரிகத்தின் நகர்ப்புற குடியிருப்புகளில், அகலமான வட்டவடிவ பொருத்தும் பகுதியை(ஃ பிளான்ச் ) கொண்ட வரையளவுப் படுத்தப்பட்டபிளம்பிங் மண் குழாய்கள், கசிவை தடுக்க நிலக்கீலை பயன்படுத்துவது தோன்றியது.[5] ரோமானியர்கள், ஈய குழாய் எழுத்து பொரிப்பை தண்ணீர் திருட்டைத் தடுக்க பயன்படுத்தினார்கள்.
ரோமன் கால்வாய் மற்றும் ஈய குழாய்கள் பிளம்பிங் முறை காலத்தில் இருந்து பிளம்பிங் அமைப்புகளில் முன்னேற்றம் கிட்டத்தட்ட எந்த வளர்ச்சியும் இல்லாமல், மிகவும் மெதுவாக இருந்தது. 1800களில் நவீன மக்களடர்த்தி கொண்ட நகரங்கள் வளர்ச்சி அடையும் வரை பிளம்பிங் மிகவும் அரிதாகவே இருந்தது. இந்த காலகட்டத்தில்,பொது சுகாதார அதிகாரிகள், நோய்கள் தொற்றுவதைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த,மேலும் நல்லவிதமாக கழிவு நீக்கும் முறையை நிறுவ வேண்டி அழுத்தம் கொடுக்க தொடங்கினர். முன்னதாக, கழிவு அகற்றல் அமைப்பு என்பது வெறும் கழிவுகளை சேகரித்து, தரையிலோ அல்லது ஒரு ஆற்றிலோ கொட்டுவதாக இருந்தது. இறுதியில், தனியான, நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் முறை வளர்ச்சியானது திறந்த கழிவுநீர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குளங்கள் இல்லாமல் செய்தது.
மிக பெரிய நகரங்களில் இன்று, திட கழிவுகளை, நீரோடைகள் அல்லது மற்ற தண்ணீர் கொண்டு செல்லும் வழிகளில் அனுப்புவதற்கு முன், கழிவுநீர் சுத்திகரிக்கும் தொழிற்கூடங்களில், ஒரு பகுதி நீரை பிரித்து மற்றும் சுத்தம்செய்யும் பொருட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில்,1800 களின் பிற்பகுதியில் இருந்து 1960 வரை, குடிநீர் உபயோகத்திற்கு,திரட்டியுள்ள இரும்பு குழாய் பொதுவாக பயன்படுத்தப்பட்டது. அந்த காலத்திற்கு பிறகு, செப்பு குழாய் அதன் இடத்தை எடுத்துக்கொண்டது. முதலில் மென்மையான செப்பு, ஒளிவீசும் பொருத்துதல்களுடனும் பின்னர் பற்ற வைத்து ஒட்டி வைக்கப்பட்ட(சால்டரிங்) பொருத்துதல்களுடன் கூடிய திடமான செப்பு குழாய்களும் அதன் இடத்தை பிடித்துக் கொண்டன.
ஈயநச்சுவினால் விளையும் ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்ததால், இரண்டாம் உலக போருக்கு பின்னர், குடிநீருக்காக ஈயத்தை பயன்படுத்துவது தீவிரமாக சரிவை சந்தித்தது. இந்த நேரத்தில், ஈயகுழாய்களுக்கு பதிலாக, அதைவிட சிறந்த மற்றும் பாதுகாப்பான மாற்றாக செப்பு குழாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[6][7]
பொருட்கள்
[தொகு]புராதன காலத்தில், நீர் அமைப்புகள், பொதுவாக களிமண்,ஈயம், மூங்கில், மரக்கட்டை, அல்லது கல்லால் செய்யப்பட்ட குழாய்கள் அல்லது வாய்கால்களை பயன்படுத்தி, தண்ணீர் வழங்க, புவி ஈர்ப்பு விசையை நம்பியிருந்தன. எஃகு பட்டயமைப்பில் சுற்றி மூடப்பட்டிருக்கும் உள்ளீடற்ற மரத்துண்டுகள் குழாய்களை சேர்க்க, குறிப்பாக நீர் ஊற்றுகளுக்கு பயன்படுத்தப்பட்டன. இங்கிலாந்தில் நீர் விநியோகம் செய்ய மரத்துண்டுகள் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க நகரங்கள் உள்ளீடற்ற மரத்துண்டுகளை1700 களின் பிற்பகுதியில் இருந்து 1800களில் முழுவதும் பயன்படுத்த தொடங்கின.
இன்றைய நீர் விநியோக அமைப்புகள் உயர் அழுத்த பம்ப்புகள் மற்றும் குழாய்களை ஒரு பிணயமாக (நெட்வொர்க்) பயன்படுத்துகின்றன.அந்த கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் குழாய்கள் இப்போது, தாமிரம், பித்தளை, பிளாஸ்டிக் (குறிப்பாக பிஇஎக்ஸ் என்று அழைக்கப்படும் குறுக்காக இணைக்கப்பட்ட பாலிஎத்திலீன், 60% ஒற்றை குடும்ப வீடுகளில் உபயோகப்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது ) அல்லது மற்ற நஞ்சு இல்லாத பொருள்களால் செய்யப்படுகின்றன. 1986 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது வரை, குடிநீர் பிளம்பிங்களில் உருக்கி ஒட்ட வைக்க ஈயம் பயன்படுத்தப்பட்டாலும்,1930 களில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் ஈயத்தின் நச்சுத்தன்மை காரணமாக நவீன நீர் விநியோக குழாய்களில், பயன்படுத்தப்படுவது இல்லை.[8] வாய்க்கால் மற்றும் காற்றுக்கான சிறு துளை குழாய்கள், பிளாஸ்டிக், எஃகு இரும்பு, வார்ப்பு இரும்பு, அல்லது ஈயத்தால் செய்யப்படுகின்றன.[9][10][11]
பிளம்பிங்கில் நேரான வடிவ அமைப்புகள் "குழாய்கள்" என்று அழைக்கப்படுகின்றன. ஒரு குழாய்(பைப்) உருக்கி ஊற்றியோ வெல்டிங் மூலமோ செய்யப்படுகிறது, அதேசமயம் ஒரு குழாய்(ட்யூப்) அழுத்தி பிதுக்குவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. குழாய்(பைப்) சாதாரணமாக தடிமனான சுவர்கள் கொண்டு இருக்கும். மற்றும் மறையுடனோ வெல்டிங் மூலம் இணைத்தோ இருக்கும். குழாய்(ட்யூப்) மெல்லிய சுவர் கொண்டு இருக்கும். மற்றும் சிறப்பு நுட்பங்களான ப்ரேசிங், அழுத்தி சேர்ப்பது,க்ரிம்பிங் போன்றவற்றை கொண்டு இணைக்க தேவைப்படுகிறது. அல்லது பிளாஸ்டிக்களுக்கு கரைப்பான் வெல்டிங் தேவைப்படுகிறது. இந்த குழாய் இணைக்கும் நுட்பங்கள், குழாய் மற்றும் பிளம்பிங் பொருத்துதல்கள் பற்றிய கட்டுரையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
கூறுகள்/பாகங்கள்
[தொகு]நீளமான குழாய் அல்லது ட்யூப் அல்லாமல், வால்வுகள், 'எல்' பெண்டுகள், 'டீ' அமைப்பு மற்றும் யூனியன்ஸ் போன்ற குழாய் பொருத்துதல்கள் பிளம்பிங் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.[12] குழாய் மற்றும் பொருத்துதல்கள், குழாய் தொங்கிகள் மற்றும் பட்டைகள் மூலம் அதன் இடத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன. பிளம்பிங் பொருத்திகள், ஒரு கட்டிடத்தின் பிளம்பிங் அமைப்புடன் இணைக்கப்படகூடிய நீரை பயன்படுத்தி, பரி மாற்றத்தக்க சாதனங்கள் ஆகும். அவைகள் கட்டிடங்களின் ஓரளவு நிரந்தர பகுதிகளாக இருக்கின்றன. அதனால், அவைகள் பொருத்துதல்கலாக கருதப்படுகின்றன. அவைகள் பொதுவாக சொந்தமாக்கப்படுவதோ அல்லது தனியாக பராமரிக்கப்படுவதோ இல்லை. பிளம்பிங் பொருத்துதல்கள்/சாதனங்கள் மற்றும் இறுதி உபயோகிப்பாளர்களால் பார்க்கப்பட்டு, அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சில பிளம்பிங் பொருத்துதல்கள்/சாதனங்களின் உதாரணங்கள், தண்ணீர் மறைவை,(மேலும் கழிப்பறைகள் என்றும் அழைக்கப்படும்) சிறுநீர் கழிக்கும் தொட்டி,பைடேட்கள்,குளியல் தொட்டிகள், தூவாலைகுழாய்கள்,பயன்பாடு மற்றும் சமையலறை நீர் தொட்டிகள், குடிநீரூற்றுகள்,ஐஸ் தயாரிப்புகள், humidifiers,காற்றினால் சுத்தம் செய்யும் சாதனங்கள், நீரூற்றுகள், கண் சுத்தம் செய்யும் நிலையங்கள் போன்றவை ஆகும்.[13]
மேற்பூச்சுக்கள்(அடைப்பான்கள்)
[தொகு]மரை போடப்பட்ட குழாய் இணைப்புகள்,நூல் முத்திரை/அடைப்பு நாடா அல்லது குழாய் கசிவு தடுப்பு மருந்து கொண்டு அடைக்கப்படுகிறது. பல பிளம்பிங் சாதனங்கள்(பொருத்துதல்கள்) அவைகள் பொருத்தப்படும் பரப்புகளில்,பிளம்பர்களின் மக்கு கொண்டு அடைக்கப்படுகின்றன.[14]
உபகரணங்கள் மற்றும் கருவிகள்
[தொகு]பிளம்பிங் உபகரணங்கள், அடிக்கடி பொதுமக்களால் பார்க்கப்படாதவாறு சுவர்கள் பின்னால் அல்லது பயன்பாடு இடங்களில் மறைந்து இருக்கும் சாதனங்களையும் அடக்கியது ஆகும் . இது தண்ணீர் மீட்டர்கள்,பம்ப்கள், விரிவாக்க டாங்கிகள்,பின்னோட்டத்தை தடுக்கும் கருவிகள்,தண்ணீர் வடிகட்டிகள், புற ஊதாகதிர்களை நீக்கும் கருத்தடை விளக்குகள், நீர் இளக்கிகள்,தண்ணீர் சூடேற்றும் கருவிகள்,வெப்ப பரிமாற்றிகள், அளக்கும் கருவிகள், மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை உள் அடக்கியது ஆகும். சிறப்பு பிளம்பிங் கருவிகள்,குழாய் குறடு,ஃ பிளரிங் இடுக்கி, மற்றும் உருக்கி ஒட்ட வைக்கும் சால்டரிங் டார்ச், நெளி உண்டாக்கும் கருவிகள் ஆகியவற்றை அடக்கியது ஆகும். பிளம்பர்களுக்கு, அதிக ஆற்றலுடன் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்புதிய கருவிகள், உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, பிளம்பற்கள் மறைந்த கசிவை அல்லது பிரச்சினைகளை ஆய்வு செய்ய வீடியோ ஒளிப்படக்கருவிகள்]] நீர் தாரைகள், அகழி இல்லா சாக்கடை பைப்கள் மாற்ற உதவும் ஸ்டீல் கம்பி வடத்துடன் இணைக்கப்பட்ட உயர்அழுத்த நீரியல் பம்ப்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
முறைகள்
[தொகு]பிளம்பிங் அமைப்புகளின் அல்லது துணை அமைப்புகளின் முக்கிய வகைகள்:
- குளிர்ந்த குடிநீர் மற்றும் வெப்ப குழாய் நீர் விநியோகம்.
- சாக்கடை வடிகால் குழாய்கள்.
- நஞ்சாக்கும் முறைகள்.
- மழைநீர், மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வடிகால்.
- எரி வாயு குழாய்.
அவர்களின் சுற்று சூழல் நன்மை மற்றும் கணிசமான ஆற்றல் சேமிப்பிற்காக, சூடான தண்ணீர் வெப்ப மறுசுழற்சி அலகுகள் குடியிருப்பு கட்டிடங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. சுற்று சூழல் அக்கறை மற்றும் நீர் பற்றாக்குறைகள் காரணமாக, கிரே வாட்டர் மீட்பு மற்றும் சுத்திகரிப்பு முறைகளில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பிளம்பிங்கில் ஹைட்ரோனிக்ஸ் கூட அடங்கும். ஹைட்ரோனிக்ஸ் என்பது, வெப்ப, குளிர்ச்சி முறைகள் தண்ணீரை வெப்ப ஆற்றல் போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை அடக்கியது ஆகும். ஒரு பெரிய மாவட்ட சூடாக்கும் அமைப்புக்கு ஒரு உதாரணம் நியூயார்க் நகர நீராவி அமைப்பு ஆகும்.
தீ தடுத்தல்
[தொகு]தீ தடுப்பு அமைப்புகள் பெரும்பாலும் வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களில் பயன்படுத்தப்படும். அவை மிகவும் எளிய முறையாகவோ, அல்லது ஒரு ஒருங்கிணைந்த தீர்வாகவோ இருக்கலாம். அவை தீ உணரிகள் அல்லாது திரவங்கள்( தீ பரவும் வேகத்தை குறைக்கும், உயர்ந்த தீ தடுப்பு குணகம் கொண்ட பொருட்களின் பயன்பாடு இதில் அடங்கும்) தெளித்தல் மூலம் தீயை அடக்கி அணைக்கும் முறைகளை அடிப்படையாக கொண்டவை. இந்த பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு குறிப்பிட்ட தரங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன, உற்பத்தியாளர்கள் கட்டுருவாக்கப் பணியில்(உதாரணமாக, ஜூவாலையை நிதானப்படுத்தும் மின்சார வடகயிறு) உபயோகப்படுத்துவது இல்லாமல் சேவை புரிபவர்களும், முறைகளை செயல்படுத்துவதிலும், அந்த துறையில் ஒன்று சேர்ப்பதிலும் பயன்படுத்துகிறார்கள்.
சில நேரங்களில்,ஒரு குழாய் அல்லது மற்றொரு இயந்திர பகுதி, சிறப்பு தீ பரவாமல் தடுக்கும் பொருளால் அல்லது தீ பரவுவதை எதிர்க்கும் பொருளால் ஆன ஒரு சுவர் அல்லது தரையை ஊடுருவ வேண்டி இருக்கும்.அது, தீ தடுக்கும் சாதனங்களின் அசல் நிலை பாதுகாப்பை, பராமரிப்பின் போது மீட்க அல்லது, நிலைமைக்கு தகுந்தவாறு ஜூவாலை/புகை/சூடு பரவுவதை தவிர்க்க/நிதானப்படுத்த, வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலையை அடைய தேவைப்படுகிறது.
தீயணைப்பு/தீ தடுப்பு இந்த நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும், மேலும், எங்கு இயந்திர ஊடுருவிகள் தீ எதிர்ப்பு திறனுள்ள சுவர் மற்றும் தரை கூட்டங்கள்/சவ்வுகளின் குறுக்கே பயணிக்க முடியுமோ, அங்கு அது தேவைப்படுகிறது. இந்த வேலை பொதுவாக, உலக அளவில், காப்பு வர்த்தகம் மற்றும் / அல்லது சிறப்பு தீயணைப்பு துணை ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்யப்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ Plumbing: the Arteries of Civilization, Modern Marvels video series, The History Channel, AAE-42223, A&E Television, 1996
- ↑ "What Is The Origin Of The Word "plumbing"?". Pittsburgh Post-Gazette. May 12, 1942. http://news.google.com/newspapers?nid=1129&dat=19420512&id=w5RRAAAAIBAJ&sjid=DGoDAAAAIBAJ&pg=2414,1122522. பார்த்த நாள்: December 27, 2013.
- ↑ "Plumbing Needn't Tap Ire". The Bulletin. May 13, 1990. http://news.google.com/newspapers?nid=1243&dat=19900513&id=01oPAAAAIBAJ&sjid=cIYDAAAAIBAJ&pg=3665,4464504. பார்த்த நாள்: December 27, 2013.
- ↑ "Archaeologists Urge Pentagon To Keep Soldiers From Destroying". Herald-Journal. Mar 19, 2003. http://news.google.com/newspapers?nid=1876&dat=20030319&id=0jsfAAAAIBAJ&sjid=MNAEAAAAIBAJ&pg=6854,2226879. பார்த்த நாள்: December 27, 2013.
- ↑ Teresi et al. 2002
- ↑ Kavanaugh, Sean. "History of Plumbing Pipe and Plumbing Material". Archived from the original on 2014-10-08. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.
- ↑ "Public Notice .Lead Contamination Informative City Ok Moscow Water System". Moscow-Pullman Daily News. August 12, 1988. http://news.google.com/newspapers?nid=2026&dat=19880812&id=EZUrAAAAIBAJ&sjid=AdEFAAAAIBAJ&pg=3819,1428737. பார்த்த நாள்: December 27, 2013.
- ↑ Macek, MD.; Matte, TD.; Sinks, T.; Malvitz, DM. (Jan 2006). "Blood lead concentrations in children and method of water fluoridation in the United States, 1988-1994.". Environ Health Perspect 114 (1): 130–4. doi:10.1289/ehp.8319. பப்மெட்:16393670.
- ↑ Uniform Plumbing Code, IAPMO
- ↑ International Plumbing Code, ICC
- ↑ "Lead Pipe History". Archived from the original on பிப்ரவரி 26, 2014. பார்க்கப்பட்ட நாள் January 12, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Miscellaneous Valves". Archived from the original on ஏப்ரல் 26, 2009. பார்க்கப்பட்ட நாள் December 27, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Basic Plumbing Principles". The Evening Independent. November 10, 1926. http://news.google.com/newspapers?nid=950&dat=19261110&id=Y_NPAAAAIBAJ&sjid=1VQDAAAAIBAJ&pg=1477,3295499. பார்த்த நாள்: December 27, 2013.
- ↑ "Key To Pop-up Drain Is Fresh Plumber's Putty". Daily News. January 12, 2003. http://news.google.com/newspapers?nid=1696&dat=20030112&id=lg0bAAAAIBAJ&sjid=KUgEAAAAIBAJ&pg=6826,1218984. பார்த்த நாள்: December 27, 2013.